search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • பொருளாதாரத்தில் பின் தங்கிய சான்றிதழை பெற்று தற்போது முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மருத்துவ சீட்டை பெற முயற்சிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் தமிழிசைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 64 மருத்துவ இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

    இந்த கலந்தாய்வில் தற்போது தமிழகம்,கேரளா, மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இது சட்டப்படி குற்ற செயலாகும் ஏற்கனவே புதுவை அரசு இரட்டை குடியுரிமை சம்மந்தமாக சட்டத்தை இயற்றியும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் குறுக்கு வழியில் வெளி மாநில மாணவர்கள் அபகரிக்க நினைப்பதை புதுவை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஜிப்மர் முதல் கட்ட கலந்தாய்வில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சான்றிதழை பெற்று தற்போது முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மருத்துவ சீட்டை பெற முயற்சிக்கின்றனர்.

    எனவே ஜிம்பர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும்.

    அதுபோல் நீட் தர வரிசை பட்டியலில் விடுபட்ட மாணவர்கள் என 36 மாணவர்களை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அனுமதியோடு தற்போது நீர் தரவரிசை பட்டியலில் சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்க ளின் முழு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×