என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது நிலத்தை யொட்டி உள்ள பகுதியில் தென்னங்கன்று நட்டார்.
    • கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்த மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது39). விவசாயி.

    இவரது நிலத்துக்கு பக்கத்தில் அேத பகுதியை சேர்ந்த ராமமூர்த்திக்கு நிலம் உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது நிலத்தை யொட்டி உள்ள பகுதியில் தென்னங்கன்று நட்டார்.

    இந்த நிலையில் கிருஷ்ணன் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றுக் கொண்டி ருந்த போது அங்கு வந்த ராமமூர்த்தி எதற்காக எனது நிலத்தில் தென்னங்கன்றை நட்டாய் என தகராறு செய்து கிருஷ்ணனை தாக்கினார்.

    இதையடுத்து கிருஷ்ணன் அருகில் உள்ள கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மருத்துவ மனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களான சவுந்தரராஜ், வேதமணி மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கோமதி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார்.

    முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்து வந்தது.

    இந்த நோய் காரணமாக கடந்த சில நாட்களாக முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் கொடுமையால் முருகன் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை கோமதி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.

    முருகன் மனைவிக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
    • வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்ட போது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர்.

    இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்த போது மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18)எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோரை தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
    • மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.

    எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

    மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.

    அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.

    இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.

    மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 38). என்பவர் சிறுமியை தடுத்து நிறுத்தி சவுக்கு மரத்தில் கட்டி வைத்து பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி கூச்சலிட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும் மரத்தில் கைகள் கட்டப்பட்டதால் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே தவித்துக்கொண்டிருந்தார். காலையில் அங்கு சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு அளித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார். 

    • தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.ஜே. சரவணன் வழங்கினார்
    • தொகுதி அவைதலைவர் ஜோதி, தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு குயவர்பாளையம் லெனின் வீதியில் புதிதாக அமைக்கப் பட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.ஜே. சரவணன் என்ற ஆறுமுகம் செயல் அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.

    நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, இலவச சுகாதார முகாம் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்

    ஆர்.வி.ஜே. சரவணன் என்ற ஆறுமுகம் தலைமை வகித்தார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, செந்தில்குமார், ரவீந்திரன், பிரபாகரன், வக்கீல் அணி லோக கணேசன், இலக்கிய அணி புலவர் கிருஷ்ணமூர்த்தி, தொகுதி அவைதலைவர் ஜோதி, தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நெல்லித்தோப்பு தொகுதியை சேர்ந்த 1000 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் லட்சுமி உருவம் பொருத்திய வெள்ளி நாணயம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

    புதிய அலுவலகத்தில் தி.மு.க. கொடியை நிர்வாகி கள் ஏற்றினர். விழாவில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சந்துரு, உத்தமன், நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்மணி, சித்து, சக்திவேல், சுகுமார், சந்துரு, கமல்பாலா, வக்கீல் அணி சந்தோஷ் குமார், கலியசாமி, முத்து, சதீஷ், அருள், அன்பு, பாபு, ஆட்டோ பழனி, தட்சிணா மூர்த்தி, ஸ்டாலின் ஆறு முகம், ராஜேஷ் ,விஜயகுமார், கண்ணன், சபரி, வெங்க டேஷ், காந்தி, செல்வமணி, ஜே.பி. பரிதிமால், பொன். ஏழுமலை, டேனியல் உட்பட தி.மு.க. கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி ஆர்.வி.ஜே. சரவணன் நெல்லிதோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பங்கு தந்தையிடம் ஆசி பெற்றார்.

    • டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் வழங்கினார்
    • முதல் இடம் பிடித்த ஆதவனுக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த வித்யாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த ஐ.ஆர்.பி.என். போலீசாரின் குழந்தைகளுக்கு காவல்துறை தலைமையகத்தில் ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களை பாராட்டி போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் ரொக்கப்பரிசு வழங்கினார்.

    10-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த ஆதவனுக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த வித்யாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்த ஜித்தேந்தருக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த வசந்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

    12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்தமஞ்சுளாவுக்கு ரூ.3 ஆயிரம், 2-வது இடம் பிடித்த ரவிணாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைக்கை நடத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில்- இடையஞ்சாவடி சாலையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமை யிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட பைக்கை வாலிபர் வேகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைக்கை நடத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாலிபர் முதுகு பின்னால் வைத்திரு பையில் கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிவம் பிரதாப் குப்தா (வயது 31) என்பதும், புதுச்சேரியில் வந்து பல நாட்கள் இங்கேயே தங்கி இருக்கும் சிவம் பிரதாப் குப்தா நண்பர்களுடன் கஞ்சா புகைப்பதை வழக்க மாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

    நேற்று வழக்கம்போல் புதுச்சேரி பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலத்தை வாங்கி பிளாஸ்டிக் கவரில் மடித்து எடுத்து வந்த போது போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

    சிவம் பிரதாப் குப்தாவை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

    • உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர்.
    • நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    டெரகோட்டா எனப் படும் சுடுமண் சிற்பக்கலை புதுவையில் பாரம்பரியக் கலையாக உள்ளது.

    இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கணுவாப்பேட்டை கிராமத்தில் தனி பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார்.

    துருக்கி நாட்டில் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர்.

    இவர்கள் திருச்சிற்றம் பலம் கிராமத்தில் தங்கி அங்குள்ள மாணவர்க ளுடன் 10 நாட்கள் தங்கி புதுவை யின் கல்வி மற்றும் கலாச்சா ரத்தை பயில்கின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரம் பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என ஆர்வத்துடன் பயின்றனர்.

    அழிவில் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர் வெளி நாட்டு மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.

    மிகுந்த ஆர்வத்துடன் கற்ற மாணவர்கள் தங்க ளது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்கள் பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.

    • மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து மருத்துவ சேவை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
    • முயற்சியானது நிறுவனத்தின் எட்டாததை எட்டுதல் என்ற எங்கள் இலக்குடன் ஒத்து போகிறது.

    புதுச்சேரி:

    மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் சகாரா பாலை வனத்தின் தெற்கே சாட் குடியரசு நாடு உள்ளது. இந்த நாட்டுடன் புதுவை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனை, அதன் தாய் நிறுவனமான மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து மருத்துவ சேவை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக பிம்ஸ் முதன்மை ஆலோ சகர் பாபுடேனியல், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜீஜார்ஜ்

    ஆகியோர் சாட் குடியரசு நாட்டுக்கு சென் று பொது சுகாதாரம் மற்றும் தேசிய ஒற்றுமை மந்திரி அப்துல் மஜித் அப்தர்ஹம் முகமது மற்றும் அரசின் உயர்மட்ட மருத்துவ குழுவினருடன் கலந்தாய்வு செய்து அந் நாட்டு மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் பணியாற்றும் இந்திய டாக்டர் சுனிதா பிள்ளை உதவி யுடன் மருத்துவ வசதிகள் தொடர்பாக மெட்ராஸ்

    மெடிக்கல் மிஷன் அந்நாட்டு தன்னாட்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ பல்லைக்கழக மான லாரெனாய்சன்ஸ் அமைப்புடன் இணைந்து மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆய்வு, பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் செயலாளர் மற்றும் பிம்ஸ் சேர்மன் எம்.எம்.பிலீப் கூறுகையில், இந்த முயற்சியானது நிறுவனத்தின் எட்டாததை எட்டுதல் என்ற எங்கள் இலக்குடன் ஒத்து போகிறது.

    மக்களுக்கு எளிதாக அணுகக்கூடய மருத்துவ சேவைகளை லாப நோக்கமற்ற முறையில் எங்களது மருத்துவ நிறுவனம் தரும் என்றார்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
    • தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏழை- எளிய மாணவர்களின் நலன்கருதி 50 சதவீத இடஒதுக்கீடு அரசுக்கு அளிக்க முன்வர வேண்டும்.

    கடந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அப்போது இடஒதுக்கீடு பற்றி பேசாதவர்கள் தற்போது பேச காரணம் என்ன? தேர்தல் சமயத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விமர்சிக்கவும் காங்கிரசுக்கு எந்த அருகதையும் இல்லை.

    புதுவையில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள்.

    எனவே ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி பா.ஜனதா சார்பில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற மத்திய அமைச்ச ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது
    • 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு கரசூரில் 100 ஏக்கரில் மருத்துவபூங்கா மற்றும் தொழில்பேட்டை ஏற்படுத்தப்பட உள்ளது.

    முதலீட்டு ஊக்குவிட்டு, வசதி, மத்திய நிதி உதவி திட்டங்களை செயல்படுத்து வது குறித்து ஆலோசனைக்கூட்டம் பிப்டிக் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.

    தொழில்நுட்ப ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தொழிற்சாலைகள் கொண்டு வர வழி காட்டுதல் நெறிமுறைகள் ஏற்படுத்த கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.

    கூட்டத்தில் தொழில் துறை செயலர் ஜவகர், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் பங்கேற்றனர்.

    ×