என் மலர்
நீங்கள் தேடியது "போலி பில்"
- கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது.
கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணை குழு புகாரை ஆய்வு செய்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என துணைவேந்தருக்கு அறிக்கை அளித்தது.
இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக, துணைவேந்தர், நிதி நிர்வாக அதிகாரி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ.விடம் புகார் அளித்தனர். ஆனால் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவில்லை. புகார் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் வைத்திருக்க முகாந்திரம் உள்ளதாக சி.பி.ஐ. அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த புகார் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.






