என் மலர்
புதுச்சேரி
- மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
- உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரை யாற்றினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்கு ளவிநாயகர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சுகுமா ரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலை மேலாண் துறை உமா சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரையாற்றினர்.
விழாவில்,கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் முதல்வர் மனோகரன், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், அலைடு கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம், தனலட்சுமி, எஸ்.எம்.வி.,பள்ளி முதல் வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி டீன் முத்துல்ட் சுமி நன்றி கூறினார்.
- ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
- மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபடுவார்கள்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றி பார்த்தனர்.
அப்போது மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர். அவர்களிடம் ஸ்பெயின் நாட்டினர் எதற்காக இவ்வாறு தேங்காய் வீசி உடைக்கிறீர்கள் என்று இருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு வியந்த ஸ்பெயின் நாட்டவர்கள் அருகில் உள்ள கடையில் தேங்காய்களை வாங்கி உடைத்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
- முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது.
- 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்க சாமிக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் காலை 7 மணி முதல் ஏராளமான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் வாரிய தலைவரும், மேற்கு மாவட்ட என்ஆ.ர். காங்கிரஸ் தலைவருமான பாலமுருகன் 20 ரூபாய் நோட்டுக்களை கொண்டு மாலையை முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்தாஸ் , தங்கராசு, எழில் அய்யனர், ஆறுமுகம், சபரி இளங்கோ உள்ளிட் டோரும் உடன் சென்று ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.
மேலும் ஏலக்காய் மற்றும் பாதமை கொண்டு உருவாக்கப்பட்ட மாலை ஒன்றையும் முதல்- அமைச்ச ருக்கு தொண்டர்கள் அணி வித்தனர்.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
- காமராஜர் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் என்ஆர்.காங்கிரசார் உற்சா கமாக கொண்டாடினர்.
காலை 8.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர் லட்சுமிநாராயணன், ராஜ்பவன் தொகுதி பிரமுகர்கள் தங்கத்தேர் இழுத்து ரங்கசாமி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் வீட்டுக்கு சென்ற அமைச்சர் லட்சுமிநாராயணன், முதல்-அமைச்சருக்கு சால்வை, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து குமரகுரு பள்ளத்தில் ஆனந்து தலைமையில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 11.30 மணிக்கு ஒஸ்பிஸ் மடத்தில் முதியோருக்கு அமைச்சர் உணவளித்தார்.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் பொதுமக்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் அன்னதானம் வழங்கினார். இதன்பின் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கினார்.
மதியம் 12.45 மணிக்கு அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. பாஸ்கர் முன்னிலையில் காமராஜர் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு கணேஷ்நகரில் அமைச்சர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- ஆலை ரூ.800 கோடிக்கு மேல் கூட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
- ஒட்டுமொத்த நிலத்தை விற்றாலும் ரூ.800 கோடி கடனை அடைப்பது சாத்தியமான விஷயம் அல்ல.
புதுச்சேரி:
ஏ.ஐ.சி.சி.டி.யூ. அகில இந்திய துணைத் தலைவர் சோ. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏ.எப்.டி. பஞ்சாலை மிகப்பெரிய அளவில் நிலச்சொத்துள்ள நிறுவனம். இந்த ஆலை ரூ.800 கோடிக்கு மேல் கூட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதற்கு முழு பொறுப்பை மத்திய, மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும். இந்த கடன்களை அடைக்க நிலங்களை விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ள தாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்த நிலத்தை விற்றாலும் ரூ.800 கோடி கடனை அடைப்பது சாத்தியமான விஷயம் அல்ல. நிலம் கைவசம் இருந்தால்தான் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க முடியும். பட்டானூரில் உள்ள 56 ஏக்கர் நிலமும் முக்கியமான நிலம். கடன்களை அடைக்க சொத்துக்களை விற்பது என்ற கொள்கை முடிவு தற்கொலைக்கு ஒப்பானது.
எனவே கடன்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெற சிறப்பு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். ஆலைக்கு சொந்தமான சொத்துக்களை விற்கக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
- சுப்பிரமணியை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
புதுவை மேட்டுப்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சுப்பிரமணிக்கும் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.
அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இதனால் ரஞ்சிதா கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது அக்கா வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
சுப்பிரமணி அங்குசென்று மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
ஆனால் ரஞ்சிதா வர மறுத்துவிட்டார். இதையடுத்து சுப்பிரமணி வீடு திரும்பி விட்டார். இந்த நிலையில் ரஞ்சிதா சமாதானமடைந்து இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கணவர் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தது.
யாரோ சுப்பிரமணியை கத்தியால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணியை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருநங்கைகள் பால்குட ஊர்வலம்
- தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை காந்திவீதி, ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
ஆடி 3-ம் வெள்ளிக்கிழ மையையொட்டி இன்று காலை 6 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் பழனிசாமி, தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவி ஷீத்தல்நாயக் தலைமையில் திருநங்கைகள், பெண்கள்என 108 பேர் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
சமூகத்தில் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற வேண்டு தலோடு திருநங்கைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பால்குட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனலட்சுமி செய்திருந்தார்.
- தையல் பயிற்சி முகாம் 30 நாட்கள் நடக்கிறது. அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
- நிறைவு விழாவில் வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாப்ஸ் நிறுவனம் சார்பில் தவளக்குப்பத்தில் பெண்களுக்கான ஜூட் பைகள் மற்றும் துணி பைகள் தயாரிப்பதற்கான ஒரு மாத பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கான நிறைவு விழாவில் வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை சிட்பி வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் சிட்பி வங்கி புதுச்சேரி கிளை உதவி பொது மேலாளர் பாஸ்கர், ஓய்வு பெற்ற மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி சேர்மன் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவிற்கு வந்தவர்களை வாப்ஸ் ஒருங்கிணைப்பாளர் சாந்திசீதாராமன் வரவேற்றார். இந்த பயிற்சி முகாமில் சுமார் 35 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம் 30 நாட்கள் நடக்கிறது. அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார்.
- விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.
- ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.
புதுச்சேரி:
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகனுக்கு புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் திருப்பதி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை ரெயில் பயணிகள் மற்றும் மக்களின் வசதிக்காக ரெயில்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்துக்கு மதியம் 3.50 மணிக்கு வருகிறது.
புதுவையிலிருந்து 2.55 மணிக்கு திருப்பதி ரெயிலில் விழுப்புரம் செல்லும் பயணிகள் பல நேரங்களில் வைகை ரெயிலை தவறவிடுகின்றனர். எனவே திருப்பதி ரெயிலை 2.30 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.
குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரெயில் விழுப்புரத்துக்கு 5.40 மணிக்கு வருகறது. இந்த ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.
எனவே புதுவை ரெயிலை 6.15 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்தில் 4, 5-வது நடைமேடைகளில் கோச் பொசிஷன் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அதுபோல் இந்தாண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் பல்வேறு நடிகர்களின் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்துள்ளனர்.
அதோடு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவது போலும் ரங்கசாமி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் ஆங்காங்கே பேனர் வைத்துக்கப்பட்டுள்ளன. அதிலும் முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி அவரது தொண்டர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். இதனை புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மேலும் புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.
- சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் மதிக்காத போக்கு, ஒட்டுமொத்த புதுவை மக்களை அவமதிக்கும் செயல்.
- இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக தனி மாநிலத் தகுதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பொது நல அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் வ.சுப்பையா இல்லத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழகம் லோகு ஐய்யப்பன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கை மங்கையர்செல்வம், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், திராவிடர் கழகம் அன்பரசன், தமிழர் களம் அழகர், தந்தை பெரியார் திராவிட கழகம் இளங்கோ, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், அம்பேத்கர் தொண்டர் படைபாவடைராயன், தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஸ்ரீதர், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உமர், எஸ்.டி.பி.ஐ. சரத்பாஷா, தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, தன்னுரிமை கழகம் சடகோபன், படைப்பாளர் இயக்கம் தமிழ்நெஞ்சன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், பி போல்ட் பஷீர், மக்கள் உரிமைக் கட்சி மணிமாறன் உட்பட 40-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை சட்டசபையில் ஒருமனதாக கொண்டு வந்த மாநில தகுதிக்கான தீர்மானத்தை கிடப்பில் போட்ட கவர்னரை வன்மை யாக கண்டிக்கிறோம். சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் மதிக்காத போக்கு, ஒட்டுமொத்த புதுவை மக்களை அவமதிக்கும் செயல்.
தனி மாநில தகுதி வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, 3 மாதமாகியும் மத்திய அரசை வலியுறுத்தத் தவறிய புதுவை அரசையும், அமைதி காக்கும் எம்.எல்.ஏ.க்களையும் கண்டிக்கிறோம்.
புதுவைக்கு வரும் ஜனாதிபதியை சந்தித்து பொதுநல அமைப்புகள் சார்பில் தனி மாநில தகுதி கோரி மனு அளிப்பது. இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக தனி மாநிலத் தகுதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றப்படுகிறது.
- மாதா குளத்தின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக வில்லியனூர் விடி வெள்ளியே என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஆசியாவிலேயே தமிழர் பண்பாட்டின்படி கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு அருட்தந்தை லெஸ்போன் என்பவரால் கட்டப்பட்டது.
பிரான்ஸ் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த இடமான மசபியேல் குகையில் உள்ள அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டு தோறும் கலக்கப்பட்டு வருகிறது.
இந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள். தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருகின்றனர். வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 7 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருகின்றன.
இத்தகைய புதுமை மிகுந்த வில்லியனூர் மாதா குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றப்படுகிறது.
வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு புதுவை - கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின்னர், பிரான்ஸ் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் புனித நீர் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஊற்றப்படுகிறது. மாதா குளத்தின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக வில்லியனூர் விடி வெள்ளியே என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது.
இதன்பின்னர் இரவு 8 மணிக்கு லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் தலைமையில் லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு , பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.






