என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி விமணவெளி பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தொகுதி பிரதிநிதி சபாபதி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் ரமேஷ் தி.மு.க. கொடியை ஏற்றினார்
பின்னர் கருணாநிதியின் திருவுருப்படத்துக்கு. கிளைச் செயலாளர்கள் பாலகுரு, அரிகரன், வாசுதேவன், நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, வேல்முருகன், சிவா, அருள்தாஸ், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கருணாநிதியின் நினைவுகளை எடுத்தி கூறி நிறைவுரையாற்றினர்.
- முருங்கப்பாக்கம் பகுதியில் கறுப்புக்கொடி காட்டப்படும் என புதுவை மாநில பெரியார் சிந்தனையா ளர்கள் இயக்கம் அறிவித்தது.
- சிறப்பு அதிரடிபடை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல், புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முருங்கப்பாக்கம் பகுதியில் கறுப்புக்கொடி காட்டப்படும் என புதுவை மாநில பெரியார் சிந்தனையா ளர்கள் இயக்கம் அறிவித்தது.
இதையடுத்து நடவடிக்கையாக பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செயலாளர் பரத், துணை அமைப்பாளர் கர்ணா ஆகிய 4 பேரை சிறப்பு அதிரடிபடை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக, இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் கலைபிரியன், சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் ஜெபின், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகிய 3 பேரை அவர்களின் வீடுகளில் நேற்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
- பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
புதுவைக்கு முதல்முறையாக ஜனாதிபதி வருகிறார். அவர் மாநில நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும். இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது.
அதை திரும்பப் பெற வேண்டும். இந்தி மொழியை திணித்தால் மாநிலங்களில் போராட்டம் உருவாகும். புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் பிறந்தநாளில் புதுவை முழுவதும் பேனர் வைக்கப்பட்டது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதற்கு முதல்- அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். காரைக்காலில் பேனர் விவகாரத்தில் அமைச்சர் போலீஸ் நிலையம் சென்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
ராகுல் தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவருக்கு எம்.பி பதவியை உடனடியாக வழங்க வேண்டும். உத்திர பிரதேச பா.ஜனதா எம்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் அவரின் பதவி இதுவரை பறிக்கப்பட வில்லை.
புதுவை முதல்- அமைச்சர் அறிவித்த குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம், பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் சந்திரமோகன், துணைத்தலைவர் தேவதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
- விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.
புதுச்சேரி:
அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மூர்த்திக்குப்பம், நரம்பை கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டது.
நிர்வாகிகள் வடிவேல், பெரியாண்டி, கதிரவன், கலைஞானம், வாசகன், உத்திராடம், புண்ணி யமூர்த்தி, யோகநாதன், நிர்வாகக்குழு உறுப் பினர்கள், பொதுமக்கள் முருகன், குமார், பிரகாஷ், பிரவீன், செல்வகுமார், கலையரசன், வினோத், ஞானவேல் பேசினர்.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.
அத்தகைய வங்கிகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தப் படவில்லை. புதுவையில் மீனவர்களுக்கு தனி வங்கி கிளையை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளை செப்பனிட்டு தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மண்டல அமைப்பாளர் கலைமணி செய்திருந்தார்.
- சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது.
- சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோவில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர்.
மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார். புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது.
புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என கலாச்சாரம், பாரம்பரியத்தை முன்னெடுத்துச்செல்கிறது.
புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது.
சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. புதுவைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேல்படிப்புக்காக வந்து செல்கின்றனர்.
ஜிப்மர் அப்துல்கலாம் அரங்கில் நாம் உள்ளோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியை பயன்படுத்தும் முயற்சிகளை மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார்.
- வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார்.
காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர் வீச்சு சிகிச்சை எந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகளை பார்க்கிறார்.
மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கஞ்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதிக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார்.
10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று தியானம் செய்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி புதுவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 250 போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுவை விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
- புதுவை அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது.
புதுச்சேரி:
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் கூட்டம் சங்க தலைவர் வளவன் தலைமையில் நடந்தது. சதீஷ் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜ், வீரபா ரதி, சந்துரு, அசோக், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:-
புதுவையில் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு புதுவை அரசு இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது.
சட்டவிரோதமாக பதியப்பட்ட புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்தகைய முறைகேடு களுக்கு துணை போன முன்னாள் மற்றும் இந்நாள் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்தையும் புதுச்சேரியை சேர்ந்தவர்க ளுக்கு ஒதுக்க வேண் டும். வெளி மாநில விளையாட்டு வீரர்களை கொண்டு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வரும் விளையாட்டு சங்கங்களின் அங்கீகா ரங்களை ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து மாநிலம் மற்றும் தேசிய போட் டிகளில் முழுவதும் புதுவை மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிட அரசுதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் புதுச்சேரி அரசு புறக்கணித்தால் தொடர் போராட்டம் நடத்துவது. என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முடிவில் செந்தில்வேல் நன்றி கூறினார்.
- செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
- சுற்றறிக்கை வெளியிட்டதை கண்டித்து கடிதம் அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை வகித்தார். செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா முன்னிலை வகித்தனர். சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவகர், சுகாதார ஊழியர் சங்க சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணி வண்ணன், ஜெகநாதன் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நடக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 9-ந் தேதி மருத்துவமனையில் 2-மணி நேர வெளிநடப்பு போரட்டம் நடத்துவது, காரைக்காலில் மருந்தாளுநர் பயிற்சியை செவிலியர்களுக்கு அளிக்க சுற்றறிக்கை வெளியிட்டதை கண்டித்து கடிதம் அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.
- முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. தீர்மானம்
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்ற வேண்டும்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வார்டு நிர்வாகிகள் ஆலோ சனைக்கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.கவின் துணையோடு ஆட்சி பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்ற வேண்டும்.
தடையின்றி வழங்கும் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது மாநில அந்தஸ்து பெற முயற்சிப்பதே சரியான தீர்வாக இருக்கும். தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து பற்றி முதல்- அமைச்சர் பேசாமல், அதை பெறுவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில அ.தி.மு.க. இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
- திருச்சிரா ப்பள்ளி ரெயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுவை ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை.
புதுச்சேரி:
புதுவை ரெயில் பாதை இந்தியாவின் பழமையான ரெயில் இணைப்புகளில் ஒன்றாகும், 1879-ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுவை ரெயில்வே நிறுவனத்தால் கட்டப்பட்டது.
தென்னிந்திய ரெயில்வே யின் மேற்பார்வையில், புதுவை நகரையும், துறை முகத்தையும் தென்னிந்தியா வுடன் இணைக்க மற்றும் புதுவை மற்றும் விழுப்புரம் இடையே ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே முழுப் பகை இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சியை பெற புதுவை ரெயில்வே நிலையம் கட்டமைக்க ப்பட்டது.
இந்திய ரெயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்ட லத்தால் இயக்கப்படும் இந்த நிலையம் திருச்சிரா ப்பள்ளி ரெயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுவை ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை.
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பாழடைந்த கட்டிடம் போல மக்கள் நடமாட்டமின்றி ரெயில் நிலையம் இருந்தது.
ஆனால், அதன் பிறகு மின்மயமாக்கப்பட்டு, புதிய பிளாட்பார்ம்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் தலைநகர் முதல் அண்டை மாநிலங்களுக்கு புதிய ரெயில் சேவை அறிமுகப்ப டுத்தப்பட்டது.
தற்போது புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு , கன்னியாகுமரி , பெங்களூரு , கொல்கத்தா , டெல்லி , புவனேஷ்வர் மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி அல்லாத ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர சென்னை , விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகியவற்றுடன் தினசரி ரெயில் சேவையும் உள்ளது. புதுவை ரெயில்வே நிலையத்தை மாதிரி ரெயில்வே நிலையமாக மாற்ற ரெயில்வே துறை பணிகளை செய்து வந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரெயில்வே நிலையங்கள் ரூ.25 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட 18 ரெயில்வே நிலையங்கள் ரூ. 515 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ராவ்சாகப் பாட்டில் தானாவே, தர்ஷனா ஜர்தோஸ் ஆகியோர் பங்கேற்றனர். புதுவை ரெயில்வே நிலையத்தில் பிரதமரின் காணொலி காட்சி திரையிடப்பட்டது. புதுவை ரெயில்வே நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி , வி.பி.ராமலிங்கம் , அசோக் பாபு, பா.ஜ.தா.மாநில தலைவர் சாமிநாதன், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ரெயிவே அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுவை ரெயில் நிலையம் பழமை மாறாமல் நவீனமய மாக்கப்பட உள்ளது. இதன்படி புதுவை ரெயில் நிலைய கட்டிடஙகள் தரம் உயர்த்தப்பட்டுகூரை பிளாசா, வணிக மேண்டலம், உணவகம், சிறுவர் விளையாட்டு வதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக தனித்தனி நுழைவு மேற்றும் வெளியேறும் வழி, வாகன நிறுத்தும் இடம், நகரும் படிக்கட்டு, டிராவலேட்டர், மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- ஒரே நாளில் 1 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி புதுவை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ரெயில்வே நிலையத்தில் நடந்த நவீனமயமாக்கல் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கி பேசியதாவது:-
புதுவை மாநில வளர்ச்சிக்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் பிரதமர். அவர் தேர்தலின்போது கூறிய பெஸ்ட் புதுச்சேரி என்ற வார்த்தைக்கு ஏற்பத்தான் இந்த நவீன திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை-புதுவை, புதுவை-காரைக்கால் ரெயில் பாதை விரைவில் அமைக்கப்படும் என ரெயில்வே மந்திரி உறுதி அளித்துள்ளார். மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்தை செம்மைப் படுத்தும் வகையிலான ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. காக்கிநாடா எக்ஸ்பிரஸ் புதன் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொலிவுறு திட்டத்தின் கீழ் புதுவை மாநிலம் முழுவதுமாக மாறி வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்கள் அனைத்தையும் பாரத பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். இந்த ஆண்டுதான் 10 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை புதுவை அரசு தாக்கல் செய்தது. ஒரே நாளில் 1 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி புதுவை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்த அன்றே ரூ.50 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டம் உள்ளது. காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி, ஏனாமில் மருத்துவ கல்லூரி ஆகியவற்றையும் பிரதமர் வழங்கி உள்ளார். தற்போது ரூ.93 கோடியில் புதுவை ரெயில் நிலையம் நவீனமய மாக்கப்படுவதற்கும் பிரதமருக்கும், மத்திய ரெயில்வே அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாரதா கங்காதரன் கல்லூரியின் ஆங்கிலத்துறை சிறப்பு பேராசிரியர் தாஸ் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.
- விதமாக ஸ்டார் ஐகான் அவார்ட்-2023 என்ற சான்றிதழை கல்லூரியின் துணைத்தலைவர் பழனி ராஜா பெற்றுக்கொண் டார்.
புதுச்சேரி:
சாரதா கங்காதரன் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத்துறை, வாகை தமிழ்ச்சங்கம் பதிப்பகம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுடன் இணைந்து பல்துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கான தேசிய கருத்தரங்கு நடந்தது.
சாரதா கங்காதரன் கல்லூரியின் துணைத் தலைவர் பழனி ராஜா கருத்த ரங்கை தொடங்கி வைத்தார். சட்டீஸ்கர் பல்கலைக்கழ கத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் கரிமா திவான், பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீ ஜகத்குரு பால கங்காதர காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஸ்டடிசின் பேராசிரியை ஸ்ரீ ரஞ்சனி, விஜயவாடா வின் எஸ்.ஆர்.கே. இன்ஸ் டிட்யூட் ஆப் டெக்னால ஜியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் மைத்ரேயி மற்றும் கேரளாவின் மெஸ் அஸ்மாபி கல்லூரியின் ஆங் கிலத்துறை துணை பேராசிரியர் ரேஷ்மி, சாரதா கங்காதரன் கல்லூரியின் ஆங்கிலத்துறை சிறப்பு பேராசிரியர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜிப்மர் மருத்துவமனையின் கார்டியாலஜி துறையை சார்ந்த இளவரசி சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தர மான ஆய்வு கட்டுரைகள் பதிவு பெற்றமைக்கான சாதனை சான்றிதழை முதுகலை ஆங்கிலத் துறை தலைவர் காணிக்க பிரியாவுக்கு வழங்கப்பட் டது.
இதனை பாராட்டும். விதமாக ஸ்டார் ஐகான் அவார்ட்-2023 என்ற சான்றிதழை கல்லூரியின் துணைத்தலைவர் பழனி ராஜா பெற்றுக்கொண் டார்.
சாரதா கங்காதரன் கல்லூரி முதல்வர் உதய சூரியன் கருத்தரங்கை நடத்திய அனை வரையும் பாராட்டி னார். கணினித் துறை தலைவர் பேராசிரி யர் நித்யா நன்றி கூறினார்.






