என் மலர்
நீங்கள் தேடியது "government and private schools"
- புதுவை மாநில மண்ணின் மைந்தர்கள் மட்டும் முழுவதுமாக பலனடைய தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது சமச்சீர் கல்வி திட்டத்தை கற்பிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு தமிழகத்தை பின்பற்றி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மேற்படிப்பில் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது மிகவும் வரவேற்கதக்கது.
இதற்காக புதுவை அரசை பாராட்டுகின்ற அதே வேளையில் அந்த 10 சதவீத இட ஒதுக்கீடு முழுவதும் புதுவை மாநில மண்ணின் மைந்தர்கள் மட்டும் முழுவதுமாக பலனடைய தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
மேலும் இதன் மூலமாக பயன்பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 7 வருடங்க ளாக அரசுப் பள்ளியில் படித்த வராக இருக்க வேண்டும் என்ற திருத் தத்தையும் கொண்டு வர வேண்டும்.அதேபோல் புதுவை மாநிலத் திற்கு என்று தனியான கல்வி வாரிய த்தை அரசு ஏற்படுத்த வேண்டும், மேலும் புதுவையில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஒரே முறையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது சமச்சீர் கல்வி திட்டத்தை கற்பிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எனவே புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தையும் பாரபட்சம் இன்றி ஒரே கல்வி திட்டத்திற்கு கொண்டு வர வேண்டும், அப்பொழுதுதான் மாநிலத்தின் அனைத்து மாணவர்களும் எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி பலனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






