என் மலர்
புதுச்சேரி

கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
ரோடியார் பேட்டில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு
- உப்பநாறு வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி கழிநீர் வாய்க்கால் செல்ல வழிவகை செய்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி க்குட்பட்ட ரோடியார் பேட்டில் ஆட்டுப்பட்டியை யொட்டி செல்லும் உப்பநாறு வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ரோடியார் பேட்டில் கட்டுமான பொருட்களை கழிவுநீர் வாய்க்காளையொட்டி வைக்கப்பட்டதால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நின்றது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் தெரிவித்தனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி கழிநீர் வாய்க்கால் செல்ல வழிவகை செய்தார்.
இதையடுத்து இப்பணியை உடனடியாக மேற்கொண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மாணவர் அணி நிசார், கிளைச்செ யலாளர்கள் ஆறுமுகம் ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.






