என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சாரதா கங்காதரன் கல்லூரியின் ஆங்கிலத்துறை சிறப்பு பேராசிரியர் தாஸ் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.
    • விதமாக ஸ்டார் ஐகான் அவார்ட்-2023 என்ற சான்றிதழை கல்லூரியின் துணைத்தலைவர் பழனி ராஜா பெற்றுக்கொண் டார்.

    புதுச்சேரி:

    சாரதா கங்காதரன் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத்துறை, வாகை தமிழ்ச்சங்கம் பதிப்பகம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுடன் இணைந்து பல்துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கான தேசிய கருத்தரங்கு நடந்தது.

    சாரதா கங்காதரன் கல்லூரியின் துணைத் தலைவர் பழனி ராஜா கருத்த ரங்கை தொடங்கி வைத்தார். சட்டீஸ்கர் பல்கலைக்கழ கத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் கரிமா திவான், பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீ ஜகத்குரு பால கங்காதர காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஸ்டடிசின் பேராசிரியை ஸ்ரீ ரஞ்சனி, விஜயவாடா வின் எஸ்.ஆர்.கே. இன்ஸ் டிட்யூட் ஆப் டெக்னால ஜியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் மைத்ரேயி மற்றும் கேரளாவின் மெஸ் அஸ்மாபி கல்லூரியின் ஆங் கிலத்துறை துணை பேராசிரியர் ரேஷ்மி, சாரதா கங்காதரன் கல்லூரியின் ஆங்கிலத்துறை சிறப்பு பேராசிரியர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜிப்மர் மருத்துவமனையின் கார்டியாலஜி துறையை சார்ந்த இளவரசி சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தர மான ஆய்வு கட்டுரைகள் பதிவு பெற்றமைக்கான சாதனை சான்றிதழை முதுகலை ஆங்கிலத் துறை தலைவர் காணிக்க பிரியாவுக்கு வழங்கப்பட் டது.

    இதனை பாராட்டும். விதமாக ஸ்டார் ஐகான் அவார்ட்-2023 என்ற சான்றிதழை கல்லூரியின் துணைத்தலைவர் பழனி ராஜா பெற்றுக்கொண் டார்.

    சாரதா கங்காதரன் கல்லூரி முதல்வர் உதய சூரியன் கருத்தரங்கை நடத்திய அனை வரையும் பாராட்டி னார். கணினித் துறை தலைவர் பேராசிரி யர் நித்யா நன்றி கூறினார்.

    • மருத்துவ துறை மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
    • பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் சந்திர சேகர் உத்தரவின் பேரில் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை இணைந்து இலவச மருத்துவ முகாம் சங்கரன் பந்தல், அல் அமான் (கலை மகள்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    முகாமிற்கு காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி டீன் பேராசிரியர் குணசேகரன், பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் ரம்யா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இதில் அனைத்து மருத்துவ துறை மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

    இந்த முகாமில் சுமார் 300 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் சந்திரசேகர் கூறியதாவது:-

    இந்த கல்லூரியின் மருத்துவக் குழுக்களை கொண்டு பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.

    நோயாளிகள் புதிய தொழில் நுட்பத்துடன் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சால் பரபரப்பு
    • முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன் குமார்,

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    முன்னாள் தலைவர் தாமோதரன், மூத்த நிர்வாகி இளங்கோ, அசோக் பாபு எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் தங்க விக்ரமன், ;இளங்கோ, செல்வம் ரவிச்சந்திரன, அருள்முருகன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், நாகராஜ், லதா ஜெயந்தி, சகுந்தலா, மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி பட்டியலின தலைவர் தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஓ.பி.சி அணி தலைவர் சிவகுமார், மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி மற்றும் மாநில பிரிவு அமைப்பாளர்கள். மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் உள்ள செல்வாக்கு மிக்க வர்களை நேரில் சந்தித்து 9 ஆண்டுகால பிரதமரின் சாதனை புத்தகத்தை வழங்கி அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் 5-க்கும் மேற்பட்ட தாமரை சின்னங்கள் வரைய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் நீண்ட கால தேவைகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு சக்தி கேந்திரத்திலும் அனைத்து நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி சாதனை தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும்.

    கட்சி நிர்வாகிகளின் குறை களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்து மாநில நிர்வாகிகள் தலைமைக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

    புதுவையில் முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    கூட்டணியில் அ.தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தலு க்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தேர்தலில் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு என கூறாமல் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக்கு நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நமச்சிவாயத்தின் பேச்சு தேர்தலில் பா.ஜனதாதான் போட்டியிட உள்ளதை உறுதி செய்வதாகவும் உள்ளது. இது கூட்டணிக்குள் சலசலப்பையும் உருவாக்கி உள்ளது.

    • புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம்.
    • படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் வருகிறது. அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை முகத்துவாரத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம். இவர்கள் முறையான படகு சவாரியை செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு கடந்த சில வருடங்களாக உள்ளது.

    இந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை, அங்குள்ள மீனவர்கள் தங்கள் பைபர் படகில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மிகவும் பழமை வாய்ந்த நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயஆண்டு பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு திருப்பலி நடத்தினார்.தொடர்ந்து கொடி தேவாலயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஊர்வலமாக வந்தது. அதனை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு ஆசிர்வாதம் செய்தார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    விழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் நாள்தோறும்  என இருவேளைகளிலும் சிறப்பு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி பெறுகிறது. இதில் பங்குதந்தைகள், அருட்தந்தைகள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா ஆடம்பர தேர்பவனி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் பாளையங்கோட்டை ஆயர் ஜூடு ஜெலால்ட் பால்ராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தையர்கள் பெர்க்மான்ஸ் பீட்டர், ஜான்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, விவசாய உழவு பணிக்கான டிராக்டரை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலம் விவசாய உழவு பணிக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வாங்கப்பட்டது. அந்த டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்பகுதி விவசாயிகள் புதிதாக டிராக்டர் வாங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியின் பெயரில், மூன்று பேர் கொண்ட ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி நிதி உதவி மூலமாக 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று பாகூரில் நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் மதி ( எ) பொன்னம்பலம், குமாரக்கிருஷ்ணன், ஹரிலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்றது.
    • பல்கலைக்கழக மாணவ- மாணவியர்களுகான பேச்சு ப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா வருகிற 20-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி- கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவியர்களுகான பேச்சு ப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டிகள், "ராஜிவ் காந்தி- இந்தியாவின் ஒளி விளக்கு" என்கிற தலைப்பின் கீழ், 6,7,8-ம் வகுப்பு; 9,10-ம் வகுப்பு; பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர் என 4 பிரிவுகளில், கிழக்குக் கடற்கரை சாலையில், சிவாஜி சிலை அருகில், உள்ள சிவா விஷ்ணு மண்ட பத்தில் 13-ந் தேதி காலை 9 மணியளவில் போட்டி நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு பிரிவின் கீழும் வெற்றி பெறும் முதல் 3 மாணவ- மாணவியருக்கும் முறையே முதல் பரிசு, 2-ம் பரிசு மற்றும் 3-ம் பரிசு என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் போட்டிக்கான விண்ணப்பங்களை புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் அல்லது லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்..

    போட்டிக்கு விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வருகிற 10-ந் தேதி வேண்டிய கடைசி நாளாகும்.

    போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெரும் மாண-மாணவியருக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேலாக பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கான பரிசுகள் 20-ந் தேதி லாசுப்பேட்டைத் தொகுதியில் நடைபெறும் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் வழங்கப்படும்.

    போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ- மாணவியருக்கும் நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி அறிக்கையில் கூறியுள்ளார்.

    • போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    • நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். நாளை ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சி லேட்டர் என்று உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாகி இறங்கியுள்ளனர். 1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    மேலும் புதுவை வான்பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

    மேலும் சாலைகளில் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் படி ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணி, உள்ளாட்சித்துறையினர் அகற்றி வருகின்றனர்.

    புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    • சிந்தனையாளர் பேரவை கலெக்டரிடம் மனு
    • ஒரு அழகிய சின்னஞ்சிறு நகரம். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பணிகள் வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஒரு அழகிய சின்னஞ்சிறு நகரம். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பணிகள் வருகின்றனர். இதற்கிடையே புதுவை நகரப்பகுதிகளில் ஆங்காங்கே கட்அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்கள் வைக்க சென்னை ஐக்கோர்டு தடைவிதித்துள்ளது.

    ஆனால் இது புதுவையில் மீறப்படுகிறது. எனவே நகரப்பகுதிகளில் வைக்க ப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். மேலும் நகராட்சி சட்டப்படி பேனர்கள் வைக்கப்பட்டால் அதுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால் வருமானம் இல்லாமல் தடுமாறும் புதுவை அரசுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந் தது.
    • கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மதகடிப்பட்டு கலிதீர்த் தாள்குப்பம் எம்.ஐ.டி கல் லூரி மைதானத்தில் டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது.

    டி.சி.எஸ் நிறுவன மனி தவளத்துறை நிர்வாகிகள் மற்றும் எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந்தது.

    இதில் எம்.ஐ.டி. அணி வெற்றி பெற்றது. பின்னர் எம்.ஐ.டி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன்,செயலாளர் நாராயண சாமி கேசவன் ஆகியோர் வழிகாட்டு தலின்படி கல்லூரி முதல்வர் மலர்க்கண் தலைமையில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் விளையாட்டில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    எம்.ஐ.டி கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • டாக்டரை தாக்கியதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. இவரது 11 மாத பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. குழந்தையை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    முன்னதாக குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்பு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குழந்தையை பார்க்க ஜிப்மருக்கு வந்த தியாகுவின் உறவினர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் உடல்நிலை மோசமானதாக கூறி அங்கிருந்த டாக்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் டாக்டரை தாக்கினர். இதனால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவலாளிகள் தியாகுவின் உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • துணை ராணுவ படை வருகை
    • புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சென்னை வருகிறார்.

    சென்னையில் ராஜ்பவனில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து ராஜ்பவனில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை இரவும் ராஜ்பவனில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதியை வரவேற்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் செல்கிறார். ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார். அதோடு, தேசிய ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை கொண்ட மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் அவர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மாலையில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கைவினை பொருட்களை பார்வையிட்டு, கலைஞர்களோடு உரையாடுகிறார்.

    அங்கிருந்து திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு வழிபடுகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்கிறார். பின்னர் நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஆரோவில் செல்கிறார். அங்கு மாத்ரி மந்திரை பார்வையிடுகிறார். அதன் பின் ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சி, அரவிந்தரின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அங்கேயே மதிய உணவு அருந்துகிறார்.

    ஆரோவில்லில் மாலை 4 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜனாதிபதி அங்கிருந்து நேராக புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி காரில் செல்லும் சாலைகளின் இருபுறமும் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து புதுவைக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் ஜனாதிபதி பங்கேற்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தமிழகம், புதுவை போலீசாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.  மாலையிலும், இன்று காலையிலும் ஜனாதிபதி வருகையையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    11 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஜிப்மர் வரை காரில் செல்வதுபோல ஒத்திகை பார்த்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. விழா முடிந்து கடற்கரை சாலைக்கு வருவது, கவர்னர் மாளிகை செல்வது ஆகியவற்றையும் ஒத்திகை நடத்தினர்.

    புதுவை டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் தலைமையில் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் துணை ராணுவ படையின் 2 கம்பெணி படையினர் பாதுகாப்பு பணிக்காக புதுவை வந்துள்ளனர்.

    ×