search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தீயணைப்பு துறையில் 18 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு
    X

    கோப்பு படம்.

    புதுவை தீயணைப்பு துறையில் 18 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு

    • 62 பணியிடங்களை நிரப்ப கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 62 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் சாய்சரவணக்குமார் அறிவித்தார்.

    இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்புக்கு அனுமதியளித்து உள்ளார். தலைமை செயலர், துறை செயலர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    தீயணைப்பு துறையில் காலி பணியிடங்களில் ஒரு பெண் எஸ்.ஐ, ஒரு பெண் நிலைய அதிகாரி, 16 பெண் தீயணைப்பு வீராங்கணைகள் என 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் முதல் முறையாக பெண்களுக்கு தீயணைப்பு துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான கோப்பு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும்.

    Next Story
    ×