என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "technical assistance"

    • சட்டசபையில் மாணவர்கள் மற்றும் பயனாளிகள் கூட்டத்தால் அலை மோதியது.
    • தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உதவித்தொகை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நுழைய சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்க்க சட்டசபைக்கு வருவோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 789 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதற்காக சட்டசபைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். முதல்-அமைச்சர் வருகைக்காக மாணவர்கள் பாரதிபூங்காவில் காத்திருந்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தவுடன் மாணவர்கள் நீண்ட கியூ வரிசையில் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    முதல்- அமைச்சர் சட்டசபை மைய மண்டபத்துக்கு அருகில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உதவித்தொகை வழங்கினார்.

    இத்துடன் கலப்பு திருமண நிதிஉதவித்தொகை பெறவும் பயனாளிகள் வந்திருந்தனர். இதனால் சட்டசபையில் மாணவர்கள் மற்றும் பயனாளிகள் கூட்டத்தால் அலை மோதியது.

    ×