என் மலர்
புதுச்சேரி
- உப்பநாறு வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி கழிநீர் வாய்க்கால் செல்ல வழிவகை செய்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி க்குட்பட்ட ரோடியார் பேட்டில் ஆட்டுப்பட்டியை யொட்டி செல்லும் உப்பநாறு வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ரோடியார் பேட்டில் கட்டுமான பொருட்களை கழிவுநீர் வாய்க்காளையொட்டி வைக்கப்பட்டதால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நின்றது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் தெரிவித்தனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி கழிநீர் வாய்க்கால் செல்ல வழிவகை செய்தார்.
இதையடுத்து இப்பணியை உடனடியாக மேற்கொண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மாணவர் அணி நிசார், கிளைச்செ யலாளர்கள் ஆறுமுகம் ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.
- இலவச காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- செயல் விளக்க உதவியாளர்கள் கோபாலகிருஷ்ணன், தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வேளாண் துறை தேசிய தோட்டக்கலை சார்பில் மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் இலவச காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை வேளாண் இயக்குனர் சண்முகவேல், மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன், பண்ணை மேலாளர் வினோத் கண்ணன், தோட்டக்கலை வேளாண் அலுவலர் பிரியதர்ஷினி , பூச்சியியல் நிபுணர் விஜயகுமார், ஆகியோர் கலந்து கண்டு விவசாயிகளுக்கு முன் பருவ பயிற்சி குறித்தும் காய்கறி விதைகள் குறித்து பயன்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, செயல் விளக்க உதவியாளர்கள் கோபாலகிருஷ்ணன், தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.
- மஞ்சள் காமாலை தினத்தையொட்டி இலவச தடுப்பூசி முகாம் நடந்தது
- டாக்டர் செரீனா பானு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள அகரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி சார்பில் மஞ்சள் காமாலை தினத்தையொட்டி இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. உலக சுகாதார மைய முதுநிலை மருத்துவ அதிகாரி டாக்டர் செரீனா பானு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் புதுச்சேரி சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ராஜாம்பாள், முரளி, லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை டீன் ஜெயலட்சுமி, பேராசிரியை பம்மி சின்ஹா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் மருத்துவ கல்லூரி சேர்ந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர் குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் மொத்தம் 2 ஆயிரத்து 46 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியன் புக் ஆப் ரெ க்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்த மருத்துவ கல்லூரி தலைவர் ஜெகத் ரட்சகன் எம்.பி., பாரத் பல்கலைக்கழக வேந்தர் சந்திப் ஆனந்த் ஜெகத்ரட்ச கன் ஆகியோருக்கு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பால குருநாதன் நன்றி தெரிவித்து கொண்டார்.
- புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.
- எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த 4 அரசு திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் எந்த எதிர்பார்ப்போடு கூட்டணிக்கு வாக்களித்தார்களோ, அந்த எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் துணையாக இருக்கின்றனர். புதுவையில் இன்று எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்களே? என வயிற்றெரிச்சலில் எதிர்கட்சிகள் புலம்புகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இந்த அரசை விமர்சிப்பதில் குறியாக உள்ளனர். இதைப்பற்றி முதல்-அமைச்சர் கவலைப் படவில்லை. மக்களுக்கு இந்த அரசை பற்றி தெரியும். நாங்கள் என்ன செய்வோம் என தெரியும்.
இது மக்களால் உருவாக்க ப்பட்ட அரசு. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மக்களுக்காகவும், புதுவை வளர்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் இந்த அரசு மக்களுக்காக பாடுபடும். இத்திட்டங்கள் மக்கள் கையில் சேரும்போது பொருளாதாரம் நிச்சயமாக உயர்ந்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
- திய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜசேகர், தண்டபாணி, ஹரி, சசி, ஜெயபிரகாஷ், ராம்சங்கர் ஆகியோர் முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. பஸ்நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கும் பணி நடக்கிறது. பஸ்நிலையத்துக்கு நாள்தோறும் 750 பஸ்கள் வந்து செல்வது கடினமாக உள்ளது.
புதிய பஸ்நிலைய திட்டம் ஷாப்பிங் மால் போல கட்டப்படுகிறது. பயணிகள், பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கா மல், வணிக நோக்கில் 3 அடுக்கு மாடி கடைகள் ஆக்கிரமிக்கும் வகையிலும், பிளாட்பாரம் 22 பஸ்கள் நிறுத்தும் வகையிலும் சிறிதாக உள்ளது.
திட்ட கூட்டங்களில் பஸ் உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்காததால் இந்த குறைகள் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பி.ஆர்.டி.சி. பணி மனையை கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு மாற்றி பி.ஆர்.டி.சி. டெப்போவை தற்காலி பஸ்நிலைய பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம். சென்னை செல்லும் பஸ்கள் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவுக்கு மாற்றலாம்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
- புதிய திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
- தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரி:
புதிய திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வருவாயை திரட்ட வரி போடுவோம். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எந்தவொரு வரியும் போ டவில்லை. திட்டங்களைச் செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படும். இந்த அரசு நிர்வாகத்தை சரியாக கொண்டு சென்று மக்கள் மீது எந்த வரியும் திணிக்காமல் அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
காவல்துறையில் விரைவில் ஆயிரம் பணி யிடங்கள் நிரப்பி முடிக்கப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் காலி பணி யிடங்கள் நிரப்பப்படும்.
எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் பணிக்கு இன்னும் ஒரு மாதத்தில் எழுத்து தேர்வு நடக்கவுள்ளது. ஒவ்வொரு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் மருத்துவ பூங்கா, தொழிற்சாலைகளை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல், ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளில் புதிய தொழில்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்குரிய நலத்தி ட்டங்களை கொடுப்பதில் நாட்டிலேயே நாம் முதலிடத்தில் உள்ளோம். அதேபோல் கல்வி, மருத்து வத்திலும் முதலிடத்தில் உள்ளோம். பல நிலைகளில் அரசு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி இந்தியாவிலேயே முதல் 3 இடங்களில் இருக்கிறோம்.
பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுச்சேரியை கொண்டு வருவதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அதற்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. பெண் குழந்தை களுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவாகும். மார்ச் 17-க்கு பிறகு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.
இந்த தொகையை 18 ஆண்டுக்கு பிறகு வட்டியோட சேர்த்து, பெண் பிள்ளை படிப்பதற்கோ, தொழில் தொடங்கு வதற்கோ, திருமணத்திற்கோ தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். இதனால் பெற்றோருக்கு சிரமம் இருக்காது. பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தில் ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்துக்கான தவணை தொகை தலா ரூ.20-ஐ அனைவருக்கும் அரசே செலுத்திவிடும். இதற்காக ரூ.97 லட்சம் செலவிடப்பட வுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
- தொழில் முனைவு திறன்களை அனுபவரீதியாக பெற்றனர்.
புதுச்சேரி:
பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. மாணவிகள் நாட்டு, சிறுதானிய, பாரம்பரிய மற்றும் மாநில உணவு வகைகளை தயாரித்து நாற்பதுக்கும் மேற்பட்ட குழுக்களாக அமைத்து அவரவர் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்து விற்பனர் மனோபாவத்துடன் தொழில் முனைவு திறன்களை அனுபவரீதியாக பெற்றனர்.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான பழச்சாறு பானங்களையும் விளையாட்டு நிகழ்வுகளையும் உணவு கண்காட்சியில் மாணவிகள் அரங்கேற்றினர். கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு விற்பன்னர் மாணவிகளை ஊக்குவித்தனர். கல்லூரி செயலாளரின் வழிகாட்டுதலிலும் கல்லூரி முதல்வரின் மேற்பார்வையிலும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் விற்பன்னராக மாணவிகளின் அனுபவ ங்கள் கேட்டறியப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
- அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது.
- வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
புதுச்சேரி:
தேங்காய்த்திட்டில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, வர சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமிக்கு அபி ஷேகமும், திருக்க ல்யாண உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா., கூட்டுறவு பிரிவு அமை ப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ஆடிட்டர் பூவராக வன், துணைத் தலைவர் பட்டாபிராமன், செயலாளர் பிரேம்குமார், பொரு ளாளர் சிவஞானம், உறு ப்பினர் வெள்ளை யம்மாள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
- அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது
- ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
தக்காளி விலை கடந்த 2 மாதமாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதுவை அருகே பொதுமக்கள் ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, ரசம், சட்னிக்கு பயன்படுத்தும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது.
ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து வருவதால் கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தக்காளி ரூ.100-யை தொட்டது. தொடர்ந்து தக்காளியின் விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்கி வரப்பட்டு இங்கு மொத்தம் மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து புதுவை மட்டுமல்லாது புதுவை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இங்கிருந்து மூட்டை கணக்கில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரிகள் தக்காளியை வாங்கி கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.180-லிருந்து ரூ.200-ஐ எட்டி உள்ள நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் பகுதியில் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வாங்கி அதனை சட்னி, குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.
தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 110 கிராம் தக்காளி (டொமோட்டோ சாஸ்) சாஸ் ரூ.15-க்கு கிடைக்கிறது. 100 கிராம் தக்காளி சாஸ் செய்வதற்கு 300 கிராமிலிருந்து இருந்து அரை கிலோ வரை தக்காளி தேவைப்படும்.
அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை இருப்பதால் அவற்றுடன் சமையலுக்கு புளி, மிளகாய் ஆகியவற்றை கூடுதலாக சேர்த்து இயற்கையான சுவையை பெற முடிகிறது என்றார். இதனால் இந்த பகுதி மக்கள் ஏராளமானோர் தற்போது தக்காளி சாஸ்க்கு மாறி உள்ளனர்.
- மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
- பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.
புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.
மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.
பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.
- கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
புதுச்சேரி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.
ஜனாதிபதி வருகையின் போது முருகப்பாக்கம் பகுதியில் உள்ள கைவினை கிராமம் மற்றும் திருக்காஞ்சி பகுதியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
இதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் சாலை பராமரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தவளக்குப்பம் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருவழிச்சாலைக்காக போடப்பட்ட ரப்பரிலான தடுப்புக்கட்டை சேதமடைந்திருந்ததால் அதனை முற்றிலுமாக அகற்றி சிமெண்டிலான தடுப்புக் கட்டையை அமைக்க பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் பகல் இரவாக செய்து வருகிறார்கள்.
மேலும் சாலை ஓரங்களை சரி செய்வதும், வண்ணம் அடிப்பதும், தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக பழுதடைந்து இருந்த சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பணி ஓரிரு தினத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை காலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண் ஏல சீட்டு சேர்ந்துள்ளார். இதற்கிடையே முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஏல சீட்டு தொகையை பெற்றுள்ளார். ஆனால் அதன் பின் ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.
சுமார் ரூ.14 லட்சம் வரை அவர் கட்ட வேண்டி இருந்தது. இதனை ஏல சீட்டு நடத்தும் பெண் பல முறை கேட்டும் அந்த பணத்தை அவர் கொடுக்க வில்லை.
இதனால் அந்த பெண்ணை ஏல சீட்டு நடத்தி வரும் பெண் திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீட்டு பணம் எடுத்த அந்த பெண் இது குறித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் பணி புரிந்து வரும் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐ.டி.கம்பெனி ஊழியர் வாட்ஸ்-அப் கால் மூலம் ஏல சீட்டு நடத்தி வரும் பெண்ணை தொடர்பு கொண்டு அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து அந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கோயம்புத்தூர் ஐ.டி கம்பெனி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.






