என் மலர்
புதுச்சேரி
- அதிகாரிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
- பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
மங்களம் தொகுதி கீழ்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள குடுவை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறு வதற்காக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளை கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் வருவதற்குள் விரைவில் கட்டுமான பணிகளை முடித்து விவசா யிகள் பயன்பாட்டுக்கு அணையை கொண்டு வர பணிகளை துரிதப்படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் விரைவில் பணிகளை முடிப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து பங்கூர் பகுதி யில் உள்ள ஏரியை புனர மைக்கும் பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப் பணித்துறை அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- கோடை மழை இல்லாததால் இந்த வறட்சியான சூழ்நிலை இருந்து வருகிறது.
- ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் திடீர் மழை, அதிக வெயில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்களான டெங்கு, விஷ காய்ச்சல், ஜலதோஷம், இருமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடை, விளை பயிர்களும் பாதித்து உள்ளது. கோடை மழை இல்லாததால் இந்த வறட்சியான சூழ்நிலை இருந்து வருகிறது.
தற்போது கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். புதுவையில் உள்ள நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் குறைந்து வறண்டு வருகிறது. இதுபோல் புதுவையின் 2-வது ஏரியான பாகூர் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
இதனால் தண்ணீர் குறைந்து ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
- புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத் துக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பா ளர் கவுரி தலைமை தாங்கி னார்.
புதுச்சேரி:
மணிப்பூரில் மாநில பா.ஜனதா ஆட்சியில் நடை பெற்று வரும் பூர்வக்குடி பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசை கண்டித்தும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத் துக்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமை தாங்கினார். மகளிர் பாசறை நிர்வாகிகள் தேவிகா, பிரவினா, சுபஸ்ரீ முன்னிலை வகித்தனர். மகளிர் பாசறை யின் மேனகா நிர்மல் சசிகலா பிருந்தாவதி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொருளாளர் இங்கோவன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பாசறை பொறுப்பாளர்கள் திருக்குமரன், திவாகர், ஜெகதீஷ், ஞானபிரகாசம், நிர்மல்சிங், வேலவன், கருணாநிதி, சுந்தர், மதிய ழகன், சந்துரு, கலிவரதன், அமுதன் பாலா காளிதாஸ் காமராஜ், பிரிய குமரன், சதிஷ், ஆனந்த், வீராசாமி, செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவே ண்டும்.
- மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- அரியூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசும்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பற்றி தரக்குறைவாக, அநாகரீகமாக விமர்சித்துள்ளார்.
மாண்புமிக்க பதவியில் இருக்கும் அவரைப்பற்றி தரம் தாழ்ந்து உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசிய ஆடியோ சி.டி.யும் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணே சன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
- அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர்.
திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தாக்கியதை கண்டித்து அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்த அமைச்சர் சந்திரபிரியங்கா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது யாரோ அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரிபிரியங்கா சிறிது நேரம் செய்வது அறியாமல் திகைத்து போனார்.
- பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
- முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை பெரிய் மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது
இதற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முழுமையாக இடிப்பதற்கு பதிலாக பகுதி பகுதியாக கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றினைந்து முன்னாள் எம்.பி. கண்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
அப்போது அறிக்கை வாயிலாக பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கருப்புக் கொடி ஏற்றி கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்து பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு தன்னுடைய ஆதரவு எப்போதும் வியாபாரிகளுக்கு உண்டு என முன்னாள் எம்.பி. கண்ணன் தெரிவித்தார். இதனால் நாளை நடைபெறும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் பங்கேற்கலாம் என தெரிகிறது.
- லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (திங்கள்கிழமை) மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி,
ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் ஒரு பகுதி, அவ்வை நகர் ஒருபகுதி, நவாற்குளம், குறிஞ்சிநகர் விரிவாக்கம், அன்னை நகர், டி,ஆஅர்.அன்னிபெசன்ட் நகர், வாசன் நகர், பொதிகைநகர், தில்லைகன்னு அம்மாநகர், மோதிலால் நேரு நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசுஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர்,
சாந்தி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், மற்றும் உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்பு உரை ஆற்றினார்
- விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
புதுச்சேரி:
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் பரிக்கல்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார், கீழ்பரிக்கல்பட்டு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் மலர்மன்னன், தமிழ்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார் கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்பு உரை ஆற்றினார்
பேரணியின் போது மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
- நகைக்கடை உரிமையாளரும் தொழிலதி பருமான டி.ஆர்.சரவணன் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் உடன் தி.மு.கவில் இணைந்தார்.
- டி.ஆர்.சரவணனுக்கு அமைச்சர் பொன்முடி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த பாப்பாஞ்சாவடியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான புகழேந்தி, விழுப்புரம் தொகுதி லட்சுமணன் எம்.எல்.ஏ, மாநில ஆதிதிராவிடர் நல பிரிவு துணை அமைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.டி.முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு லட்சுமி ஜூவல்லரி நகைக்கடை உரிமையாளரும் தொழிலதி பருமான டி.ஆர்.சரவணன் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் உடன் தி.மு.கவில் இணைந்தார்.
டி.ஆர்.சரவணனுக்கு அமைச்சர் பொன்முடி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் புவனே ஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், தொகுதி அவைத் தலைவர் சங்கர், பொருளாளர் சம்பத், மாவட்ட பிரதிநிதிகள் பாலு, கே.ஜி.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அருண், ஹென்றிதாஸ், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், ஏழுமலை, சங்கர், குமார், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.
- நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ் வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது57). இவர் புதுவை பொதுப்பணித்துறையில் ஊழி யராக பணிபுரிந்துவந்தார்.
மேலும் அப்பகுதியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு ஆகாசவாணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததால் கடந்த சில நாட்களாக ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்துக்கு நீர்பாய்ச்ச செல்வதாக சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பூவசரன் மரத்தில் சிவலிங்கம் துண்டால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் எழிலரசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோரிமேடு அருகே குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (73). இவருக்கு கடந்த 6 வருடங்களாக நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ் வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேங்காய் திட்டு மரப்பாலம் சந்திப்பில் உள்ள வண்ணான் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
- பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஊர் பொதுமக்களும் பயனடையும் வகையில் சிறப்படைந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவுண்டன்பா ளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நி லைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏரி, குளம் இயற்கைச் சார்ந்த பகுதி களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேங்காய் திட்டு மரப்பாலம் சந்திப்பில் உள்ள வண்ணான் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் 1- டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இந்த தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியானது அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஊர் பொதுமக்களும் பயனடையும் வகையில் சிறப்படைந்தது.
நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
- பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும்.
- “மனோபாவம் “ “முறையான தகவல்” தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த துணை படிப்பு கல்லூரியான அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவ ர்களுக்கு நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் நெறிமுறை, மனோபாவம், மற்றும் தகவல் தொடர்பு குறித்த பயிலரங்கு தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் பிரதீப் திலகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் உதய குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது மாணவ பருவம் அற்புதமான பருவ மாகும். மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பு படிக்கும் நீங்கள் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுபோல பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும். தகவல் தொடர்பில் மொழி மிகவும் அவசியம். என்றார்.
பின்னர் மாணவ- மாணவிகள் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது" நெறிமுறையுடன் நல்ல "மனோபாவம் " "முறையான தகவல்" தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
கல்லூரியின் "கீதம்" பாடலை ஸ்வேதா ஓமன் அறிமுகம் செய்தார். அதனை சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி பேராசிரியர் கார்த்திக் வெளியிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள் இக்பால், ரமாதேவி அனிதா ராமதாஸ் மஞ்சரி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
முடிவில் இயன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஶ்ரீ காந்த் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஹரிதாஸ் செய்திருந்தார்.






