என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலசாரம் அதிகரித்து உள்ளது.
    • சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலாசாரம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி நகரப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்-அவுட்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஆனால் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

    இந்தநிலையில் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு பேனர்களில் நேற்று இரவு அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மீது அலங்கார வளைவு விழுந்ததில் பாதசாரிகள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த அலங்கார வளைவு மற்றும் பேனர்களை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • நவதானிய உணவுப் பொருட்களை அங்கன்வாடி ஊழியர்களிடம் வழங்கினார்.

    புதுச்சேரி:-

    கோட்டக்குப்பம் நகராட்சி சின்னகோட்டக்குப்பம் 14-வது வார்டு தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 14 -வது வார்டு செயலாளரும், கவுன்சிலருமான ஸ்டாலின் சுகுமார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெய மூர்த்தி கலந்து கொண்டு தி.மு.க. கொடி ஏற்றி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் 14-வது வார்டு தி.மு.க.வை சார்ந்த 3 குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக கவுன்சிலர் ஸ்டாலின் சிவக்குமார் தலா 2,500 நிதி உதவியும், தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு தலா 500 ரூபாய் மொத்தம் 8,500 ரூபாய் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து 13 மற்றும்14-வது வார்டு சத்யா நகர், சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் 5 கிலோ நவதானிய உணவுப் பொருட்களை அங்கன்வாடி ஊழியர்களிடம் வழங்கினார்.

    • புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-
    • ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-

    புதுவை நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.

    இந்த 3 ஆலைகளும் இயக்கப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர்.

    இந்த 3 ஆலைகளும் புதுவை, கடலூர் சாலையில் 100 ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். இதன்மூலம் புதுவை மனித வளத்தை பயன்படுத்தலாம் என பேசினார்.

    • பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி நடத்த வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தவளகுப்பத்தில் நடந்தது.
    • கிராமங்களை சேர்ந்த 90 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை சுற்றியுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐ.பி.எல். போல, தவளக்குப்பம் பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி நடத்த வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தவளகுப்பத்தில் நடந்தது. தவளக்குப்பத்தை மையப் பகுதியாக கொண்டு அதனை சுற்றியுள்ள கிராமங்களான பூரணாங்குப்பம், தானம்பாளையம், பிள்ளையார் திட்டு, பெரிய காட்டுப்பாளையம், ஆண்டியார்பாளையம், இடை யார்பாளையம், அரியாங்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 90 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

    6 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு வீரர்களை திறமைகளை திரையில் வெளியிடப்பட்டு அதன் மூலம் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் அதிகப் பட்சம் தொகையில் தவளக்குப்பத்தைச் சேர்ந்த ரகுவரன் ரூ.2,600 தானம்பாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு ரூ. 2,400-யும் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராகுல்ராஜ் ரூ.2,400 அரியாங்குப்பத்தைச் சேர்ந்த அரவிந்த், தவளகுப்பத்தைச் சேர்ந்த கோபால் ஆகியோர் ரூ.2,200 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் வியாபாரிகள், தொழிலதிபர்கள், விவசாயிகள் முன்னாள் விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.

    இப்போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தவளக்குப்பம் பிரீமியர் போட்டிகள் பொறுப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • புதுவையில் பாராளு மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
    • புதுவையில் காங்கிரஸ் கட்சி பூத் ரீதியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளு மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    புதுவையில் காங்கிரஸ் கட்சி பூத் ரீதியாக பலப் படுத்தப்பட்டு வருகிறது. மாநில தலைவராக நிய மிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி. தொகுதிவாரியாக நிர்வாகி களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பாராளு மன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை அவரின் அலுவலகத்தில் புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகி யோர் நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது புதுவையின் அரசியல் நிலவரம் குறித்து சோனியா கேட்டறிந்தார். வைத்திலிங்கம் எம்.பி. கட்சி, அரசியல் நிலவரத்தை எடுத்துக் கூறினார்.

    • கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு கென்னடி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடன் அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி துணைத் செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மாணவர் அணி நிசார், மீனவர் அணி விநாயகம், மற்றும் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

    • புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவில், முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வர் ரவிச்சந்திரன், அன்னை சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லுாரியின் புல முதல்வர் ஜெயசீலன் தேவதாசன் தலைமை தாங்கினர்.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்த மிழ்செல்வி வரவேற்றார். பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.

    விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில், பொருளாளர் ராஜ ராஜன், இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத் துவ கல்லுாரி டீன் கார்த் திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆராய்ச்சி டீன் கலைச்செல்வன், கல்லூரி முதல்வர் முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளங்கலை பட்டப்பி ரிவில் புதுச்சேரி பல்கலை அளவில் (2016-2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற அபிநயாவிற்கும், முதுகலை பட்டப்பிரிவில் (2018 -2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற கிரிஸ்டி ரெபேகாவிற்கும் சிறப்பு சான்றிதழ் வழங் கப்பட்டது.

    இணை பேராசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

    • நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமு கர்களை சந்தித்தார்.

    அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர். அதுபோல் புதுவை காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஜனாதிபதியை சந்திக்க வந்தார்.

    அவரை மாளிகையின் காத்திருப்பு பகுதியில் அமர வைத்த அதிகாரிகள் சிறிது நேரத்துக்கு பிறகு பார்வையாளர் பட்டியலில் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. பெயர் இல்லை என கூறினர். மேலும் பட்டியலில் பெயர் இல்லாத வர்கள் கந்திக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.

    இதனால் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஜனாதிபதியை சந்திக்காமல் வெளியே றினார். இது தொடர்பாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஜனாதிபதியை சந்திக்க விரும்புகிறீர்களா.?.என அதிகாரிகள் வீட்டிற்கு வந்து கேட்டனர். இதனை ஏற்று நான் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அளித்தேன். ஆனால் இங்கு வந்த போது பார்க்க அனுமதிக்கவில்லை.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து, மணிப்பூர் விவகாரம் போன்றவை குறித்து மனு கொடுக்க இருந்தேன். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பதால் தன்னை சந்திக்கா மல் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இதற்கிடையே நேற்று ஜிப்மரில் நடந்த ஜனாதிபதி விழாவில் ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் கபிரியேல் பங்கேற்க சென்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. அவர் கருப்பு, சிவப்பு துண்டு அணிந்திருந்ததால் அவரை அனுமதிக்க முடியாது என கூறி அவரை தனி அறையில் அமரவைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்
    • பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் கார் டிரைவர் இவருக்கு துளசி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி துளகி கண்டித்து வந்தார். ஆனாலும் பிரபாகரன் மது பழக்கத்தை கைவிட வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி வீட்டில் கடன் தொல்லை இருக்கும் நிலையில் இது போன்ற சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்தால் கடனை எப்படி திருப்பி கொடுப்பது என சத்தம்போட்டார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது தொடர்ந்து வாக்குவாதம் செய்தால் பிரச்சினை வரும் என கருதிய துளசி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் மாடிக்கு செல்லும் கைப்பிடியில் கணவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துளசி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்திவருகிறார்கள்.

    • புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெண்டர் வெளியிடப்பட்டது.

    இதை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போரா ட்டக்குழுவை உருவாக்கி வேலைநிறுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள், தனியார்மயத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மின்துறை செயலர் ஒவ்வொரு மாதமும் டெண்டர் இறுதி செய்யும் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.

    11-வது முறையாக மின்துறை டெண்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது
    • மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர். ரோக அருள்தாஸ், பொதுச்செயலர். கலைமணி, பேரவை தலைவர். முருகையன், கவுரவத் தலைவர் திருமால் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணம் செய்து ஊர்வலமாக நடத்தப்பட்ட சம்பவமும் , 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது, இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் நடந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளனர். ஆனால் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லபட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற வராதது அம்மாநிலத்தில் நடக்கும் அநிதிக்கு துணை போவதாகவே ஆதிதிராவிடர் இயக்கம் கருதுகிறது.

    தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் நடந்து வரும் கலவரத்திறகு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிய நிவாரணம், இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • புதுச்சேரியில் ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில், 45-ம் ஆண்டு வைணவ மாநாடு ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • முதல் நிகழ்ச்சியாக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பல்வேறு குழுக்களால் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில், 45-ம் ஆண்டு வைணவ மாநாடு ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பல்வேறு குழுக்களால் நடைபெற்றது.திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானு ஜாச்சாரியார் சுவாமிகள் மங்களா சாஸனத்துடன் மாநாடு தொடங்கியது.

    ஸ்ரீமத் நம்மாழ்வார் வைணவ சபை செயலாளர் குமார் கருட கொடி யேற்றினார். மன்ற தலைவர் அரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பொருளாளர் திருவேங்கடம் ஆண்டறிக்கை வாசித்தார்.  நாவலரின் நற்பெருமைகள், சரணாகதி சாஸ்திரம், பண்பை வளர்க்கும் பகவத் சாஸ்திரம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பேச்சு மற்றும் நாட்டிய போட்டி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானு ஜாச்சாரியார் சுவாமிகள் நாத யாமுன மத்யமாம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மன்ற செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கண்ணன் உட்பட ராமானுஜ நாவலர் சுவாமி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×