என் மலர்
புதுச்சேரி
- காமராஜர் நகர் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தலைமை தாங்கி நடத்துகிறார்.
- ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
பா.ஜனதா இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் உமா சங்கர் பிறந்த நாளை யொட்டி நாளை நடைபெறும் விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
புதுவை பா.ஜனதா இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் உமா சங்கர் நாளை தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகிறார்.
சாமிப்பிள்ளை தோட்டம் 4-வது குறுக்குத் தெருவில் நடைபெறும் உமா சங்கர் பிறந்த நாள் விழாவிற்கு காமராஜர் நகர் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தலைமை தாங்கி நடத்துகிறார்.
முன்னதாக கருவடிக்கும் சித்தாநாந்தா கோவில் இளைஞர் அணி சார்பில் உமா சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெறு கிறது.
அதனை தொடந்து பல்வேறு இடங்களில் அன்னதானம் நடை பெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் பிறந்த நாள் விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு புடவைகள் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள், , தொழிலதிபதிர்கள் உமா சங்கரின் நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.
- போக்குவரத்து மாற்றம்
- தீமிதி திருவிழாவையொட்டி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த கன்னியகோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுரை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் தீமிதி விழா நாளை மறுநாள் 11 -ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான கொடியேற்று விழா கடந்த 4-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு முருகர், விநாயகர், மன்னாதீஸ்வரர் பச்சை வாழியம்மன் மற்றும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆகிய சாமிகள் அலங்கரித்து வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வரும் 11-ந்தேதி தீமிதி திருவிழா, பிற்பகல் 12 மணியளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக் கல்யாணம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் தீமிதிவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு வம்சித்த ரெட்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 23 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. தீமிதி திருவிழாவையொட்டி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
கடலூர் பகுதியில் இருந்து வரும் புதுவை செல்லும் வாகனங்கள் முள்ளோடையில் இருந்து திருப்பி விடப்பட்டு பாகூர் வழியாக பின்னாச்சிகுப்பம் ,கிருமாம்பாக்கம் வந்து சாலையில் இருந்து புதுவை செல்லும். இதேபோல புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் பின்னாச்சிகுப்பம் வழியாக முள்ளோடை வந்து கடலூர் செல்ல வேண்டும் என போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தீமிதி திருவிழா குறித்து நேற்று கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது :-
தீமிதி திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், தீமிதி திருவிழாவிற்கு கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்றார்.
- நோயாளிகள் அவதி
- போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை காலை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ஜெயராம் சியாமளா, ஸ்டெல்லா, சந்தானலட்சுமி, அமுதசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி சம்மேளன ஆலோசகர் கீதா, கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன்,
பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவஹர் மற்றும் சுகாதார சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், செயலாளர்கள் சதீஷ், கலைவாணி, பொருளாளர் கிரி ஆகியோர் பேசினர் . இணைப்பு சங்க நிர்வாகிகள் சித்ரா, தனலட்சுமி, சுதாகர், ஜெகதீசன், காயத்ரி, திருமலை, இளையதாசன், லட்சுமி, சுந்தரமூர்த்தி, திருவரசன், சரவணன், ஆறுமுகம், தனசீலன், வெற்றிவேல், பாலமுருகன், இந்திரா, வைஜெயந்திமாலா, வள்ளி, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.
- மாணவர், பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
- தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்
புதுச்சேரி:
புதுச்சேரியில் உயர் கல்வி கட்டண குழு தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கந்தமாளை சந்தித்து புதுவை மாணவர்,பெற்றோர் நல சங்க தலைவர் வை.பாலா வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடம் அவர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 2022,2023 -ம் கல்வியாண்டில் உயர்கல்வி கட்டணக் குழுவால் இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மட்டும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 65 விழுக்காடு இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 விழுக்காடு இடங்களும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு பெறப்பட்டது. புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்.இது 35 விழுக்காடு ஆகும்.
மேலும் புதுவை அரசு மருத்துவக் கல்லூரியான இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மொத்தம் உள்ள 180 எம்.பி.பி.எஸ் இடங்களில் புதுவை அரசு ஒதுக்கீடாக 131 இடங்கள் பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 370 இடங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.
தற்போது புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடாக 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் அறிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் இந்திராகாந்தி மருத்து வக்க ல்லூரி கூட்டுறவுத்து றையின் கீழ் செயல்ப டுவதால் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் ரூ. 1 லட்சத்து40 ஆயிரம் எனவும், 2,3, மற்றும் 4-ம் ஆண்டுகளுக்கு ரூ. 74 ஆயிரம் என ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புதுவையில் பிற்படுத்த ப்பட்ட, மிகவும் பிற்படுத்த ப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துத் தரவேண்டும் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்த கூடாது என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலசங்கம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவ-மாணவிகளுக்கு மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம் யோகாசனா பாரத் தலைமையில் மாநிலஅளவி லான யோகாசனப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவில் போட்டியில் கலந்துக் கொண்டனர். சப்.ஜூனியர், ஜூனியர், சீனியர், மற்றும் மாஸ்டர் பிரிவுகளில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் யோகாசனப் போட்டியில் பங்கேற்பார்கள்.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சங்கத் துணைத் தலைவர் தேவசேனா பவனானி , செயலாளர் தயாநிதி, துணைச்செயலாளர் டாக்டர் பாலாஜி, பொருளாளர் சண்முகம் , உறுப்பினர்கள் லலிதா சண்முகம், மற்றும் ரீனா தயாநிதி கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.
- மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளம் பணி நடைபெறுகிறது.
- மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனுர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர் பாலாஜி நகர், ஆத்தியா அவீன்பு, பிச்சைவீரன்பட்டு, ராதாகிருஷ்னன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணிபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம்,
ஆதிகேசவன் நகர், திரு நகர். சரநாராயண நகர், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம் ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர் ,சுதாகர் நகர், லம்பேர்ட சரவணன் நகர். பவழக்காரன்சாவடி, பாவானர் நகர், சிவா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.
- ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.
புதுச்சேரி:
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார். அவரை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என முக்கிய பிரமுகர்கள் முறைப்படி அனுமதி கோரி இருந்தனர். ஆனால், பலருக்குச் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.
அவருக்கு மட்டும் அனுமதியளித்து, மற்றவர்களை அனுமதிக்க வில்லை. இதனால் ஜனாதிபதியை சந்திக்காமல் அவர் திரும்பினார். துணை சபாநாயகர் ராஜவேலு, அவரது துணைவியார் மாலதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர்களுக்கு சரியான தகவலும் அளிக்கவில்லை.
புதுவையை சேர்ந்த வர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுமதி அளித்துள்ளனர். இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் நடக்க மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததே காரணம். இதனால் ஜனாதிபதிக்கு மிகப் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே, நிர்வாகக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்குக் ஜனாதிபதி செயலகம், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதுவை அரசு பொதுப்பணி த்துறை மூலம் தவளக்குப்பம் லக்கம் அவென்யூ பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆழ்துளை கிணறு திட்டத்தின் மூலம் சுமார் 5000 பேர் பயன்பெறுவார்கள்.
- அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
- கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக சரக்கு கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரிய அளவிலான சரக்கு கப்பல் துறைமுகத்துக்கு வந்தது.
இதுகுறித்து அறிந்த உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. துறைமுகத்துக்கு நேரில் சென்று சரக்கு கப்பலை ஆய்வு செய்தார். அப்போது கப்பல் கேப்டன், துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது கென்னடி எம்.எல்.ஏ. கூறும்போது, இதுபோல் அதிகப்படியாக சரக்கு கப்பல் போக்குவரத்து சென்று வந்தால் அரசுக்கும் லாபம், தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையும். மேலும் அதிக சரக்கு கப்பல்கள் வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.
ஆய்வின்போது, தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளை செயலாளர் ராகேஷ், தொகுதி இளைஞரணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
- சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29).
பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்.
அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார்.
இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் கடற்கரையும் ஒன்றாகும். இங்குள்ள மணல் பரப்பை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சம்பவத்தன்று இந்த பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.
அப்போது மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், கடலில் குளித்த பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையிலும் ஈடுபட்டார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு சுற்றுலா பயணிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பதும், டிரைவரான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேனில் சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
- ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.
புதுச்சேரி,
புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை ஜனாதிபதி சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
பின்னர் பிற்பகல் 11:25 மணியளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார் ஜனாதிபதி. ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து தியானம் செய்தார்.
பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். பின்னர் அரவிந்தர் ஆசிரம நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக்கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக ஆரோவில் சென்றார். ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மாத்ரி மந்திர் சென்றார். மாத்ரி மந்திர் அமைவிடம் குறித்து அவர்கள் விளக்கினர். அங்கே ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கேயே ஜனாதிபதி மதிய உணவருந்தினார். இதன்பின் ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார்.
ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதை ஜனாதிபதி பார்த்தார். தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.






