என் மலர்
புதுச்சேரி
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
- வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை சாமிநாதப் பிள்ளை வீதியில் முத்து மாரியம்மன் 32- ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஆடி மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதனை தொடர்ந்து சக்தி கரகத்தோடு, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக முதலியார் பேட்டையில் உள்ள பல வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செடல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜி என்ற பாவாடைராயன், சங்கரய்யா, ராமதாஸ், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
புதுச்சேரி:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
இதனை நாடு முழுவதும் வரவேற்று காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
கொண்டாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் செந்தில் குமார், ராஜா, ஜம்புலிங்கம், வெங்கட், முத்துராமன், குருசாமி மன்னநாதன், முகுந்தன்,
இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன், மாநில பொதுச் செயலாளர் சத்ய நாராய ணன், பிரியா ஊடகத்துறை பொறுப்பாளர்கள் தமிழரசன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா அரவிந்தம், மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், துணை தலைவர் அஷ்ரப் அலி, அன்பரசன்,
பொது செயலாளர் லோகநாதன், தொகுதி தலைவர் கண்ணன், இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வினோத், சண்முகம்,சுனில், கீர்த்தி, மாறன், மதன், ஹரிஷ், சஞ்சய், குணால், ஜீவரத்தினம், அபி மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏழை எளியவர்களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கப்ப ட்டது. ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்க சாமியின் பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் தொகுதி யில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டா டப்பட்டது.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்ட பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை சபாநாயகர் பக்த வச்சலம் தலைமை தாங்கினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ேஜ. ஜெயபால், காங்கிரஸ் பொருளாளர் வேல்முருகன், முன்னாள் சேர்மன் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பொதுப்ப ணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அரசு கொறடா ஏ. கே .டிஆறுமுகம் கே.எஸ்.பி. ரமேஷ்
எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். முன்னதாக தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நேற்று காலை 8 மணி அளவில் வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காலை 9 மணியளவில் காமராஜர் நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி, இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.
மேலும் கலைமாமணி விருது பெற்ற 28 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. காந்திராம் நற்பணி மன்றம் மூலமாக நடைபெற்ற இலவச அரசு வேலைக்கான பயிற்சி வகுப்பு எடுத்த 20 ஆசிரியர்க ளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
மேலும் மாடு வளர்ப்ப வர்களுக்கும் மீனவர்களு க்கும் வங்கியின் மூலமாக கடன் உதவி பெறுவதற்கான
ஆணை 50 பேருக்கு வழங்கப்பட்டது. சிறு தொழில் செய்யும் ஏழை எளியவர்களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கப்ப ட்டது. ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் என். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் நன்றி கூறினார்.
- திடீரென மின்துறை தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியினை தொடங்கி உள்ளனர்.
- பிரச்சார பயணம் திருபுவனை மற்றும் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அளவில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளுக்கு மின்சாரம் இலவசமாக அரசு வழங்கி வரும் நிலையில், திடீரென மின்துறை தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியினை தொடங்கி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில விவசாய சங்கத்தின் சார்பில் மதக டிப்பட்டு 4 முனை சந்திப்பி லிருந்து. மோட்டார் சைக்கிள் பிரச்சார பயணம் நடை பெற்றது.
இந்த பிரச்சார பயணத்திற்கு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி தலைவர் கீதநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள் ராமமூர்த்தி, கருணாகரன், பொன்பிரகாஷ், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பிரச்சார பயணம் திருபுவனை மற்றும் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்றனர்.
- உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே கொடூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வீட்டுக்கு தனியார் வாகன கடன் வசூலிக்க டிப்டாப் உடை அணிந்து வாலிபர் ஒருவர் சென்றார்.
அங்கு கட்டிட தொழிலாளி மனைவியிடம் உங்களது கணவர் வாகனம் வாங்கி இருப்பதாகவும் அதற்காக மாதத் தவணை கட்டவில்லை என கூறியுள்ளார்.
அதற்கு தொழிலாளியின் மனைவி அப்படி ஏதும் வாகனம் வாங்க வில்லையே என கூறியுள்ளார். உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்படி ஏதும் கடன் வாங்கவில்லை உடனே வீட்டுக்கு வருவதாக அவர் தனது மனைவியிடம் கூறினார். அப்போது டிப்டாப் வாலிபருக்கும் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் வீட்டின் வெளியே விளையாட கொண்டிருந்த தொழிலாளியின் மகள் 8 வயது மகள் அவரது அம்மாவிடம் இதே வாலிபர் ஆடையை கலைந்து பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளியின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைப்பதற்குள் ஆசாமி அங்கிருந்து பைக்கில் வேகமாக சென்று விட்டார். அந்த ஊர் வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற பொழுது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.
- வரவேற்க தயாரான வனவிலங்கு பொம்மைகள்
- பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை ஜனாதிபதியிடம் நேரடியாக காண்பிக்க கலைஞர்கள் தங்களது அரங்குகளை ஆர்வமாக தயாராக்கியுள்ளனர்.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசு பயணமாக புதுவைக்கு வருகிறார்.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 7-ந்தேதி மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கத்தில் உள்ள புதுவை அரசின் கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி கைவினை கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. அங்கு உள்ள கைவினை கலைஞர்கள் அரங்கில் மண் பொம்மைகள், சணல் பொருட்கள், ஓவியங்கள், அலங்கார விலக்குகள், பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை ஜனாதிபதியிடம் நேரடியாக காண்பிக்க கலைஞர்கள் தங்களது அரங்குகளை ஆர்வமாக தயாராக்கியுள்ளனர்.
மேலும், கைவினை கிராமத்தில் உள்ள வனவிலங்கு கலை அரங்கில் யானை, சிங்கம், புலி,
மயில், மான், குரங்கு,டால்பின், பறவைகள்,பூச்சிகள் என அனைத்தும் வண்ணமயமாக ஜனாதிபதியை வரவேற்க நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
- புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
- புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த வசதியாக நடைமுறையில் சில மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக தொடர்கிறார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து வந்த கலெக்டரின் சிறப்பு பணி அதிகாரி நீக்கப்பட்டு, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்து.
மற்ற 12 இ.ஆர்ஓ.,க்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சுற்றுலா, தொழில்துறை இயக்குனர்கள் கவனித்து வந்த சட்டசபை தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உழவர்கரை, புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
சில சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உழவர்கரை நகராட்சி ஆணையர் காமராஜர் நகர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், புதுவை நகராட்சி கமிஷனர் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், வடக்கு துணை கலெக்டர் அரியாங்குப்பம், மணவெளி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருத்தங்களுடன் கூடிய புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் விபரம் வருமாறு:-
வில்லியனூர் சப்-கலெக்டர்- மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு. நில அளவை துறை இயக்குனர்- மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கூட்டுறவு பதிவாளர்- கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி. உழவர்கரை நகராட்சி ஆணையர்- காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு.
புதுவை நகராட்சி ஆணையர்- முத்தி யால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம். துணை தொழிலளார் ஆணையர்- உருளை யன்பேட்டை, நெல்லித் தோப்பு, முதலியார்பேட்டை, வடக்கு துணை கலெக்டர் - அரியாங்குப் பம், மணவெளி. துணை போக்குவரத்து ஆணையர்- நெட்டப்பாக்கம், ஏம்பலம், பாகூர்.
காரைக்கால் துணை குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி- நெடுங்காடு, திருநள்ளாறு. காரைக்கால் துணை கலெக்டர்- காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி, டிஆர்.பட்டினம்.
மாகி நிர்வாக அதிகாரி- மாகி, ஏனாம் நிர்வாகி- ஏனாம்.
- நாளை மறுநாள் நடக்கிறது
- தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் (7-ந்தேதி) நடக்கிறது.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் ஆடுகளை பலியிடுவது வழக்கம். சாலையில் உள்ள ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்வது கோவிலின் சிறப்பு. இந்த தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். வருகிற 8-ந்தேதி காலை மீண்டும் தேர் புறப்பாடு, பிற்பகல் 2 மணிக்கு ராமநாதபுரம் கிராமத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
அன்று இரவு மஞ்சள் நீராட்டுவிழா, காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
- டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவ செயல் இயக்குனராக உதய்பாஸ்வான் கடந்த 1-ந் தேதி பதவியேற்றுகொண்டார். தொடர்ந்து, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எக்கோ கார்டியோகிராம் எந்திரம் போதுமானதாக இல்லை யென்பதை அறிந்து, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம் ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
மேலும், ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் தனிஅறை அமைக்கப்பட்டு அதையும் கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர். மதன்பாபு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும்.
சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
அதோடு, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தும் வகையில் எம்.எல்.ஏக்களை டெல்லி அழைத்துச் செல்வதாகவும் ரங்கசாமி கூறியிருந்தார்.
இதனிடையே பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. சுப்புராயன், மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி, 2018-க்கு பிறகு மாநில அந்தஸ்து கோரி எந்த தீர்மானமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும், புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்றும் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் புதுவையில் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பாதது ஏன்? முடக்கி வைத்துள்ளது யார்? கவர்னர் தமிழிசை தடையாக உள்ளாரா? என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் கவர்னர் தமிழிசை மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், மாநில அந்தஸ்து கோரும் சட்டமன்ற தீர்மானம் தனக்கு ஜூலை 22-ந் தேதி விடுமுறை நாளில் கிடைத்தது என்றும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இனி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினால் மட்டுமே மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
இதனிடையே புதுவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் அரசு முறை பயணமாக வருகிற திங்கட்கிழமை வருகிறார். அவரிடம் அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
- மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ துறை சார்பில் மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
குழந்தைகள் நலத் துறை தலைவர் பீட்டர் பிரசாந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மருத்து வம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப் புகளான அலைய்டுஹெல்த் சயின்ஸ் மாணவ-மாணவிகள், குழந்தைமருத்துவர்கள் நிஷாந்த், ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மற்றும் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் அமைச்சர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மற்றும் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இது ஐனநாயத்துக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். இன்றைய நாட்டின் சூழ்நிலையில், நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம், நமது மக்களின் உரிமைகளைக் காக்கும் அமைப்பாக விளங்குவது நமக்கு நிம்மதி அளிக்கிறது.
இதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






