என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கஞ்சா பொட்டலத்துடன் மும்பை வாலிபர் கைது
- சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைக்கை நடத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- போலீசார் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில்- இடையஞ்சாவடி சாலையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமை யிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட பைக்கை வாலிபர் வேகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைக்கை நடத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் முதுகு பின்னால் வைத்திரு பையில் கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிவம் பிரதாப் குப்தா (வயது 31) என்பதும், புதுச்சேரியில் வந்து பல நாட்கள் இங்கேயே தங்கி இருக்கும் சிவம் பிரதாப் குப்தா நண்பர்களுடன் கஞ்சா புகைப்பதை வழக்க மாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
நேற்று வழக்கம்போல் புதுச்சேரி பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலத்தை வாங்கி பிளாஸ்டிக் கவரில் மடித்து எடுத்து வந்த போது போலீசாரிடம் சிக்கி கொண்டார்.
சிவம் பிரதாப் குப்தாவை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






