search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish floating"

    • கோடை மழை இல்லாததால் இந்த வறட்சியான சூழ்நிலை இருந்து வருகிறது.
    • ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் திடீர் மழை, அதிக வெயில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.

    இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்களான டெங்கு, விஷ காய்ச்சல், ஜலதோஷம், இருமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடை, விளை பயிர்களும் பாதித்து உள்ளது. கோடை மழை இல்லாததால் இந்த வறட்சியான சூழ்நிலை இருந்து வருகிறது.

    தற்போது கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். புதுவையில் உள்ள நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் குறைந்து வறண்டு வருகிறது. இதுபோல் புதுவையின் 2-வது ஏரியான பாகூர் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.

    இதனால் தண்ணீர் குறைந்து ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

    ×