என் மலர்
புதுச்சேரி
- தீமிதி திருவிழா, வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
- செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, இரவு 8 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.இதனையொட்டி, 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 5.00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடக்கிறது. 12-ம் தேதி தெப்பல் உற்சவம், 13-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், துணை தலைவர் ஜீவகணேஷ்,செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
- தீயணைப்பு வீரர்களில் ஆண்கள் 39, பெண்கள் 19 என மொத்தம் 58 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
- புதுவை உள்துறை வெளியிட்ட அரசாணைப்படி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவல்துறையை தொடர்ந்து, யூ.டி.சி. தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
எல்.டி.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை உள்துறை சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை தீயணைப்பு துறையில் 5 நிலைய அதிகாரி, 58 தீயணைப்பு வீரர் பணியிடம் நிரப்ப கடந்த 2022 நம்பர் 11-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுவை உள்துறை வெளியிட்ட அரசாணைப்படி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
புதுவையை சேர்ந்த ஆண், பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தீயணைப்பு நிலைய அதிகாரி பணியில் ஆண்கள் 3, பெண்கள் 2 என மொத்தம் 5 இடங்கள், தீயணைப்பு வீரர்களில் ஆண்கள் 39, பெண்கள் 19 என மொத்தம் 58 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
அதிகாரி பணிக்கு இளநிலை, வீரர் பணிக்கு பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி மாலை 5.45 மணி வரை அரசின் இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.
- துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை சைபர் ஹீல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி முனைவர்.எம்.ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் சைபர் ஹீல்ஸ் நிறுவனர் முகமத் இப்ராஹிம், துறை தலைவர் பூங்குழலி மற்ற துறை தலைவர்கள் மேலும் துறை பேராசிரியர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.
புதுச்சேரி:
மழைக்காலங்களில் புஸ்சி வீதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரை சந்தித்து வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என நேரில் சென்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று தற்போது புஸ்சி வீதியில் கழிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதுபோல் உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.
இதனையும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரிடம் கென்னடி எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது தி.மு.க. தொகுதி துணை செயலாளர் ஆரோக்கிராஜ், கிளைச்செயலாளர்கள் செல்வம், ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து நிதி மோசடி குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் துணைவேந்தர் குர்மீத்சிங் பதவி விலக வலியுறுத்தி நேற்று நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே இரவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அவமதிக்காதே, தேர்தல் ஆணையத்தின் முடிவை அவமதிக்காதே என கோஷங்கள் எழுப்பப் பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் லெனின் வீதி-, காமராஜர் வீதி சந்திப்பு சாரம் பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க.வை பற்றியும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன், தலைமை வகித்தார். அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளா ளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலா ளர்கள் எம்.ஏ.கே.கருணா நிதி, பி எல். கணேசன், குணசேகரன், வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலா ளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டம், இது ஆர்ப்பாட்டம், துரோகி களின் முகத்திரையை கிழிக்கும் ஆர்ப்பாட்டம். உச்சரிக்காதே, உச்சரிக்காதே அ.தி.மு.க. பெயரை உச்சரிக் காதே, பயன்படுத்தாதே, பயன்படுத்தாதே, கட்சி கொடி, கட்சித்தலைவர், அம்மா, கட்சியின் பெயரை உச்சரிக்காதே, அவம திக்காதே, அவமதிக்காதே, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அவமதிக்காதே, தேர்தல் ஆணையத்தின் முடிவை அவமதிக்காதே என கோஷங்கள் எழுப்பப் பட்டது.
- இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேங்காய் திட்டு மேட்டு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மூத்த தலைவர் ரங்கநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை துறைமுகம் அமைந்துள்ள தேங்காய் திட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் மிக மோசமாக உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாக்கடை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் மிக மோசமான சூழலால் காணப்படுகிறது.
சீரமைக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால்குடிநீரும் மிக மோசமாக நிலையில் குடிக்க தகுதியற்ற வகையில் இருக்கி றது. இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேங்காய் திட்டு மேட்டு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலா ளர் சங்கர் தலைமை வகித்தார். தேங்காய்திட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால்சாமி, அரியாங்குப்பம் வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மூத்த தலைவர் ரங்கநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்திய நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், அரியாங்குப்பம் சங்கர், திமுக பொதுக்குழு உறுப்பி னர் சக்திவேல், வேலன், சீதாராமன், கோபால கிருஷ்ணன், சங்கர், அருண், பாலபாரதி, விடுதலை சிறுத்தை கட்சி ஜெயபால், இந்தியகம்யூனிஸ்ட் கீதநாதன், செல்வராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜாராமன், செந்தில்குமார், பாப்புலர் பாஸ்கர், செல்வ மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர்.
- வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.
- வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி இருந்து வருகிறது.
இந்த ஏரியிலிருந்து தண்ணீரை பாசனத்திற்காக வும் பறவைகள் சரணாலயத்திற்காகவும் பராமரித்து வருகின்றனர். இந்த பாகூர் ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
கடந்த மழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில் தற்போது வரண்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென புற்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவி எரிந்து வந்தது. இந்த தீயை அணைக்க வழி இல்லா ததால் தீயணைப்பு வண்டிகள் எதுவும் வர வில்லை.
2-வது நாளாகவும் எரிந்து வருகி றது. தகவல் அறிந்தவுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள மரக்கிளை மற்றும் செடி களையும் அகற்றி தீயை அணைத்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தீ அணைந்து உள்ளது.
ஆனால் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏரி பகுதியில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு நிலைய வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரி வனத்துறை அதிகாரி வஞ்சலவள்ளி சம்பவ இடத்தில் வந்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னரே புதுவை வனத்துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள்.
- பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. பாஸ்கர், முதல்- அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளை தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சியாக கொண்டாடு கிறார்.
அதன்படி அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக இன்று வீராம் பட்டிணம், காக்கா யந்தோப்பு. அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புடவை, கைலி, சக்கரை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்ன தானம் வழங்கப்பட்டது.
மேலும் இன்று மாலை தேங்காய்திட்டு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வடக்கு பேட் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீட்டிற்கே சென்று புடவை சர்க்கரை தொகுப்புகள் வழங்கபட உள்ளது.
நாளைமுதல்-அமைச்சர் பிறந்தநாளில் காலை வீராம்பட்டிணம் செங்க ழுநீரம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்து 200 நபர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கவும், ஆர்.கே நகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் எடுக்கவும். அவர்களுக்கு புடவை. பால் குடம். இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு உள்ளது.
மேலும் நமது அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என். ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி இலவச கண் கண்ணாடி, துப்புரவு தொழிலா ளர்களுக்கு நல உதவிகள். தொழில் உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்க உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு புதுவை அரசு மூலம் கலைமாமணி விருது பெற்றவர்களும் மற்றும் காந்திராம் நற்பணி இயக்கம் சார்பாக அரசு போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி அளித்த ஆசிரியர்க ளும் கவுரவிக்கப்ப டவுள்ளது.
- மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
- சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
முத்தியால்பேட்டை காந்திவீதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொண்டபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சுமார் ஒரு அடிக்கும் குறைவான தடுப்புகள் இருப்பதே தெரியாத நிலை உள்ளது.
இந்த சாலையில் பயணிக்கும் மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுபோன்ற விபத்து சம்பவங்களை தடுக்க சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும். இல்லவிட்டால் தடுப்புளை சரியான உயரத்தில் அமைத்து, அதன்மேல் இரும்பு கிரில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் மனுவில் கூறியுள்ளார்.
- போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள் குறிந்து கலந்துரையாடினர்.
- மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., நோக்கு நிகழ்ச்சி நடந்தது.
திட்ட அலுவலர் சகிகலா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் தலைமை தாங்கினார். மாநில நோடல் அலுவ லர் சதீஷ்குமார், என்.எஸ். எஸ்., தன்னார்வலர்களின் செயல்பாடுகள், போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள்குறிந்து கலந்துரையாடினர்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் பேசுகையில், களை மாணவர் வழிநடத்துவதில் என்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றி வருகிறது.
பொறுப்புள்ள, இரக்க முள்ள குடிமக்களாக மாறு வதற்கு என்.எஸ்.எஸ்., மாணவர்களை மேம்ப டுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் என்.எஸ். எஸ்., தன்னார்வலர்க ளுக்கு இலக்குகள், வழக் கமான செயல்பாடுகள், சிறப்பு முகாமின் பயன்கள், சமூக பங்களிப்பு, தொண்டுகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.டேவிட் செயிண்ட் ஆண்டனி நன்றி கூறினார்.
- ஆலோசனை கூட்டம் சங்க சேர்மன் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது இல்லத்தில் நடந்தது.
- கூட்டத்தில் மாநில மற்றும் பிராந்திய அளவில் சூட்டிங் பால் விளையாட்டு போட்டிகள் நடத்துவது.
புதுச்சேரி:
புதுச்சேரி சூட்டிங் பால் ஆசோசியேசன் ஆலோசனை கூட்டம் சங்க சேர்மன் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது இல்லத்தில் நடந்தது.
கூட்டத்தில் ஆசோசியேசன் தலைவரும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருமான எழில்ராஜன் சீனியர் துணைத்தலைவர் வளவன், பொதுச்செயலாளர் செல்வம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில மற்றும் பிராந்திய அளவில் சூட்டிங் பால் விளையாட்டு போட்டிகள் நடத்துவது. மற்றும் போட்டியை நடத்துவதற்கான விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.






