என் மலர்
புதுச்சேரி

துருக்கி நாட்டு மாணவர்கள் சுடுமண் சிற்ப பயிற்சி பெற்ற காட்சி.
சுடுமண் சிற்ப பயிற்சி பெறும் துருக்கி நாட்டு மாணவர்கள்
- உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர்.
- நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
டெரகோட்டா எனப் படும் சுடுமண் சிற்பக்கலை புதுவையில் பாரம்பரியக் கலையாக உள்ளது.
இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கணுவாப்பேட்டை கிராமத்தில் தனி பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார்.
துருக்கி நாட்டில் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர்.
இவர்கள் திருச்சிற்றம் பலம் கிராமத்தில் தங்கி அங்குள்ள மாணவர்க ளுடன் 10 நாட்கள் தங்கி புதுவை யின் கல்வி மற்றும் கலாச்சா ரத்தை பயில்கின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரம் பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என ஆர்வத்துடன் பயின்றனர்.
அழிவில் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர் வெளி நாட்டு மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.
மிகுந்த ஆர்வத்துடன் கற்ற மாணவர்கள் தங்க ளது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்கள் பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.






