என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
    • விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடரிக், பள்ளியின் தலைமை ஆசிரி யர் அல்போன்ஸ் கில்டா, முன்னாள் திட்ட அலுவ லர்கள் இளவழகன், மீனாட்சி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆருண் ஆல்பர்ட் இம்மானுவேல் தலைமை யில் தன்னார்வ லர்கள் செய்திருந்தனர்.

    • காங்கிரஸ் கட்சியினரும் மரியாதை செய்தனர்
    • வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா இன்று புதுவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி..ரமேஷ், பாஸ்கர், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி சத்பவனா உறுதிமொழி வாசிக்க மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, வக்கீல் மருது பாண்டியன், ஆர்.இ.சேகர், ரகுமான், இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் மலரஞ்சலி செலுத்த ப்பட்டது.

    • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

    மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

    • தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் சிவா பேட்டி
    • அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசு, தமிழ்நாடு கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

    அது போல் நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது நிலைப்பாடை வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படும் புதுவை கவர்னர் தமிழிசையை கண்டித்தும் புதுவை மாநில தி.மு.க. சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்திய போராட்டத்துக்கு தி.மு.க மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமை வகித்தார்.

    உண்ணாவிரதப் போராட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மருத்துவர் அணி ஆனந்த ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ்.ஆறுமுகம், காந்தி, அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழநி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், மற்றும் தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொய் பிரசாரம்

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை - எளிய மக்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. நாங்கள் குழப்புவது போல ஆளும் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    2024 மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் . அப்போது நீட் தானாகவே ஒழிந்து விடும். புதுவை, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் தடுக்கிறார்.

    இந்த நிலையில் நீட் எதிர்ப்பு என்ற போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம். மருத்துவ படிப்பில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட, தீர்மானத்தை ஒப்புதல் வாங்கியிருக்கலாம்,

    ஆனால் புதிதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என மக்களை ஏமாற்றி வருகி ன்றனர். மாநில முதல்-அமைச்சருக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. அவருக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏழை மாணவர்களுக்கான உரிமைக்காக போராடி வருகிறோம். இது அரசியலுக்கானது அல்ல, மாணவர்களுக்கான அத்தியாவசியமான போராட்டம். நீட் தேர்வு களையப்படும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    • புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.
    • அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.

    கோட்டக்குப்பம் பர்கத் நகரில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

    இதில், கிளைத் தலைவர் சல்மான், கிளை செயலாளர் ஹசன், மற்றும் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், அப்துல் ரகுமான், அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.
    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 76-வது சுதந்திரதின விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கோட்டக்குப்பம் நகராட்சி சின்னகோட்டக் குப்பம் 14-வது வார்டு நகர மன்ற கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்குவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

    இதனை கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜீனத்பிவி முபாரக் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • பா.ஜனதா பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவிக்ரமன் பிறந்த நாள் கீழ்ப்பரிக்கல்பட்டு டி.வி.ஆர். இல்லத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் பாகூர் தொகுதி பா.ஜனதா பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவிக்ரமன் பிறந்த நாள்  கீழ்ப்பரிக்கல்பட்டு டி.வி.ஆர். இல்லத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு தொகுதி தலைவர் கோபா லகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவராமன், புவனசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருணாச்சலம், வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் நாகராஜ், அகிலன்,கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றி செல்வம், பட்டியலணி தலைவர் தமிழ்மாறன், பூண்டி அம்மன் அறங்காவலர் குழு தலைவர் கோவிந்தன்.

    தொகுதி துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் ராதா கிருஷ்ணன், பாபு, குமரன் பண்ணையார், மகளிர் அணி தவமணி, ஏம்பலம் தொகுதி தலைவர் சக்கரவர்த்தி' அரியாங் குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார்' நெட்டப்பாக்கம் தொகுதி தலைவர் துரைசாமி, மணவெளிதொகுதி லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னதாக பாகூர் மூலநாதர் சுவாமி கோவில், மதிகிருஷ்ணபுரம் பட்டாபிராமன் கோவில், கீழ்ப்படிக்கல்பட்டு பூண்டியம்மன் மற்றும் கன்னியகோவில் பச்சை வாழியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடும், 1500ருக்கும் மேற்பட்டவர்க ளுக்கு நபர்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழா முடிவில் முருகன் நன்றி கூறினார்.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்

    புதுச்சேரி:

    வாதானூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற ராஜப்பா கலைக்குழுவின் பொம்மலாட்ட கலைஞர் குப்புசாமியின் குடும்பத்தினர் தலைமுறை தலை முறையாக பாரம்பரிய பொம்மலாட்ட கலை நிகழ்த்தி நடத்தி வருகின்றனர்.

    மகாபாரதம், ராமாயணம், புராண, சமய கதைகள் பொம்மலாட்ட கதை களங்களாகும். இசை, நடனம் மூலம் தோல் பாவை பொம்மைகள் வழியாக கதைகள் பார்வையாள ர்களுக்கு சொல்லப்படும். இதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து தோல்பாவைகளும் வெவ்வேறு கால கட்டத்தை கொண்டது. இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆதரவுடன் பொம்மலாட்ட தோல்பாவை கள் கண்காட்சி புதுவை முருங்கம்பாக்கம் கைவினை கிராமத்தில் ஒரு மாதம் நடக்கிறது. தோல் பாவை பொம்மைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆட்டின் தோலால் செய்யப்பட்டு இயற்கை வண்ணங்களால் வர்ணம் பூசப்பட்டது.

    3 தலைமுறைகளாக உருவாக்கப்பட்ட தோல்பாவைகள்  பொலிவு குறையாமல் காட்சிக்கு வைக்கப்பட்டு ள்ளது.

    ராமாயணம், மகாபாரதம் காட்சியில் வரும் உருவங்கள், கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள் போன்ற பல்வேறுபட்ட தோல்பாவைகள் மிக அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியை வெளிநாட்டவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். இந்திய நாட்டின் அறிய படைப்புகளை வருங்கால தலைமுறைகள் கண்டு மண்ணின் பெருமையை உணர்ந்து பயன் பெறவேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் குறிக்கோளாகும் என முருங்கம்பாக்கம் இந்திரா காந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் கோபால் தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்பு
    • உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து உணவுத் திருவிழாவை டெல்லியில் நடத்தியது.

    கடந்த 18-ந் தேதி தொடங்கி  வரை நடக்கும் உணவு திருவிழா வில் புதுவை அரசு சார்பிலும் உணவு, கைவினை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    உணவு திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் புதுவை சார்பில் காட்சிப்படுத்த ப்பட்டிருந்த பிரெஞ்சு, தமிழ் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.

    புதுவையின் பாரம்பரிய கைவினை, நடன கலைகளையும் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் இணை ஆணையர் ரவிதீப்சிங் சாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியின் மூலம் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • அன்பழகன் தாக்கு
    • முதல்-அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்தை ரங்கசாமியால் பெற முடியாது என்று சவடால் விடுகிறார்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிடாத தி.மு.க.வை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாசிலை பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம், ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணி ஆட்சி இருந்த போது பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து நீட் தேர்வை கொண்டு வந்தனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஒன்றல்ல இரண்டல்ல 3 தலைமுறையினரும் இந்த 10 ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என நாடகம் ஆடி வருகின்றனர்.

    நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்றும், தி.மு.க.வுக்கு வாக்களித்தால் முதல் கையெழுத்தில் நீட் ரத்து செய்யப்படும் என கூறிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் 30 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் கையெழுத்திடவில்லை..? தி.மு.க.வின் பொய்யை நம்பி தமிழகத்தில் ஆண்டு தோறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

    கடந்த பல வருடங்களாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், காங்கிரசும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மக்களை வஞ்சித்தனர். ஆனால் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்தை ரங்கசாமியால் பெற முடியாது என்று சவடால் விடுகிறார்.

    நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு அருகில் உயர் பதவியில் இருந்த நாராயணசாமி ஏன் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை? தலைமுறை தலைமுறையாக ஏமாற்று அரசியலை தி.மு.க.வும், காங்கிரசும் செய்கின்றனர்.

    நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை வெளியிட்டு விட்டு தி.மு.க போராட்ட த்தை நடத்த வேண்டும். தி.மு.க.வின் பொய்யான பசப்பு வார்த்தைகளை மாணவர்கள் நம்பாமல் ஆண்டுதோறும் தங்களை நீட் தேர்வுக்காக தயார்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி,

    பி.எல்.கணேசன், குணசேகரன், நாகமணி, மூர்த்தி, காந்தி, ஜெயசேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன்,

    மேற்கு மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில

    எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பி.எஸ்.சி. அலைடு சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.
    • அக்டோபர் 4-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் பி.ஸ்.சி நர்சிங் 94, பி.எஸ்.சி. அலைடு சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும்.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்ப ங்கள் பெறப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 5-ந் தேதி தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஜிப்மர் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்களின் பட்டியல் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 4-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
    • செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி, ரோடியர்ப் பேட் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏஎ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த னர்.

    இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணி த்துறை அதி காரிகளிடம் உடனடியாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று வலியுறு த்தினார். இதையடுத்து பொதுப்பணித் துறை நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலைப்பொறியாளர் வெங்க டேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×