search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வலியுறுத்தல்

    • 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது
    • மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர். ரோக அருள்தாஸ், பொதுச்செயலர். கலைமணி, பேரவை தலைவர். முருகையன், கவுரவத் தலைவர் திருமால் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணம் செய்து ஊர்வலமாக நடத்தப்பட்ட சம்பவமும் , 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது, இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் நடந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளனர். ஆனால் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லபட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற வராதது அம்மாநிலத்தில் நடக்கும் அநிதிக்கு துணை போவதாகவே ஆதிதிராவிடர் இயக்கம் கருதுகிறது.

    தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் நடந்து வரும் கலவரத்திறகு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிய நிவாரணம், இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×