என் மலர்
புதுச்சேரி

டி-10 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற எம்.ஐ.டி கல்லூரி அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
டி-10 கிரிக்கெட் போட்டி எம்.ஐ.டி கல்லூரி வெற்றி
- எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந் தது.
- கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மதகடிப்பட்டு கலிதீர்த் தாள்குப்பம் எம்.ஐ.டி கல் லூரி மைதானத்தில் டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது.
டி.சி.எஸ் நிறுவன மனி தவளத்துறை நிர்வாகிகள் மற்றும் எம்.ஐ.டி கல்லூரி பேராசிரியர்கள் அணிகள் இடையே போட்டி நடந்தது.
இதில் எம்.ஐ.டி. அணி வெற்றி பெற்றது. பின்னர் எம்.ஐ.டி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன்,செயலாளர் நாராயண சாமி கேசவன் ஆகியோர் வழிகாட்டு தலின்படி கல்லூரி முதல்வர் மலர்க்கண் தலைமையில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் விளையாட்டில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
எம்.ஐ.டி கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






