என் மலர்
புதுச்சேரி

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய என்.எஸ்.எஸ். மாணவர்கள்
1- டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய என்.எஸ்.எஸ். மாணவர்கள்
- தேங்காய் திட்டு மரப்பாலம் சந்திப்பில் உள்ள வண்ணான் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
- பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஊர் பொதுமக்களும் பயனடையும் வகையில் சிறப்படைந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவுண்டன்பா ளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நி லைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏரி, குளம் இயற்கைச் சார்ந்த பகுதி களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேங்காய் திட்டு மரப்பாலம் சந்திப்பில் உள்ள வண்ணான் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் 1- டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இந்த தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியானது அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஊர் பொதுமக்களும் பயனடையும் வகையில் சிறப்படைந்தது.
நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.






