search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Department"

    • இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலுக்கு பின் நுகர்வோர் பாதுகாப்புக்காக புதுவை மின்துறை இணையதளம், செல்போன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதிகளை செய்தது.

    தற்போது மின்துறையின் அனைத்து சேவைகளையும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில்;- மின் கட்டணம் மட்டுமின்றி, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இனி இணையதளம் வழியாக ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனைத்து சேவைகளையும் விரைவாக பெற முடியும். இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.

    • புதுவை முத்தியால் பேட்டை எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.
    • வீட்டிலிருந்த 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இவர்களில் தெய்வானை, கணேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.

    இதில் வீட்டிலிருந்த 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இவர்களில் தெய்வானை, கணேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கிழக்கு மாநில துணை செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் பொதுமக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் உப்பளம் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

    இறந்துபோன 2 பேரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களுடன் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    புதுவை அரசையும், மின்துறையையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.இதையடுத்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வையாபுரிமணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த கண்காணிப்பு பொறியாளர், இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

    அப்போது வையாபுரி மணிகண்டன், 2017-ல் அக்ரஹாரம் பகுதியில் புதைவட கேபிள் அமைக்க கோப்பு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்பின் கொரோனா ஊரடங்கால் பணிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்த பணிகளை 10 நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி முழுவதும் மின்கம்பிகள் சீராக உள்ளதா? என ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து, 10 நாட்களில் அப்பகுதியில் புதைவட கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், தொகுதி முழுவதும் மின்துறை அதிகாரிகளை கொண்டு மின்கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிப்பு பொறியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×