என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 13-ந் தேதி கட்டுரை போட்டி
- ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்றது.
- பல்கலைக்கழக மாணவ- மாணவியர்களுகான பேச்சு ப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா வருகிற 20-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி- கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவியர்களுகான பேச்சு ப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டிகள், "ராஜிவ் காந்தி- இந்தியாவின் ஒளி விளக்கு" என்கிற தலைப்பின் கீழ், 6,7,8-ம் வகுப்பு; 9,10-ம் வகுப்பு; பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர் என 4 பிரிவுகளில், கிழக்குக் கடற்கரை சாலையில், சிவாஜி சிலை அருகில், உள்ள சிவா விஷ்ணு மண்ட பத்தில் 13-ந் தேதி காலை 9 மணியளவில் போட்டி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பிரிவின் கீழும் வெற்றி பெறும் முதல் 3 மாணவ- மாணவியருக்கும் முறையே முதல் பரிசு, 2-ம் பரிசு மற்றும் 3-ம் பரிசு என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் போட்டிக்கான விண்ணப்பங்களை புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் அல்லது லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்..
போட்டிக்கு விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வருகிற 10-ந் தேதி வேண்டிய கடைசி நாளாகும்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெரும் மாண-மாணவியருக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேலாக பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கான பரிசுகள் 20-ந் தேதி லாசுப்பேட்டைத் தொகுதியில் நடைபெறும் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ- மாணவியருக்கும் நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி அறிக்கையில் கூறியுள்ளார்.






