என் மலர்
புதுச்சேரி
- 324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
- ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 6-ந் தேதி துறைரீதியிலான தேர்வு நடைபெற உள்ளது.
324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வுப்பாடத்தில் பழைய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது. இதை பாடத்திட்டமாக வைத்து படிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர். பாடத்திட்ட புத்தக நகலை கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
புதுச்சேரி:
வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்று விதி உள்ளது.
தமிழகத்தில் அந்த விதி முறைகள் கடைப்பிடிக்கப் படுகிறது. வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இயங்குகின்றன.
ஆனால் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற அளவில் உள்ளது. புதுவையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. மேலும் கல்வி நிறுவ னங்கள் மட்டும் வழிபாட்டு தலங்கள் அருகிலேயே சில மதுக்கடைகள் செயல்படு கின்றன.
குறிப்பாக முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் போதையில் தன்னையே மறந்து அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
அதோடு மது போதையில் ஒருவரை ஒருவர் பாட்டில் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொள்வதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அலறி அடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
மது பிரியர்கள் பொது இடத்தில் நின்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி சண்டை போட்டு
கொள்வதால் போக்கு வரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.
புதுவை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவது மதுக்கடைகள் என்றாலும் வரைமுறைக்குட்பட்டு மதுக்கடைகள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- மன்னார்குடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
- அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் சிங்கப்பூரில் கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சிங்கப்பூரில் உள்ள அரசு கட்டிடங்களை கான்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகளையும் சரவணன் செய்து வருகிறார். அங்கு மன்னார்குடியை சேர்ந்த குருநாதன் மகன் சரவணன் என்பவர் தமிழக வேலை ஆட்களை வைத்து சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பணி செய்து வருகிறார்.
இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டத்தைச் சேர்ந்த சரவணன் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணனுக்கு சென்ட்ரிங் காண்ட்ராக்டர் வேலையை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் மன்னார்குடி சரவணன் தமிழகத்திலிருந்து வேலைக்கு ஆட்கள் அதிகம் வந்திருப்பதால் சென்ட்ரிங் ஒப்பந்தத்துடன் கட்டிடத்தின் தரை அமைக்கும் பணியையும் அவரிடம் கேட்டு பணி செய்து வந்துள்ளார்.
ஒரு அரசு கட்டிடம் கட்டுமானத்தில் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் தரம் இல்லாமல் பணியை செய்ததால் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணனுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தனக்கு ஆன நஷ்டத்தை வழங்க வேண்டுமென மன்னார்குடி சரவணனுக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணன் சிங்கப்பூர் வக்கீல் வழியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சிங்கப்பூரில் இருக்கும் மன்னார்குடி சரவணன் தனது மைத்துனர் மகாதேவன் என்பவர் மூலம் ஒரு காரில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள சரவணன் வீட்டுக்கு 5 பேர் வந்தனர். அப்போது மகா தேவனுடன் வந்த ஒருவர் போலீஸ்காரர் எனக் கூறி சரவணன் வீட்டுக்குள் வந்து பேசி கொண்டு இருந்த போது மகாதேவன் மற்றும் போலீஸ்காரர் என கூறியவர் இருவரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி உமா மகேஸ்வரியையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து க் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனைப் பார்த்து சரவணனும் அவரது மனைவியும் வலி தாங்காமல் கதறிய பொழுது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த கும்பலை விரட்டினர்.
ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டது. கும்பல் தாக்கியதில் சரவணனின் முகம், கை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. பின்னர் அவரையும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தம்பதியை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மன்னார்குடி கும்பல் மீது வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தல், செல்போனை பறித்து செல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகாதேவன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
- மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
- புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கதிர்காமம் அருகே தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேன்மொழி. கடந்த சில நாட்களாக கணவன்-மனை விக்கி டையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் அவர்களிடைேய குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேர்வர்களின் பட்டிலைய தயார் செய்து அதன் முடிவுகளை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வெளியிட்டார்.
- சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் பல துறைகளில் காலியாக இருந்த 116 யூ.டி.சி. பணியிடங்களுக்கான போட்டி தேர்வு கடந்த 23-ந் தேதி நடந்தது.
விண்ணப்பித்தவர்களில் 38 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதினர். இவர்களின் விடைத்தாள் கணினி மூலம் திருத்தப்பட்டது. பின்னர் இடஒதுக்கீடு வாரியாக வெற்றி பெற்ற தேர்வர்களின் பட்டிலைய தயார் செய்து அதன் முடிவுகளை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வெளியிட்டார்.
பொது பிரிவில் சவுந்தர்யா 62.50 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். ஆனந்த் 61.25 மதிப்பெண்ணுடன் 2-ம் இடம், பிரசன்னகுமார் 60.50 மதிப்பெண்ணுடன் 3-ம் இடம் பிடித்தார்.
எம்.பி.சி. பிரிவில் மோகன்ராஜ் 55.25, ஓ.பி.சி. பிரிவில் கார்த்திகேயன் 51.50, எஸ்.சி. பிரிவில் அருள் அழகன் 51.25, எஸ்.டி. பிரிவில் அருணா 27.25, பி.டி. பிரிவில் ஹரிகரன் 48.75, முஸ்லிம் பிரிவில் முகமது சாரூக் 44.75, மீனவர் பிரிவில் குமாரவேல் 49, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் சூர்யா 51.25 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்துள்ளது.
- அதிகாரி ரித்தோஷ்சந்திரா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி, உபகரணங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
- பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங், அஸ்வினி, கீர்த்தனா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 6-வது தேசிய கேடட் தேக்வாண்டோ குறுகி மற்றும் பூம்சே போட்டிகள் 27 -ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கே.டி.சிங் பாபு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இப்போட்டிக்கு, புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் அமலோற்பவம் பள்ளி பிஸ்வநாத் பியூரா, கேந்திர வித்யாலயா பள்ளி லக்ஷன்வெங்கட், ஏகலைவா பள்ளி நிஷர்ஷன், ஆதித்யா வித்யாஸ்ரமம் பள்ளி ஷரோன் தீப், வித்யா நிக்கேதன் பள்ளி கோகுல்ராஜா, விவேகானந்தா பள்ளி சஞ்சீவி, ரிதிவ்சந்திரா, வாசவி பள்ளி ஜெயதேவ், செவன்த்டே பள்ளி திவ்யா, சவரிராயலு நாயக்கர் பள்ளி ரீனா ஜோஸ்பின், புளுஸ்டார் பள்ளி பொழிலன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இவர்கள், தலைமை பயிற்சியாளர் நந்தகுமார், பயிற்சியாளர் மதன், மேலாளர் தேவி மற்றும் நடுவர்களாக தக்ஷிணபிவுடன் லக்னோ செல்கின்றனர்.
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் புறப்பட்ட மாணவர்களை தேக்வாண்டோ விளையாட்டு சங்கநிறுவனர் ஸ்டாலின், தீயணைப்பு துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி, உபகரணங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மூர்த்தி, ஆறுமுகம், பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங், அஸ்வினி, கீர்த்தனா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 6,7-ந் தேதிகளில் புதுவைக்கு வருவதாக கூறப்பட்டது.
6-ந் தேதி சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதனால் 7, 8-ந் தேதிகளில் புதுவைக்கு ஜனாதிபதி வருகிறார். புதுவை கடற்கரை சாலை நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, ஜிப்மர் கலையரங்கில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
8-ந் தேதி ஆரோவில் செல்கிறார். இடையே மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி அவர் தங்குமிடம், செல்லும் பாதைகள், விழா இடங்களில் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி. சீனிவாஸ் தலைமையில் ஆலோ சனைக்கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரஜேந்தி ரகுமார் யாதவ், அனிதாராய், நாராசை தன்யா, சூப்பிரண்டுகள் செல்வம், மாறன், மோகன்குமார், ரவிக்குமார், சுவாதிசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.
- நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான உறுதிமொழி ஏற்றனர்.
- மாணவர்களும் கவுண்டன் பாளையம் பஞ்சா யத்தாரும் இணைந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நினைவை போற்றும் வகையில் மற்றும் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களும் கவுண்டன் பாளையம் பஞ்சா யத்தாரும் இணைந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது "பஞ்ச் பிரான்" தீர்மானங்களை வகுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி வளாகத்தில் நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளி துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
- கூட்டத்தில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- 600-க்கும் மேற்பட்டோர் உதவியாளர் பணியிலிருந்து யூ.டி.சி.யாக பதவி இறக்கம் செய்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டத்துக்கான அவசர கூட்டம் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.
பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் திடீர் கொள்கை மாற்றத்தால் பல வழக்குகள் நாளுக்கு நாள் கோர்ட்டுக்கு வருகிறது.
இதனால் 600-க்கும் மேற்பட்டோர் உதவியாளர் பணியிலிருந்து யூ.டி.சி.யாக பதவி இறக்கம் செய்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றவர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். எனவே இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
- மின்துறை அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
- கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை மின்துறை அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்த்தாய் நகர் பகுதியில் உள்ள புறா குளம், லால் பகதூர் சாஸ்திரி வீதி, மகாத்மா காந்தி வீதி பகுதியில் உள்ள ஐ-மாஸ் விளக்கை சரி செய்ய வேண்டும். அங்கு கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் அங்கு உள்ள காந்தி வீதி, நேதாஜி நகர் 2 ரங்கநாதன் வீதி, அழகர்சாமி வீதி சந்திப்பில் எரியாத தெருவிளக்குகளை சரி செய்வதோடு அப்பகுதியில் புதிதாக கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை ஏற்று கொண்ட மின்துறை அதிகாரி இதனை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காளப்பன், ராகேஷ் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மின்துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்க, அதை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து மத்திய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய பம்ப் செட்டுக்கு மின் மீட்டர் பொருத்தும் பணியை அரசு செய்து வருகிறது. புதுவை அரசும், மத்திய பா.ஜனதா அரசும் விவசாயிகளின் மின்சார உரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாயிகளுக்கு தனி மின்தடம் என்பதும் அவர்களை கடுமையாக பாதிக்கும். பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.
எனவே முதல்-அமைச்சர் மவுனம் கலைந்து பம்பு செட்களுக்கு மின்மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும். மின்துறை தனியார்மய நடவடிக்கை அனைத்தையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி, தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மாணவர்களின் மன அழுத்தம் போக்க புதுவை கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
மாணவர்களின் பாடச்சுமை, மன அழுத்தம் குறைக்க ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லா தினமாக (நோ பேக் டே) கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லாத தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கலை, வினாடி-வினா, விளையாட்டு, கைவினைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
எனவே புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். இந்த தினத்தில் மாணவர்களை புத்தகப்பை கொண்டுவர கட்டாயப்படுத்தக்கூடாது. இதை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






