என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
துப்புரவு பணிக்கு பணம் கேட்போர் மீது நடவடிக்கை
- ஜிப்மர் இயக்குனரிடம் தொழிற்சங்கத்தினர் மனு
- ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரிடம் சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் ரமேசு, முருகையன், விஜயன், ஜானகிராமன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில தலைவர் மோதிலால் ஆகியோர் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு பணிபுரிந்து வந்தவர்களுக்கு பணி மறுப்பது வேதனைக்குரியது. பணியில் சேர ரூ.1 லட்சம் வரை பணம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.






