என் மலர்
புதுச்சேரி

பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பங்கேற்பு
- தேரோட்டம் தொடர்ந்து தொண்டமாநத்தம் காலனிபகுதி, மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் வாசல் வந்தடைந்தது.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேர் உற்சவம் விழா கடந்த மாதம் 22-ம் தேதி வெள்ளை விநாயகருக்கு மகா அபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பிடாரி மீனாட்சியம்மன், செங்கழுநீர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 31-ம் தேதி பிடாரி மீனாட்சி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிடாரி மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
இன்று காலை பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேர் நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கியது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
பிடாரி மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய தேரோட்டம் தொடர்ந்து தொண்டமாநத்தம் காலனிபகுதி, மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் வாசல் வந்தடைந்தது.
முன்னதாக காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் மனோகரன், அறங்காவல் குழு நிர்வாகிகள் சீனிவாசன், ராமு, வெங்கடேசன், பார்த்தசாரதி மற்றும் விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பிடாரி மீனாட்சி அம்மன் மின் அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும் அதனைத் தொடர்ந்து தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12.30 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சியும், வருகின்ற 14-ந் தேதி பிடாரி மீனாட்சி அம்மனுக்கு உதிரவாய் துடைத்தல் மற்றும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.






