search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பேனர் தடை சட்ட மீறல் ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பேனர் தடை சட்ட மீறல் ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
    • பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு முதல்முறையாக ஜனாதிபதி வருகிறார். அவர் மாநில நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும். இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது.

    அதை திரும்பப் பெற வேண்டும். இந்தி மொழியை திணித்தால் மாநிலங்களில் போராட்டம் உருவாகும். புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் பிறந்தநாளில் புதுவை முழுவதும் பேனர் வைக்கப்பட்டது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதற்கு முதல்- அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். காரைக்காலில் பேனர் விவகாரத்தில் அமைச்சர் போலீஸ் நிலையம் சென்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    ராகுல் தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவருக்கு எம்.பி பதவியை உடனடியாக வழங்க வேண்டும். உத்திர பிரதேச பா.ஜனதா எம்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் அவரின் பதவி இதுவரை பறிக்கப்பட வில்லை.

    புதுவை முதல்- அமைச்சர் அறிவித்த குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம், பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் சந்திரமோகன், துணைத்தலைவர் தேவதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×