என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது.

    கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணை குழு புகாரை ஆய்வு செய்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என துணைவேந்தருக்கு அறிக்கை அளித்தது.

    இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக, துணைவேந்தர், நிதி நிர்வாக அதிகாரி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ.விடம் புகார் அளித்தனர். ஆனால் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவில்லை. புகார் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் வைத்திருக்க முகாந்திரம் உள்ளதாக சி.பி.ஐ. அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த புகார் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    • கோடைகால இலவச சிலம்ப பயிற்சி நிறைவு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
    • இப்போட்டியில் 30 அணிகளை சேர்ந்த சுமார் 500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சி கழகம், சார்பில் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் திடலில் புதுச்சேரி, தமிழ்நாடு மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் மற்றும் 21 -ம் ஆண்டு கோடைகால இலவச சிலம்ப பயிற்சி நிறைவு விழா வருகிற 6-ந் தேதி  நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சிக் கழக தலைவர் கலைமாமணி விருது பெற்ற பழனிவேல் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    மாமல்லன் சிலம்பம் கழக செயலாளர் சீனிவாசன், ஆலோசகர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பின்னர் பரிசளிக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர் என்ற தட்சணா மூர்த்தி எம்.எல்.ஏ., புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் இணை பதிவாளர் பெருமாள், திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் பவர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் பொருளாளர் சியாமளா பழனிவேல் நன்றி கூறுகிறார்.

    இப்போட்டியில் 30 அணிகளை சேர்ந்த சுமார் 500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை மாமல்லன் சிலம்ப கழக செய்தி தொடர்பாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    • நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
    • எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் புதுவை கவர்னர், முதல்-அமைச்சர், மாவட்ட கலெ க்டர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி வேகமாக வளர்ந்துவரும் ஒரு நகரம், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் வேகமான வளர்ச்சியை கணக்கிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போதைய பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும்,

    குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்யும் பொது மக்கள் மேலும் அலைச்சலுக்கும், தேவையற்ற செல வினங்களுக்கு உள்ளா வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் நிலையத்தின் பின்புறமுள்ள அரசு பணிமனை வளா கத்தை ஒன்றிணைத்தால் கூடுதல் இடவசதி கிடைக்கும், வாகன போக்கு வரத்து நெரிசல் முற்றிலும் குறையும், எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.எனவே பஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலுக்கு பின் நுகர்வோர் பாதுகாப்புக்காக புதுவை மின்துறை இணையதளம், செல்போன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதிகளை செய்தது.

    தற்போது மின்துறையின் அனைத்து சேவைகளையும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில்;- மின் கட்டணம் மட்டுமின்றி, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இனி இணையதளம் வழியாக ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனைத்து சேவைகளையும் விரைவாக பெற முடியும். இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.

    • சிந்தனையாளர் பேரவை கலெக்டரிடம் மனு
    • கட்அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படு வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஒரு அழகிய சின்னஞ்சிறு நகரம். இங்கு நாள் தோறும் ஆயிரக்க ணக்கான சுற்றுலாப்பணிகள் வருகின்றனர். இதற்கிடையே புதுவை நகரப்பகுதிகளில் ஆங்காங்கே கட்அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படு வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்கள் வைக்க சென்னை ஐக்கோர்டு தடைவிதித்துள்ளது.

    ஆனால் இது புதுவையில் மீறப்படுகிறது. எனவே நகரப்பகுதிகளில் வைக்க ப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். மேலும் நகராட்சி சட்டப்படி பேனர்கள் வைக்கப்பட்டால் அதுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால் வருமானம் இல்லாமல் தடுமாறும் புதுவை அரசுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • பொருளாதாரத்தில் பின் தங்கிய சான்றிதழை பெற்று தற்போது முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மருத்துவ சீட்டை பெற முயற்சிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் தமிழிசைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 64 மருத்துவ இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

    இந்த கலந்தாய்வில் தற்போது தமிழகம்,கேரளா, மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இது சட்டப்படி குற்ற செயலாகும் ஏற்கனவே புதுவை அரசு இரட்டை குடியுரிமை சம்மந்தமாக சட்டத்தை இயற்றியும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் குறுக்கு வழியில் வெளி மாநில மாணவர்கள் அபகரிக்க நினைப்பதை புதுவை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஜிப்மர் முதல் கட்ட கலந்தாய்வில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சான்றிதழை பெற்று தற்போது முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மருத்துவ சீட்டை பெற முயற்சிக்கின்றனர்.

    எனவே ஜிம்பர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும்.

    அதுபோல் நீட் தர வரிசை பட்டியலில் விடுபட்ட மாணவர்கள் என 36 மாணவர்களை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அனுமதியோடு தற்போது நீர் தரவரிசை பட்டியலில் சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்க ளின் முழு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 62 பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 62 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் சாய்சரவணக்குமார் அறிவித்தார்.

    இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்புக்கு அனுமதியளித்து உள்ளார். தலைமை செயலர், துறை செயலர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    தீயணைப்பு துறையில் காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் முதல் முறையாக பெண்களுக்கு தீயணைப்பு துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான கோப்பு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும்.

    • தொடர் திருட்டு குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • செல்வகுமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர்பேட்டை, முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன்(வயது38). கடந்த 29-ந் தேதி இவரது வீட்டில் பொருத்தியிருந்த இன்வெர்ட்டர், 3 பேட்டரிகள் திருடுபோனது.

    இதேபோல் இவரது வீட்டின் அருகில் உள்ள விசுவநாதன் நகர், திருநாவுக்கரசு வீதியில் உள்ள சரவணன் வீட்டில் 2 இன்வெர்ட்டர், பேட்டரியும், கருணாநிதி வீட்டில் 3 கியாஸ் சிலிண்டர்கள் திருடுபோனது.

    தொடர் திருட்டு குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் திருட்டு நடைபெற்ற வீடுகளில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் சொகுசு காரில் வந்த மர்மநபர் பேட்டரி மற்றும் கியாஸ் சிலிண்டர்களை திருடிச் செல்வது தெரியவந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது புதுவை பாகூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் அறிவு என்ற செல்வக்குமார் (30) என்பதும், இரவு நேரத்தில் காரில் வலம் வந்து, வீட்டிற்குள் புகுந்து பேட்டரி, கியாஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வகுமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் பேட்டரிகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டார்.

    கைது செய்யப்பட்ட செல்வக்குமாரிடம் இருந்து 3 கியாஸ் சிலிண்டர்கள், 5 பேட்டரிகள், 3 இன்வெர்ட்டர்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியது.
    • வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் இறுதியில் மழை பெய்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியது. அதன்பின் வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் இறுதியில் மழை பெய்தது.

    இதனால் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. பின்னர் தினமும் மாலையில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்து கிறது. இன்றும் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி னர்.

    இரவிலும் வெப்பச் சலனம் நிலவுகிறது. இதனால் மக்கள் புழுக் கத்தால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    • புதுவை அரியாங்குப்பம் சாய்பாபா நகரில் நடிகர் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது.
    • விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சாய்பாபா நகரில் நடிகர் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த ராஜா ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தலைமை விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பயிலகத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது ெபாருட்கள் மற்றும் ஊட்டசத்து உணவு, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், தொகுதி தலை வர்கள், அணித்தலைவர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
    • சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி இன்று லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் என்.ஆர் காங்கி ரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் நந்தா பூவராகவன் ஏற்பாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

    இதில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்எல்ஏ, என்.ஆர் காங்கிரஸ் செயலாளர் என்.எஸ். ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் நாராயணசாமி, அழகு என்ற அழகானந்தம், வேல்முருகன், செண்பகா அசோகன், நரசிம்மன் தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுப்பிர மணியசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பூர்ண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ரங்கசாமி தொடங்கி வைத்தார். 

    • கல்வி கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் துறை மற்றும் பழங்குடி மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை இயக்குனர் சாய். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர்.ராமச்சந்திரா, தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிட அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் பேசிய இயக்குனர் சாய். இளங்கோவன், புதுச்சேரியில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தி வருகிறது.

    அதன்படி மாணவர்க ளின் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை யில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களில் தனியாக நோடல் அதிகா ரியை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    விண்ணப்பித்த அனைத்து மாணவ ர்களுக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டணத்தை வழங்கும் என்றும், அதுவரை மாணவர்களை கட்டணம் கேட்டு வற்புறுத்துவதோ தொந்தரவு செய்வதோ கூடாது.

    அப்படி கல்வி கட்டணம் செலுத்துவது குறித்து பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது குறித்து பள்ளி கல்லூரி சார்பில் எடுத்து ரைக்கப்பட்டது.

    அதற்கும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என இயக்குனர் சாய்.இளங்கோவன் தெரி வித்தார்.

    ×