என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of drinking"

    • குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது.
    • எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் வார்டில் ரூ.73 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது.

    தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆலங்குப்பம், சஞ்சீவி நககர் வார்டு பகுதியில் குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரும்பு குடிநீர் குழாய்கள் என்பதால், குழாய்களில் துரு ஏறி ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் இந்த பணிகளை மேற்கொண்டு உள்ளார். இதற்காக ஆலங்குப்பம் மற்றும் சஞ்சீவி நகர் வார்டு கிராம பஞ்சாயத்தார், பொது மக்கள், பா.ஜனதாவினர் எம்.எல்.ஏ. வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    ×