என் மலர்
புதுச்சேரி
- ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும்.
- ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
புதுவைக்கு வந்த ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும். அதோடு இன்று காலை ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். இதனால் அவர் தங்கியிருந்த மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் இணைந்து கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, காரைக்காலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய 2 இந்தியன் கோஸ்டல்கார்டு கப்பல்கள் ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை எதிரே கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
- டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார்.
- திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார்.
புதுச்சேரி:
புதுவைக்கு 2 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை ஜிப்மரில் புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க கருவியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழுங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் மணக்குள விநாயகரை தரிசித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜனாதிபதி வருகையின்போது, மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்துக்கு சென்றார். அங்கு கேரள செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொம்மலாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.
கைவினைக் கிராம வளாகத்தில் உள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட சுடுமண் சிலை, காகித கூழில் வடிவமைத்த உருவங்களை ஜனாதிபதி பார்வையிட்டார். ஜனாதிபதி உருவத்தில் வரையப்பட்டிருந்த மணல் சிற்பம், ரங்கோலி ஆகியவற்றை பார்த்து ரசித்தார்.
டெரகோட்டா முனுசாமி 30 நொடிகளில் உருவாக்கிய விநாயகர் சிலையை கண்டு பாராட்டினார். திருவள்ளுவர் சிலை, ஓவியம் ஆகியவை ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்டது. நெசவு தறியை பார்வையிட்ட ஜனாதிபதி நெசவாளரிடம் கைத்தறி போர்வையை பணம் செலுத்தி பெற்றார்.
புலியாட்டம் ஆடிய சிறுவனை அழைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கினார். சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நாட்டுப்புற கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து, வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு ஜனாதிபதி சென்றார். அவருக்கு அங்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சங்கராபரணி ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ஆரத்தியில் கலந்து கொண்டார். கோவிலுக்குள் சென்று கங்கைவராக நதீஸ்வரரை தரிசித்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருக்காஞ்சியில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக சென்றபோது சாலையோரம் பல சிறுவர், சிறுமிகள் ஜனாதிபதியை காண காத்திருந்தனர். அப்போது திடீரென காரை நிறுத்த சொன்ன ஜனாதிபதி, சாலையோரம் காத்திருந்த குழந்தைகள், சிறுவர்கள் அருகில் சென்று சாக்லேட் கொடுத்தார். பதிலுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். இரவு கவர்னர் மாளிகையில் நடந்த பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை வந்து தங்கினார்.
- ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
- அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.
இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.
தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.
ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.
அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.
அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.
ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.
- தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு நாள் ஒன்றுக்கு 100-டன் காய்கறி கள் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.
இதில் தக்காளி மட்டும் 30 டன் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து புதுவை பெரிய மார்க் கெட்டுக்கு தக்காளி வரவழைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. புதுவைக்கு நாள்தோறும் 10 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனையானது. இதனால் மக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தனர். தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.
இதனால் 4 நாட்களுக்கு முன்பு தக்காரி ரூ.100 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுவையில் இன்று தக்காளியின் வரத்து 20 டன்னை நெருங்கியது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டியின் விலை ரூ.500-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ரூ.60 விலையில் விற்கப்பட்டது. தக்காளி விலை குறைவால் மக்கள் சற்றே நிம்மதிய டைந்துள்ளனர்.
- புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.
- தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேச அழைக்கப்பட்டார். அப்போது கவர்னர் தமிழிசை, அனைவருக்கும் தாய்மொழி என்றால் சிறப்பும், பெருமிதமும் இருக்கும்.
புதுவைக்கு வந்துள்ள ஜனாதிபதியை அவரின் தாய்மொழியில் வரவேற்கிறேன் எனக்கூறி, பழங்குடியினர் மொழியில் ஜனாதிபதிக்கு வரவேற்பு தெரிவித்தார். தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பங்கேற்பு
- தேரோட்டம் தொடர்ந்து தொண்டமாநத்தம் காலனிபகுதி, மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் வாசல் வந்தடைந்தது.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேர் உற்சவம் விழா கடந்த மாதம் 22-ம் தேதி வெள்ளை விநாயகருக்கு மகா அபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பிடாரி மீனாட்சியம்மன், செங்கழுநீர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 31-ம் தேதி பிடாரி மீனாட்சி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிடாரி மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
இன்று காலை பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேர் நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கியது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
பிடாரி மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய தேரோட்டம் தொடர்ந்து தொண்டமாநத்தம் காலனிபகுதி, மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் வாசல் வந்தடைந்தது.
முன்னதாக காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் மனோகரன், அறங்காவல் குழு நிர்வாகிகள் சீனிவாசன், ராமு, வெங்கடேசன், பார்த்தசாரதி மற்றும் விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பிடாரி மீனாட்சி அம்மன் மின் அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும் அதனைத் தொடர்ந்து தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12.30 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சியும், வருகின்ற 14-ந் தேதி பிடாரி மீனாட்சி அம்மனுக்கு உதிரவாய் துடைத்தல் மற்றும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
- தற்காப்பு கலை பயிற்சி முகாம் 2 வாரமாக நடந்தது.
- பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூரில் ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் குராஷ் தற்காப்பு கலை பயிற்சி முகாம் 2 வாரமாக நடந்தது.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். தேசியளவில் போட்டிகளில் பங்கேற்ற ஆரோவில் இசையம்பலம் பள்ளி மாணவ, மாணவிகள் தற்காப்பு கலை பயிற்சிகளை செய்து காட்டினர். அகாடமியின் தலைவர் பாலமுரளி, குராஷ் தற்காப்புக்கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் இளையநம்பி, மகேஸ்வரன், பச்சையப்பன், மனோகரன், மகேந்திரன், மலர்விழி, அரவிந்தன், பழனிமுருகன், ஜானகிராமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார்.
- ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுவையை பாஸ்ட் புதுவையாக மாற்றி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகள். ஜிப்மர் நிர்வாக ரூ.17 கோடியில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவியை நிறுவியது பாராட்டுக்குரியது.
துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார். புதுவை ஆன்மிக மண். நாட்டின் முன்னேற்றம், சுதந்திரத்தில் புதுவைக்கும் பங்கு உண்டு.
இந்த மண்ணுக்கு சிலர் வரும்போது சரித்திரமாகிறது. அரவிந்தர், பாரதியார் வந்தது சரித்திரமானது.
அதேபோல ஜனாதிபதியின் வருகை புதுவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வது என்ற பாரதியாரின் எழுத்துக்களை உண்மையாக்கும் வகையில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாகியுள்ளார்.
ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அவரை கண்டு இந்த உலகம் வியக்கிறது. பெண்மையின் பெருமையை உணர்த்தும் உருவமாக உள்ளார். பிரதமர் மோடி கண்டெடுத்த மாணிக்கம் நம் ஜனாதிபதி.
இவ்வாறு அவர் பேசினார்.
- மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
- முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையத்தை அடுத்த திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்த வர் அசோக் (வயது28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அசோக் திப்புராயப் பேட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோ ருடன் அங்குள்ள கடையில் நின்று பேசிக்கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்து திடீரென அசோக் மற்றும் அவரது நண்பர்க ளிடம் தகராறு செய்தார். பின்னர் முத்து போன் செய்து தனது கூட்டா ளிகளை அங்கு வரவழைத்தார். முத்துவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அசோக் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கினர்.மேலும் அவர்களது மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்ப டுத்தினர். அதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் தலையில் வெட்டினர்.
இதனால் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த அசோக் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது கூட்டாளிகளானை ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
- மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் லாசுப்பேட்டை பொதிகை நகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழரசன், சபரி ஷிஷாந்த், ஐயப்பன், மனோஜ், கீர்த்திவாஸ், பிரதீப்ராஜ்,, தேவநாதன் ,அபிஷேக், விஜய் ,கவுதம், கவிதரன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நாடு முழுவதும் நடந்தேறி வரும் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வராமலும் மணிப்பூர் அரியானா மாநிலங்களில் கலவரங்களால் மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேசிய கல்விக் கொள்கை, முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ திணிப்பு உள்ளிட்ட சனாதன திட்டங்களையும், சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க கேட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை 3 மாதங்களாக வைத்திருந்த மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சிவசங்கரி புதுவையில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
- முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
அரசு கல்லூரி பேராசிரியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கலைகந்தன்(வயது37). இவருக்கு சிவசங்கரி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கலைகந்தன் சென்னையில் தங்கி அரசு கலைக்கல்லூரி யில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். சிவசங்கரி புதுவையில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். வார விடுமுறையில் கலைகந்தன் மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க வருவது வழக்கம்.
அதுபோல் நேற்று முன்தினம் கலைகந்தன் குடும்பத்தினரை பார்க்க வீட்டுக்கு வந்தார். நேற்று காலை கலைகந்தன் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென கலைகந்தன் மயங்கி சாய்ந்தார்.
உடனே இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சிவசங்கரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கார் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைகந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கலைகந்தன் திடீர் நெஞ்சுவலியால் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி விமணவெளி பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தொகுதி பிரதிநிதி சபாபதி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் ரமேஷ் தி.மு.க. கொடியை ஏற்றினார்
பின்னர் கருணாநிதியின் திருவுருப்படத்துக்கு. கிளைச் செயலாளர்கள் பாலகுரு, அரிகரன், வாசுதேவன், நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, வேல்முருகன், சிவா, அருள்தாஸ், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கருணாநிதியின் நினைவுகளை எடுத்தி கூறி நிறைவுரையாற்றினர்.






