என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவ, மாணவிகளுக்கு குராஷ் தற்காப்பு கலை பயிற்சி
    X

    கோப்பு படம்.

    மாணவ, மாணவிகளுக்கு குராஷ் தற்காப்பு கலை பயிற்சி

    • தற்காப்பு கலை பயிற்சி முகாம் 2 வாரமாக நடந்தது.
    • பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் குராஷ் தற்காப்பு கலை பயிற்சி முகாம் 2 வாரமாக நடந்தது.

    முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். தேசியளவில் போட்டிகளில் பங்கேற்ற ஆரோவில் இசையம்பலம் பள்ளி மாணவ, மாணவிகள் தற்காப்பு கலை பயிற்சிகளை செய்து காட்டினர். அகாடமியின் தலைவர் பாலமுரளி, குராஷ் தற்காப்புக்கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் இளையநம்பி, மகேஸ்வரன், பச்சையப்பன், மனோகரன், மகேந்திரன், மலர்விழி, அரவிந்தன், பழனிமுருகன், ஜானகிராமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×