என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜனாதிபதி வருகையால் புதுப்பொலிவு பெறும் புதுவை அரசின் கைவினை கிராமம்
    X

      புதுப்பொலிவு பெற்ற முருங்கப்பாக்கம் அரசின் கைவினை கிராமம் 

    ஜனாதிபதி வருகையால் புதுப்பொலிவு பெறும் புதுவை அரசின் கைவினை கிராமம்

    • வரவேற்க தயாரான வனவிலங்கு பொம்மைகள்
    • பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை ஜனாதிபதியிடம் நேரடியாக காண்பிக்க கலைஞர்கள் தங்களது அரங்குகளை ஆர்வமாக தயாராக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசு பயணமாக புதுவைக்கு வருகிறார்.

    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 7-ந்தேதி மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கத்தில் உள்ள புதுவை அரசின் கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி கைவினை கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. அங்கு உள்ள கைவினை கலைஞர்கள் அரங்கில் மண் பொம்மைகள், சணல் பொருட்கள், ஓவியங்கள், அலங்கார விலக்குகள், பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை ஜனாதிபதியிடம் நேரடியாக காண்பிக்க கலைஞர்கள் தங்களது அரங்குகளை ஆர்வமாக தயாராக்கியுள்ளனர்.

    மேலும், கைவினை கிராமத்தில் உள்ள வனவிலங்கு கலை அரங்கில் யானை, சிங்கம், புலி,

    மயில், மான், குரங்கு,டால்பின், பறவைகள்,பூச்சிகள் என அனைத்தும் வண்ணமயமாக ஜனாதிபதியை வரவேற்க நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×