என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "implement projects"

    • புதிய திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
    • தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதிய திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வருவாயை திரட்ட வரி போடுவோம். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எந்தவொரு வரியும் போ டவில்லை. திட்டங்களைச் செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படும். இந்த அரசு நிர்வாகத்தை சரியாக கொண்டு சென்று மக்கள் மீது எந்த வரியும் திணிக்காமல் அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    காவல்துறையில் விரைவில் ஆயிரம் பணி யிடங்கள் நிரப்பி முடிக்கப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் காலி பணி யிடங்கள் நிரப்பப்படும்.

    எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் பணிக்கு இன்னும் ஒரு மாதத்தில் எழுத்து தேர்வு நடக்கவுள்ளது. ஒவ்வொரு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் மருத்துவ பூங்கா, தொழிற்சாலைகளை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல், ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளில் புதிய தொழில்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஏழை எளிய மக்களுக்குரிய நலத்தி ட்டங்களை கொடுப்பதில் நாட்டிலேயே நாம் முதலிடத்தில் உள்ளோம். அதேபோல் கல்வி, மருத்து வத்திலும் முதலிடத்தில் உள்ளோம். பல நிலைகளில் அரசு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி இந்தியாவிலேயே முதல் 3 இடங்களில் இருக்கிறோம்.

    பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுச்சேரியை கொண்டு வருவதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அதற்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. பெண் குழந்தை களுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவாகும். மார்ச் 17-க்கு பிறகு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

    இந்த தொகையை 18 ஆண்டுக்கு பிறகு வட்டியோட சேர்த்து, பெண் பிள்ளை படிப்பதற்கோ, தொழில் தொடங்கு வதற்கோ, திருமணத்திற்கோ தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். இதனால் பெற்றோருக்கு சிரமம் இருக்காது. பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தில் ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்துக்கான தவணை தொகை தலா ரூ.20-ஐ அனைவருக்கும் அரசே செலுத்திவிடும். இதற்காக ரூ.97 லட்சம் செலவிடப்பட வுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×