search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
    X

    பொதுப்பணித்துறை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

    • அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.
    • நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ் வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது57). இவர் புதுவை பொதுப்பணித்துறையில் ஊழி யராக பணிபுரிந்துவந்தார்.

    மேலும் அப்பகுதியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு ஆகாசவாணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததால் கடந்த சில நாட்களாக ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்துக்கு நீர்பாய்ச்ச செல்வதாக சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பூவசரன் மரத்தில் சிவலிங்கம் துண்டால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரர் எழிலரசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோரிமேடு அருகே குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (73). இவருக்கு கடந்த 6 வருடங்களாக நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ் வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×