என் மலர்
புதுச்சேரி
- பி.எட். 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடக்கிறது.
- புதுவை மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலி யிடம் பிற மாநில விண்ண ப்பங்களுக்கு பரிசீலிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை கூட்டுறவ கல்வியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த வர்களுக்கான பி.எட். 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடக்கிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த தகுதியான மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விண்ணப்பம் கல்லூரி இணையளத்தில் பதவியேற்றம் செய்யப்பட்டு ள்ளது. அடுத்தமாதம் 4-ந் தேதி வரை விண்ண ப்பிக்கலாம். பி.எட். படிப்பு சேர்க்கை கல்வி தகுதி, கட்டண விபரம் கல்லூரி இணையதள முகவரியிலோ, நேரிலோ பெறலாம். புதுவை மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலி யிடம் பிற மாநில விண்ண ப்பங்களுக்கு பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கேப்லான் இயக்குநர் டென்சின் ஜெம்யங் ஆகியோர் கையெ ழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
- பயிற்சியை அளிக்கும். மேலும் சர்வதேச பணி வாய்ப்புகளில் தகுதி பெறுவதற்கும் திறன் பயிற்சி அளிக்க உள்ளது.
புதுச்சேரி:
மணக்குள விநாய கர் மருத்துவ கல்லுாரி யு.எஸ்.ஏ., கேப்லான் நிறுவன த்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் மணக்குள விநாயகர் கல்விக் குழும மேலாண் இயக்குநர் தனசேகரன், கேப்லான் இயக்குநர் டென்சின் ஜெம்யங் ஆகியோர் கையெ ழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
கேப்லானின் இந்திய தலைமை அதிகாரி அபிஷேக் பவாதங்கர், மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லுாரி இயக்குநர் ராஜகோ விந்தன், துணை இயக்குநர் காக்னே, அகாடமிக் டீன் கார்த்திகேயன், ரிசர்ச் டீன் கலைச்செல்வன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை கண் காணிப்பாளர்கள் கிரிஜா, ஜெயஸ்ரீ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேப்லான் கற்றல் கற்பித்தலில் ஈடு பட்டுள்ள உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் மணக்குள விநாயகர் மருத்துவமனை கல்லுாரியில் தன்னுடைய கற்றல் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, மாண வர்களுக்கு பயிற்சியை அளிக்கும்.
நெக்ஸ்ட் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு தற்போது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. எனவே நெக்ஸ்ட் தேர்வில் மணக்குள விநாயகர் மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெற சிறந்த பயிற்சி அளிக்க உள்ளது.
இது தவிர யு.எஸ். எம்.எல்.இ., உள்ளிட்ட சர்வதேச அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சியை அளிக்கும். மேலும் சர்வதேச பணி வாய்ப்புகளில் தகுதி பெறுவதற்கும் திறன் பயிற்சி அளிக்க உள்ளது.
- இளம் பெண்ணின் இந்த பரபரப்பு புகாரால் திகைத்துப் போன போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
- பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் வழியாக பொம்மையார்பாளையம் அழைத்துச் சென்றுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூர் பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயது இளம் பெண் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை அந்த பெண் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன்னிடம் பதட்டத்துடன் புகார் அளித்தார்.
அதில், கடந்த ஒரு வார காலமாக செல்போன் மூலம் பழக்கமான ஒரு நபர் தன்னை பொம்மையார் பாளையம் பகுதியில் உள்ள முந்திரி காட்டுக்குள் அழைத்துச் சென்று தன்னிடமிருந்த 3 பவுன் தாலிச் செயின், பைக் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக புகார் அளித்தார்.
இளம் பெண்ணின் இந்த பரபரப்பு புகாரால் திகைத்துப் போன போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
புகார் அளித்த பெண்ணிடம் வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் எனகூறி வாலிபர் ஒரு நாள் அந்த பெண்ணுக்கு செல்போனில் பேசியுள்ளார். அப்போது ஸ்ரீதர் சாரி ராங் நம்பர் என போனை துண்டித்துள்ளார்.
பின்னர் அவ்வப்போது ஸ்ரீதர், அந்த பெண்ணின் போன் நம்பருக்கு போன் செய்து பேசி வந்துள்ளார்.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சம்பவத்தன்று அந்த பெண் தனது கணவரிடம் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு புதுவைக்கு பைக்கில் வந்துள்ளார்.
அப்போது, தான் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு வந்துள்ளதாக ஸ்ரீதரிடம் அந்த பெண் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனை வாசலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீதர் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டு அந்த பெண்ணை அவர் ஓட்டிவந்த பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆரோவில் வழியாக பொம்மையார்பாளையம் அழைத்துச் சென்றுள்ளார்.
முதல் முதலாக நேரில் சந்தித்த இருவரும் தனிமையில் பேச அங்குள்ள முந்திரி காட்டுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது ஸ்ரீதர் அந்த பெண் அணிந்திருந்த தாலி செயின் அழகாக இருப்பதாக கூறி அதனை வாங்கி உள்ளார்.
பின்னர் அந்த பெண் வைத்திருந்த செல்போனையும் எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் ஸ்ரீதர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை உணர்ந்த அந்த பெண் அதன் பிறகு தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி நகை, பைக், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற ஸ்ரீதரை தேடி வருகின்றனர்.
- நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது.
- 2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.
புதுவையில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
- அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
- வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.
தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:-
வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர், முதல் -அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
- ஆடி மாதம் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
புதுச்சேரி:
புதுைவ அரியாங் குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடி மாதம் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
அதனை முன்னிட்டு தினசரி காலையில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு இரவு பல்வேறு வாகனங்க ளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய விழா வான தேரோட்டம் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு செங்கழுநீர் அம்மன் மற்றும் விநாயகர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் அமர்த்தினர்.
பின்னர் காலை 8.10 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், துணை சபா நாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரை வீராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக் கானோர் இழுத்தனர். தேர் மாடவீதி வழியாக வந்து மீண்டும் 10 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.
விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், கல்யாண சுந்தரம்
எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், காங்கிரஸ் பொதுச்செய லாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி, பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வக்குமார், தொகுதி பொறுப்பாளர் வசந்தராஜ், பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ், அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்வேந்தன், காங்கிரஸ் பிரதேச கமிட்டி உறுப்பினர் சசிகுமார், அரியாங்குப்பம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தமிழழகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினமே விழாக்கோலம் பூண்டி ருந்தது.
தேரோட்டத்தைகான புதுச்சேரி, தமிழக பகுதியில் இருந்து பல்லாயிரக்க ணக்கான மக்கள் வந்து இருந்தனர். விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.
மேலும் அங்கு நடந்த சமபந்தி விருந்தினை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். தோரோட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேரோட்ட விழாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
வருகிற 25-ந் தேதி முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், தனி அதிகாரி சுரேஷ் மற்றும் விழா குழுவினர், மீனவ கிராமமக்கள் செய்தனர்.
- இளைஞர்கள் திரளாக பங்கேற்க சம்பத் எம்.எல்.ஏ. அழைப்பு
- மன அழுத்தமே மாணவர்களை யும் பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டுகின்றது.
புதுச்சேரி:
புதுவை தி.மு.க. இளைஞரணி மாநில அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிலும் மற்றும் புதுச்சேரியிலும் மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நீட் தேர்வு வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டுள்ள பா.ஜனதா என்றுமே சமூக நீதியை கடைபிடிப்பதில்லை. நீட் தேர்வின் முதல் 50 மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் இதுவரை
எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவு மாணவர்கள் யாரும் இடம் பெற்றதில்லை.
நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்தும் பல லட்சங்கள் பள்ளியிலும் தனியாக பயிற்சிக்கும், செல விட்டு ஒரு சில மாணவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட இதற்காக தயாராகியும் தங்களது காலத்தையும் பணத்தையும் இழக்கின்றனர்.
இதனால் ஏற்படும் மன அழுத்தமே மாணவர்களை யும் பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டு கின்றது. இதுவரை 16 மாண வர்களையும் ஒரு பெற்றோ ரையும் நீட் என்னும் கொழுந்து தீ விழுங்கி உள்ளது.
இதே நிலை தொடரு மானால் இன்னும் பல உயிர்கள் இந்த சமூகம் இழக்க நேரிடும். உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தி.மு.க. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அறவழிப் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சுதேசி மில் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொகுதியில் உள்ள தி.முக இளைஞரணி நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆவேசம்
- 50 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
புதுச்சேரி:
புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:
முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, 2024-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 மாதங்களில் புதுவைக்கு மாநில அந்தஸ்தை தருவார்கள் என கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. 50 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
ஆட்சி காலத்தில் எந்த முன்னேற்றத்தையும் புதுவையில் ஏற்படுத்தாத நாராயணசாமி இப்போதுதான் நித்திரையில் இருந்து விழித்துக் கொண்டதுபோல பேசுகிறார். 11 முறை சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடப்பட்டு அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றாத நிலையில், மாநில அந்தஸ்து பற்றி பேச நாராயணசாமிக்கு எந்த அருகதையும் இல்லை.
நாராயணசாமி, புதுவை மாநிலத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்தவர், தனி கணக்கை துவங்கி மாநிலத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் சுமையை ஏற்படுத்திய வர். சிறு, குறு தொழி ற்சாலைகள், மில்கள், ஆலைகள் மூடப்ப ட்டதற்கும் ஆயிரத்திற்கும் மேற்ப ட்டவர்கள் வேலை வாய்ப்பை இழந்ததற்கும் காரணமானவர்.
2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நாராயணசாமி கனவு காண்கிறார். வாரிசு அரசியல், ஓட்டு வங்கி அரசியல் செய்யும் அரசியலை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 326 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பை நடுநிலை பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே தேர்தல் வர இருக்கும் இந்த தருணத்தில் ஓட்டு வங்கிக்காக நாராயணசாமியும், வைத்திலிங்கம் எம்பியும் மாநில அந்தஸ்து பற்றி பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இனியும் அவர்களின் நீலிக்கண்ணீரை மக்கள் நம்பமாட்டார்கள்.
புதுவையில் அமைதியான முறையில் கூட்டணி அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதை சீர்குலைக்கும் எந்த முயற்சியும் இனி வெற்றிபெறாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- பல ஆண்டுகளாக அந்த இடம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்களை எதிர்கொண்டனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட் பட்ட வாணாரப்பேட்டை ரெயில்வே நிலையத்துக்கு செல்லும் தண்டவாளம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தண்டவாள இணைப்பு ஆகிய இடங்களில் மேடு பள்ளமாக இருந்தது.
இப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் தினமும் பய ணித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்களை எதிர்கொண்டனர்.
இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ரெயில்வே நிர்வாகத்திடம் சீரமைக் குமாறு கோரிக்கை வைத்தார். இதனையேற்று அங்கு தார்சாலை அமைத்து சீர் செய்யப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். தார்சாலை அமைத்து கொடுக்க உதவி செய்ததற்கு ரெயில் நிர்வாகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது துணை செயலாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, மாநில மாணவர் அணி நிசார், கிளை செய லாளர் ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வழங்கினார்
- நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அங்கு 500 பெண்களுக்கு புடவை மற்றும் 500 பேருக்கு சர்க்கரை ஆகியவற்றை பாஸ்கர் வழங்கினார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜெ.பேரவை மாநில செயலாளருமான பாஸ்கர் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
இதனையொட்டி இன்று காலை தனது வீட்டின் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது தாயார் கமலம் அம்மாள் மற்றும் தனது சகோதரரும், அ.தி.மு.க. மாநில செயலாளருமான அன்பழகன் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.
இதனை தொடர்ந்து புவன்கரே வீதியில் உள்ள சித்தர் கோவிலுக்கு சென்று அங்கு வழிபாட்டார். பின்னர் அங்கு பொதுமக்களுக்கு காலை டிபன் வழங்கினார்.
இதன் பின்னர் நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அங்கு 500 பெண்களுக்கு புடவை மற்றும் 500 பேருக்கு சர்க்கரை ஆகியவற்றை பாஸ்கர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து தனது வீட்டில் தனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் தொகுதி பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து ெதரிவித்தனர்.
மேலும் தொழிலதிபர் உத்திரவேல், ஜெ.பேரவை மாநில இணைச் செயலாளர் கே.மணிவண்ணன், லயன் சுரேஷ், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கர், சீனிவாசன், சந்தோஷ் சுரேஷ், ரவி ஆட்டோ கூல் சர்வீஸ் ரவி மற்றும் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை அணிவித்தும், ஆளுயுர மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கு சேலையும், பிரியாணி விருந்தும் பாஸ்கர் வழங்கினார்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் புதுவை-கடலூர் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிறந்த நாளை யொட்டி மருத்துவ முகாம், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் பேனர்கள், கட்அவுட்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வண்ணக்கோலமாக காட்சியளித்தது.
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது
- புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி:
பாரத தேசத்தின் 77-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் போர் நினைவுச் சின்னம் அமைய உள்ள பணிக்கு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வீர வாஞ்சிநாதன் சுதந்திர போர் பயிற்சி பெற்ற புகழ்மிக்க இடமான புதுச்சேரி காலாப் பட்டு ெதாகுதிக்குட்பட்ட கருவடி குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் டெல்லியில் அமைய உள்ள போர் நினைவுச் சின்னத்திற்காக புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை யில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், ஊடகப்பிரிவு மாநில அமைப் பாளர் குருசங்கரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலா ளர்கள் வேல்முருகன், அமல்ராஜ் இளைஞர் அணி துணைத்தலைவர் ராக் பேட்ரிக், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனக வல்லி, காலாப்பட்டு, லாஸ்பேட் தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஆனந்தராஜ், பா.ஜனதா நிர்வாகிகள் அருண் தனசேகர், ராஜேஷ், முன்னாள் ராணுவ வீரர் சசிகுமார் உள்பட காலப்பட்டு மற்றும் லாஸ்பேட் பகுதியில் உள்ள பா.ஜனதா மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் 100-க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில பா.ஜனதா கட்சி வல்லுனர் பிரிவு அமைப்பாளர் பொறியா ளர் ஆசிர்வாத் ரமேஷ் செய்திருந்தார்.






