என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thousand people"

    • மஞ்சள் காமாலை தினத்தையொட்டி இலவச தடுப்பூசி முகாம் நடந்தது
    • டாக்டர் செரீனா பானு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே உள்ள அகரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி சார்பில் மஞ்சள் காமாலை தினத்தையொட்டி இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. உலக சுகாதார மைய முதுநிலை மருத்துவ அதிகாரி டாக்டர் செரீனா பானு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் புதுச்சேரி சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ராஜாம்பாள், முரளி, லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை டீன் ஜெயலட்சுமி, பேராசிரியை பம்மி சின்ஹா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் மருத்துவ கல்லூரி சேர்ந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர் குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரே நாளில் மொத்தம் 2 ஆயிரத்து 46 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியன் புக் ஆப் ரெ க்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்த மருத்துவ கல்லூரி தலைவர் ஜெகத் ரட்சகன் எம்.பி., பாரத் பல்கலைக்கழக வேந்தர் சந்திப் ஆனந்த் ஜெகத்ரட்ச கன் ஆகியோருக்கு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பால குருநாதன் நன்றி தெரிவித்து கொண்டார்.

    ×