என் மலர்
புதுச்சேரி
- அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
- நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்விக்கு மட்டும் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். சீருடை, சைக்கிள், பாடபுத்தகம் அரசே வழங்குகிறது. மாலையில் சிறுதானிய உணவு கொடுக்க உள்ளோம்.
புரோட்டின் சத்து தேவை என்பதால் வாரத்துக்கு 2 முட்டை வழங்கிய நிலையில், 3 முட்டை வழங்க அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு கலவையான, தரமான உணவு வழங்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதிய உணவை தரமாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தங்கவிக்ரமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- திருச்சி மண்டல தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
- மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
உலக பாவலர் தமிழன்னை தமிழ் பேரவை எனும் பன்னாட்டு அமைப்பின் ஆண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா மற் றும் திருச்சி மண்டல தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கம்பன் கழக செயலாளரும், முன்னா ள் சபாநாயகருமான சிவக் கொழுந்து, முன்னாள் தமிழக எம்.பி. டி.கே .எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
புதுவை தமிழ்ச்சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ், பேராசிரியர் செயலாபதி, அமைப்பின் நிறுவனர் அனந்தசயனம் ஆகியோர் பேசினார்கள். அமைப்பின் கொள்கைகளை செயலாளர் அருள்செல்வம் விளக்கினார். விழாவில் தமிழறிஞர்களுக்கு விருது, முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதிக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.
- திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல்
- 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பல்வேறு கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து பத்திரங்களை, பல கோடி ரூபாய் நகைகளை இந்து சமய நிறுவனத்தில் 1971-ம் ஆண்டு சேர்க்கும் போது இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் துணையுடன் திருடியும், பொய்கண்க்குகள் எழுதியும் கோவில் சொத்துக்களை கோவில் நிர்வாகிகள் திருடி உள்ளனர்.
அனைத்து கோவில் சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு மீண்டும் வழங்க மாநில அரசு, புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சி.பி.ஐ. அமலாக்கத்துறை மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களை 1950-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சோதனை செய்து பல ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
- நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.
புதுச்சேரி:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.
அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.
அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.
இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.
அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.
ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.
- தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.
சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.
இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- தொடர்ந்து பக்தரகள் அலகு குத்தியும் செடல் அணிந்தும் காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
- இக்கோவிலில் 26-ம் ஆண்டு ஆடி மாத தேரோட்டத் திருவிழா மற்றும் செடல் உற்சவவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பூத்துறை செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் சுயம்பு எல்லை காளியம்மன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத தேரோட்டம், செடல் உற்சவம் விமர்சையாக நடைபெறும். அதுபோல் இக்கோவிலில் 26-ம் ஆண்டு ஆடி மாத தேரோட்டத் திருவிழா மற்றும் செடல் உற்சவவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் இரவு அம்மன் வீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா மற்றும் செடல் உற்சவ விழா நேற்று நடந்தது.
தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு விநாயகர் கோவில், ஏழைமாரி யம்மன் கோவில் வீதி வழியாக , இரும்பை சாலை சந்திப்பில் இருந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து பக்தரகள் அலகு குத்தியும் செடல் அணிந்தும் காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி துணை சபாநாயகர் ராஜவேலு, கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., வானூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி. முரளி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மயானம் சென்று வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல் சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து கொஞ்சுமங்கலம் ஆசிரியர் அண்ணா துரையின் கேளிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சுயம்பு எல்லை காளியம்மன் கோவில் ஸ்தாபகர் பாலகிருஷ்ணன் அடிகளார் தலைமையில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.
- பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர்.
புதுச்சேரி:
புதுவையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாய்கள் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அச்சமடையும் பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சியிடமும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் புகார் அளித்திருந்தனர்.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில் உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து சென்று வருகின்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நகராட்சி ஊழியர்கள் தங்களது வாகனங்களில் புதுவை கடற்கரைசாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்களை பிடிக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நாய்பிடிக்கும் வாகனத்தின் சாவியை அவர்கள் வாகனத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் உடனே பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர். அப்போது போலீசாரிடமும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றும், வாகனத்தின் சாவியை எடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கூறி விலங்குகள் நல ஆர்வலர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- சட்டசபையில் மாணவர்கள் மற்றும் பயனாளிகள் கூட்டத்தால் அலை மோதியது.
- தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உதவித்தொகை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் நுழைய சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்க்க சட்டசபைக்கு வருவோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 789 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதற்காக சட்டசபைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். முதல்-அமைச்சர் வருகைக்காக மாணவர்கள் பாரதிபூங்காவில் காத்திருந்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தவுடன் மாணவர்கள் நீண்ட கியூ வரிசையில் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முதல்- அமைச்சர் சட்டசபை மைய மண்டபத்துக்கு அருகில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உதவித்தொகை வழங்கினார்.
இத்துடன் கலப்பு திருமண நிதிஉதவித்தொகை பெறவும் பயனாளிகள் வந்திருந்தனர். இதனால் சட்டசபையில் மாணவர்கள் மற்றும் பயனாளிகள் கூட்டத்தால் அலை மோதியது.
- நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.
- இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை வினோபா நகர் பகுதியில் 48 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தினமும் இரவு தான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் அப்பகுதியில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று இரவு அந்த பெண் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது சக்தி நகரை சேர்ந்த ரமேஷ் 34 என்ற வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.
இதனை அந்த பெண் தட்டிக்கேட்ட போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.
பின்னர் இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை பல்கலைக் கழகத்தில் போலி ரசீது மூலம் ரூ.பல கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். பல்வேறு ஊழலில் ஈடுபட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஜனாதிபதி உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்றைய தினம் கொடநாடு வழக்கை துரிதப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவையில் சாரம் பாலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அ.தி.மு.க. கொடிகளைகையில் ஏந்தியிருந்தனர். சுற்றுவட்டார பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய அதிமுக கொடி ஏற்றப்பட்டி
ருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓம்சக்திசேகர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் புதுவை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் அலுவலுகத்தில் புகார் அளித்தனர்.
புகாரில், எடப்பாடி தலைமையிலான அதிமுகவே அங்கீகாரம் பெற்றது என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக கொடிகளை மற்றவர்கள் பயன்படு த்துவதை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
மேலும், புதுவை மாநில அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கண்டித்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததற்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
புதுவை சாரத்தில் ஒ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய அதே பாலத்தின் மீது நாளை (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளனர்.
- ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் செயலி மூலம் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவியில் இந்த செயலி மூலம் இருவரும் தகவல்களை அனுப்பி பரிமாறிக்கொண்டு வந்தனர்.
பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி வந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது. இதனை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த பெண்ணுக்கு அணுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.






