search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்-தலைமை என்ஜினீயரிடம் மனு
    X

    பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயரிடம் வையாபுரி மணிகண்டன் மனு அளித்த காட்சி.

    தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்-தலைமை என்ஜினீயரிடம் மனு

    • மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
    • சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்தியால்பேட்டை காந்திவீதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொண்டபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சுமார் ஒரு அடிக்கும் குறைவான தடுப்புகள் இருப்பதே தெரியாத நிலை உள்ளது.

    இந்த சாலையில் பயணிக்கும் மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    இதுபோன்ற விபத்து சம்பவங்களை தடுக்க சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும். இல்லவிட்டால் தடுப்புளை சரியான உயரத்தில் அமைத்து, அதன்மேல் இரும்பு கிரில் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×