search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா
    X

    அன்னதானத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.

    அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா

    • அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது.
    • வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    புதுச்சேரி:

    தேங்காய்த்திட்டில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, வர சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    தொடர்ந்து, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமிக்கு அபி ஷேகமும், திருக்க ல்யாண உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா., கூட்டுறவு பிரிவு அமை ப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ஆடிட்டர் பூவராக வன், துணைத் தலைவர் பட்டாபிராமன், செயலாளர் பிரேம்குமார், பொரு ளாளர் சிவஞானம், உறு ப்பினர் வெள்ளை யம்மாள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×