search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு அனுமதி மறுப்பு
    X

    வைத்தியநாதன் எம்.எல்.ஏ. 

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனுக்கு அனுமதி மறுப்பு

    • நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமு கர்களை சந்தித்தார்.

    அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர். அதுபோல் புதுவை காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஜனாதிபதியை சந்திக்க வந்தார்.

    அவரை மாளிகையின் காத்திருப்பு பகுதியில் அமர வைத்த அதிகாரிகள் சிறிது நேரத்துக்கு பிறகு பார்வையாளர் பட்டியலில் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. பெயர் இல்லை என கூறினர். மேலும் பட்டியலில் பெயர் இல்லாத வர்கள் கந்திக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.

    இதனால் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஜனாதிபதியை சந்திக்காமல் வெளியே றினார். இது தொடர்பாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஜனாதிபதியை சந்திக்க விரும்புகிறீர்களா.?.என அதிகாரிகள் வீட்டிற்கு வந்து கேட்டனர். இதனை ஏற்று நான் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அளித்தேன். ஆனால் இங்கு வந்த போது பார்க்க அனுமதிக்கவில்லை.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து, மணிப்பூர் விவகாரம் போன்றவை குறித்து மனு கொடுக்க இருந்தேன். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பதால் தன்னை சந்திக்கா மல் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இதற்கிடையே நேற்று ஜிப்மரில் நடந்த ஜனாதிபதி விழாவில் ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் கபிரியேல் பங்கேற்க சென்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. அவர் கருப்பு, சிவப்பு துண்டு அணிந்திருந்ததால் அவரை அனுமதிக்க முடியாது என கூறி அவரை தனி அறையில் அமரவைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×