என் மலர்
புதுச்சேரி
- பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறையில் சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கலந்தாய்வை பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். கல்வித்துறை அலுவலகத்தில் திரண்ட அவர்கள், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணியிடங்கள் குறைப்பு மறைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், சீனியாரிட்டி அடிப்படை யான கலந்தாய்வினை நடத்த வலியுறுத்தியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல காரைக்காலில் உள்ள ஆசிரியர்களும் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
- குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது.
- எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் வார்டில் ரூ.73 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது.
தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆலங்குப்பம், சஞ்சீவி நககர் வார்டு பகுதியில் குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரும்பு குடிநீர் குழாய்கள் என்பதால், குழாய்களில் துரு ஏறி ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் இந்த பணிகளை மேற்கொண்டு உள்ளார். இதற்காக ஆலங்குப்பம் மற்றும் சஞ்சீவி நகர் வார்டு கிராம பஞ்சாயத்தார், பொது மக்கள், பா.ஜனதாவினர் எம்.எல்.ஏ. வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- இளம்பெண் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார்
- போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை தமிழக பகுதியான புதுக்கடை கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாபு என்ற வாலிபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பாபு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பாபுவின் தூண்டுதலின் பேரில் அவரது தாயார் ராஜேஸ்வரி சகோதரி சுந்தரி, சித்தி மகள் ெஜயா, சுந்தரியின் கணவர் விஜயராஜ் ஆகிய 4 பேர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரதுபெற்றோர் இல்லாத நிலையில் அந்த பெண்ணை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று திட்டினர்.
மேலும் வழக்கை வாபஸ் வாங்காவிட்டாலும் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரக்கூடாது என மிட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து அந்த பெண்தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவின் தாய் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
- புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.
- செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.
மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்தி சேகர் சிறப்புரையாற்றினார். அ.ம.மு.க.தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாரம் பாலத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள கொடநாடு கொள்ளை கொலை வழக்கை துரிதப்படுத்த கோரி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
- இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்த தமிழகப் பகுதியான கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தவர்கள் கீழ் புத்துப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.
தற்போது முகாமில் 1,358 இலங்கை அகதிகள் உள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு சீட் போட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது ஆட்சியில் ரூ.23 கோடி மதிப்பில் அங்கு 440 தனித்தனி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவுக்குள் அகதிகளாக வருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆதார் குடியுரிமை சான்றில் சேராது. மற்ற சலுகைகளை மாநில அரசு செய்து வருகிறது.
முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் எங்கு வேண்டு மானாலும் பணியாற்றலாம் எந்த தடையும் இல்லை. தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் நாட்களில் மட்டும் முகாமில் உள்ளவர்கள் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் அவர்களுக்கு இந்திய நாட்டுக்குள் அசையா சொத்து வாங்குவதற்கு அதிகாரம் இல்லாமல் உள்ளது.
அப்படி அவர்கள் வாங்கினால் அது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து கீழ்புத்துப்பட்டு முகாமில் வசிக்கும் ஒருவர் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள கங்கை நகர் அமீன் வீதியில் பல லட்சம் மதிப்பில் இடம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து சென்னையிலிருந்து வந்த கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடம் வாங்கிய இலங்கை அகதியின் மகன் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவருடைய பெயரில் இங்கு நிலம் வாங்கி அங்கு வீடு கட்டி வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 1990 முதல் இதுவரை இலங்கை அகதிகள் சொத்து வாங்கியதாக எழுந்த புகாரில் மரக்காணம் வானூர் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதியப்பட்ட 15-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
- விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் முத்து கேசவலு, கோவிந்தராஜ், பாலுசாமி, ராமமூர்த்தி, தினேஷ், பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் நிர்வாகிகள் வீர.பாரதி, ராமச்சந்திரன், ஜனா,சுப்பிரமணி, ஆறுமுகம், அசோக், சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் மாநிலத்தில் விளையாட்டு துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் நிலை குறித்து முழுவதும் விவாதிக்கப்பட்டது.
விளையாட்டுக்கு தனி துறை ஏற்படுத்துவது, விளையாட்டு கவுன்சிலை தொடர்ந்து நடத்த அரசு ஏற்பாடு செய்ய வற்புறுத்துவது, தொகுதி வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்துவது வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல வருடங்களாக கணக்கு தாக்கல் செய்யாமல் பணம் செலவு செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விளையாட்டு கவுன்சில் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது, செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிதாக சட்ட விரோதமாக புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் ஏற்படுத்தியதை பலமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை கலைக்காமல் இருப்பது, சென்டாக் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தகுதி இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு விளையாட்டு வீரர்களின் சான்றிதழை சரி பார்ப்பது, விளையாட்டு வீரர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்காதது இதுபோன்று தொடர்ந்து விளையாட்டு வீரர்களை அலட்சியம் செய்து வரும் புதுவை அரசையும், கல்வித்துறையும் கண்டித்து விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக சதீஷ் வரவேற்றார் முடிவில் செந்தில்வேல் நன்றி கூறினார்.
- ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.
- மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.
பிரதமரின் 103- வது மனதின் குரல் நிகழ்ச்சியை புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதியிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் லாஸ்பேட்டையில் 3 கிளைகள் இணைந்து பாரதப்பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார்.
- புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.
அமைச்சர் சந்திரப் பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காரைக்கால் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கவர்னர் தமிழிசை கேட்டு கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார். சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்கள், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் ஒரு வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரைக்கால் சிக்கல்களை குறித்த விவாதங்கள் எப்பொழுதும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.
மக்களின் குறைகளை அறிந்து கொள்ள மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார்.
மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும்.
புதுச்சேரி:
புதுவை-தமிழக எல்லை பகுதி அடர்ந்த பசுமையான காடுகளையும் முந்திரி தோப்புகளையும் கொண்ட பகுதியாகும்.
புதுவையில் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு இங்குள்ள பகுதிகளில் குற்றவாளிகள் தஞ்சம் அடைந்து வருவது வழக்கமாகியுள்ளது. கோட்டகுப்பம் ஆரோவில் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது.
கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இது போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.
மேலும் போலீசார் கண்ணில் படாமல் இருக்க காட்டுப்பகுதிகளில் மது அருந்தும் ரவுடி கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் காரணமாக கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வரும் நிலையில் பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சின்ன கோட்டகுப்பம் பிரின்ஸ்பர்க் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் ட்ரோன்களை இயக்கி பார்த்தபோது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது.
ட்ரோன் கேமராவில் இருந்து செல்போனுக்கு நேரடியாக வந்த காட்சிகளை வைத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தியவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ட்ரோன் கேமரா மூலம் தேவைப்படும் பொழுது அடர்ந்த காட்டு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கண்காணிக்கலாம். இதன் மூலம் ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும். மேலும் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்யவும் இது உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
- தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக்கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி புதுவையில் கடந்த 27-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அரசின் கல்வித்துறை உத்தரவில் தனியார் பள்ளிகளும் புத்தகப் பையில்லா தினத்தை கடைபிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளியில் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர். சில தனியார் பள்ளிகளில் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டது.
- பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 வழங்க முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் முதலமைச்சரின் விபத்து காப்பீடு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
புதுவை சமூக நலத்துறையின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் முதலமைச்சரின் விபத்து காப்பீட்டு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய திட்டம் என 4 திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 4 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடக்கிறது.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.
- பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.
- பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் இயங்கிய பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.
குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. இதனை எதிர்த்தும் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வலியுறுத்தி வ.சுப்பையா தலைமையில் சவானா பஞ்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் 84 நாள்கள் நடை பெற்ற போராட்டத்திற்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அமலாகவில்லை.
1936 ஜூலை 23-ந் தேதியிலிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜூலை 30-ந் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர்.
அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-ந் தேதி பிரஞ்சிந்தி யாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலா ளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுவையில் தான் முதன்முதலில் அமு லாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களு க்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.
8 மணி நேர வேலையை வலியுறுத்தி தியாகிகள் உயிர்தியாகம் செய்த ஜூலை 30-ம் நாள் தியாகி கள் தினமாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி 87-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் தியாகிகள் சதுக்கத்தை அடைந்தது. அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சங்க தலைவர் அபிஷே கம் உறுதி மொழி வாசித்தார். இதனை தாடர்ந்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தியாகிகள் கொடியை ஏற்றினார். கன்னியப்பன் ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை ஏற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில ெசயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நிர்வரிகள் அந்தோணி, ராமமூர்த்தி, சுப்பையா, எல்லை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏரளமான தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் சி.ஐ.டி.யூ சார்பிலும் தியாகிகள் சதுக்கம் அருகே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன்,பெருமாள்.கலியமூர்த்தி. பிரபுராஜ், வடிவேலு, கொளஞ்சியப்பன் ரவிச்சந்திரன், பச்சைமுத்து, மதிவாணன், மணிபாலன், மது,
புதுவை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குணசேகரன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், ராமலிங்கம், மால் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், மினி லாரி ஓட்டுநர், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இணைக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.






