search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்
    X

    கோப்பு படம்.

    தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

    • மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
    • மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் லாசுப்பேட்டை பொதிகை நகர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழரசன், சபரி ஷிஷாந்த், ஐயப்பன், மனோஜ், கீர்த்திவாஸ், பிரதீப்ராஜ்,, தேவநாதன் ,அபிஷேக், விஜய் ,கவுதம், கவிதரன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நாடு முழுவதும் நடந்தேறி வரும் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வராமலும் மணிப்பூர் அரியானா மாநிலங்களில் கலவரங்களால் மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தேசிய கல்விக் கொள்கை, முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ திணிப்பு உள்ளிட்ட சனாதன திட்டங்களையும், சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க கேட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை 3 மாதங்களாக வைத்திருந்த மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×