என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resource Department"

    • மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.
    • புதுச்சேரி மனித வள வட்டார துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், பொருளாளர் சாய் அருண் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி, ஜூலை.28-

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), புதுச்சேரி மனித வள வட்டாரம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

    எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் புதுச்சேரி மனித வள வட்டார தலைவர் டட்லி டக்ளஸ், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் புதுச்சேரி மனித வள வட்டார துணை தலைவர் ஹரிஹர பாண்டியன், பொருளாளர் சாய் அருண் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×