என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UDC"

    • தேர்வர்களின் பட்டிலைய தயார் செய்து அதன் முடிவுகளை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வெளியிட்டார்.
    • சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல துறைகளில் காலியாக இருந்த 116 யூ.டி.சி. பணியிடங்களுக்கான போட்டி தேர்வு கடந்த 23-ந் தேதி நடந்தது.

    விண்ணப்பித்தவர்களில் 38 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதினர். இவர்களின் விடைத்தாள் கணினி மூலம் திருத்தப்பட்டது. பின்னர் இடஒதுக்கீடு வாரியாக வெற்றி பெற்ற தேர்வர்களின் பட்டிலைய தயார் செய்து அதன் முடிவுகளை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வெளியிட்டார்.

    பொது பிரிவில் சவுந்தர்யா 62.50 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். ஆனந்த் 61.25 மதிப்பெண்ணுடன் 2-ம் இடம், பிரசன்னகுமார் 60.50 மதிப்பெண்ணுடன் 3-ம் இடம் பிடித்தார்.

    எம்.பி.சி. பிரிவில் மோகன்ராஜ் 55.25, ஓ.பி.சி. பிரிவில் கார்த்திகேயன் 51.50, எஸ்.சி. பிரிவில் அருள் அழகன் 51.25, எஸ்.டி. பிரிவில் அருணா 27.25, பி.டி. பிரிவில் ஹரிகரன் 48.75, முஸ்லிம் பிரிவில் முகமது சாரூக் 44.75, மீனவர் பிரிவில் குமாரவேல் 49, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் சூர்யா 51.25 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்துள்ளது.

    ×