என் மலர்
புதுச்சேரி
- கடல் நீர் உள்ளே புகுந்து மீனவர்க ளின் படகுகள், வீடுகள் சொத்துகள் பாதிப்படைந்து வருகிறது.
- மீனவ மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி, பெரியக்காலாப்பட்டு, சின்னகாலப்பட்டு மற்றும் கணபதிச்செட்டிகுளம் மீனவ பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்து மீனவர்க ளின் படகுகள், வீடுகள் சொத்துகள் பாதிப்படைந்து வருகிறது.
அடுத்த மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்ய உள்ள கனமழை கடலில் ஏற்படும் புயல் உள்ளிட்ட சீற்றங்களால் மீனவ கிராம பகுதி முற்றிலும் அழியும் நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக புதுச்சேரி அரசும் மத்திய அரசும் மீனவ பகுதியில் தூண்டில் வளைவை அமைத்து மீனவ கிராமங்களை காப்பாற்ற வேண்டுமென மீனவ மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் காலாப்பட்டு சினிமா தியேட்டர் எதிரே 4 கிராம மீனவ மக்களும் இன்று காலை முதல் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மீனவ பஞ்சாயத்து தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து பேசினர்.
போராட்டத்தில் வைத்தி லிங்கம் எம.பி. பேசியதாவது:-
கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி மீனவ பகுதியை பார்வையிட சென்றேன். அங்குள்ள கோயில் வாசல் வரை கடல் நீர் வந்து செல்கிறது.
அந்தப் பகுதியில் இருந்த சுடுகாடு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் பக்கத்து மீனவப் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைச் சாவடி, பெரியக்காலாப் பட்டு, சின்னகாலாப்பட்டு, கணபதி செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க கோரி 2 முறை நாடாளு மன்றத்தில் பேசி உள்ளேன்.
மீனவ பகுதியில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடனடியாக அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். நான் பேசுவதை விட புதுச்சேரி யில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசு சொன்னால் உடனே நிதியை வழங்கு வார்கள். புதுச்சேரி ஆளும் என்.ஆர். காங்கிர சுக்கும் கூட்டணி கட்சியான பா.ஜனதா அரசுக்கும் மீனவர்க ளின் உயிரை காப்பாற்றுவதற்கு அவர்க ளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு அக்கறை இல்லை.
புதுச்சேரிக்குள் கடல் நீர் உள்ளே புகுந்ததால் குடிநீர் உப்பு நீராக மாறி உள்ளது ஆயிரம் அடியில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் உப்பு நீராக தான் உள்ளது. பக்கத்து பகுதியான தமிழக மீனவ பகுதிகளில் கடல் நீரை உள்ளே போகாமல் தடுக்க எப்படியெல்லாம் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்பதை யாவது புதுவை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் கூட வந்து இந்த பகுதியில் ஆய்வு நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மட்டும் வந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்த்து செல்வதால் எந்த பலனும் இல்லை.
4 கிராம மீனவர்களை பாதிப்பில் இருந்து மீட்காவிட்டால் மீனவ சங்கப் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து முறையிட உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
மீனவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வன்னியர் வளர்ச்சி இயக்க தலைவர் செந்தில் கவுண்டர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற மோகன்ராஜ்.
- திருமணம் ஆகாத இவர் பிள்ளையார்திட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற மோகன்ராஜ். திருமணம் ஆகாத இவர் பிள்ளையார்திட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.
மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சிலம்ப கலையில் கை தேர்ந்த இவர் சிலம்ப பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடி பழக்கம் இருந்த நிலை யில் சிலம்ப பயிற்சிக்கும் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சத்திய ராஜ் அதிக குடி போதையில் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அவரது உறவினர்கள் சத்தியராஜை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சத்தியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தாயார் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறுசீரமைக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
- இந்த மசோதாக்கள் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய பா.ஜனதா அரசு கடந்த 12-ந் தேதி 3 சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு முரணான நடவடிக்கை என வக்கீல்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ேமலும் 3 மசோதாக்களும் இந்தியில் பெயரிடப்பட் டுள்ளதால் மத்திய பா.ஜனதா அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்க ளுக்கும், வழக்கு தொடர்ந்தோர் மற்றும் வக்கீல்கள், நீதிபதிகளுக்கு புரியாத மொழியில் சட்டத்தின் பெயரை திணிக்கும் நடவடிக்கை என வக்கீல் கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.
மேலும் 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டும் நடவடிக்கையை கண்டித்தும் இதனை மத்திய பா.ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்ட மைப்பி னர் வலியுறுத்தி வருகி றார்கள்.
இதனை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக இன்று முதல் 31-ந் தேதி வரை கோர்ட்டு முன்பு கட்டண ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி புதுவை கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர் ஆர்.பி.சங்கர் முன்னிலை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பால சுந்தரம், இணை செயலா ளர்கள் ஏ.கே.ஆனந்த், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், பாலமுருகன், சந்தோஷ், தகவல் தொழில்நுட்ப அணியின் புதுவை மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் அசோக்குமார், மூத்த வக்கீல்கள் சுப்பிர மணி, பரிமளம், திருக்கண்ண செல்வம், லெனின்துரை, தாமோதரன், சசிபாலன், ராஜா, பிரகாஷ், சரவணன், தனலட்சுமி, விஜயகுமார், இளையராஜா, வெற்றிவேல், சுரேஷ், பிரவீன், பழனிச்சாமி, செல்வம், வேலு பிரபாகரன், தம்பி வளவன், கார்த்திக்கேயன், அஜ்ய்குமார், ேபபி, தமிழ்செல்வி, வெண்ணிலா, காமாட்சி, விஜயசாந்தி, தமிழ்செல்வி உள்பட பல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
- கல்லூரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. கல்லூரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
துணை தலைவர் பழனிராஜா மாணவ, மாணவிகள் இலக்குடன் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் உதயசூரியன் மாணவ, மாணவிகள் கல்வியோடு ஒழுக்கத் தையும் பயின்று வாழ்வில் மேம்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாண விகளுக்கு ஒரு வார கால இன்ட்ராக்ஷன் நிகழ்ச்சி நடந்தது. தமிழ் துறையை சேர்ந்த சீனு தண்டபாணி நம்மில் மாற்றமே ஏற்றம் என்ற தலைப் பிலும், மென்திறன் பயிற்சி யாளர் பிரிவில் பங்கேற்று ஆளுமை திறனை வளர்த்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
2-ம் நாள் நிகழ்வில், அஸ்கான் டெக்னாலஜி யின் நிறுவனர் கண்ணன் ராஜேந்திரன் மாணவர் கள் திறமைக்கான குறிக் கோளை நிர்ணயிப்பது பற்றியும், ஆங்கிலத்துறை பேராசிரியர் தாஸ் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். 3-ம் நாள் நிகழ்வில் டாக்டர் அனுக் அரக்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழி முறைகள் குறித்தும், டாக் டர் வரதராஜன் தியான பயிற்சி குறித்தும் பேசினர். 4-ம் நாள் நிகழ்வில் எல். எஸ்.இ. குளோபல் அகாடமி யின் நிறுவனர் வெங்கடேஷ் தகவல் தொடர்பு மற்றும் வாழ்க்கை திறன் குறித்து பேசினார்.
சாரதா கங்காதரன் கல்லூரி முன்னாள் மாண வரான யோகா மாஸ்டர் ஸ்வரூப் ரமணன் யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கியத்துடன் அடிப்படை ஆசனங்களையும் செய்து காட்டி, பயிற்சியும் அளித்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
- விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியரும், நல்லாசிரியர் கவிஞர் லோக நாதன் எழுதிய விண்மீன் விளக்குகள், தங்கத் தூறல், விடியட்டும் பொழுது, கொரோனா-2020 ஆகிய 4 நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் வரவேற்று பேசினார். முன்னாள் பள்ளி கல்வி இணை இயக்குனர் சோம சுந்தரம், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் கோ.பாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நூல்களை பேராசிரியர் பஞ்சாங்கம் வெளியிட்டார். அதனை பத்திர எழுத்தர் ராமலிங்கம், இந்தியன் ரெயில்வே பொறியாளர் ஜெயக்குமார், விஜய் ஏஜென்சி உரிமையாளர் விஜயரங்கம், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பிரபு, கற்பக பைனான்ஸ் உரிமை யாளர் கேசவ பெருமாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வக்கீல் கோவிந்தராசு, சீனு வேணுகோபால், மொழியியல் பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் சம்பத் ஆகியோர் நூல்களை ஆய்வு செய்தனர். நூல் ஆசிரியர் கவிஞர் லோக நாதன் ஏற்புரையாற்றினார். மூகாம்பிகை நகர் செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.
- புதுவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
கடந்த வாரம் என்.எல்.சிக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்த விபத்தில் அந்த பஸ்சில் சென்ற என்.எல்.சி. தொழிலாளர்கள் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு நெய்வேலி,கடலூர், புதுவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்கள் புதுவை கனகச்செட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் பாரதிய மஸ்தூர் தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை பாரதிய மஸ்தூர் சங்க புதுவை மாநில செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கோதண்டராமன், தொழிற்சாலை நிர்வாகி சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை என்.எல்.சி. நிர்வாகத்தினர் வந்து பார்க்கவில்லை. மருத்துவ மனையில் சரியான சிகிச்சை அளிக்கப் படாமல் உள்ளது. பலருக்கு இடுப்பு, தோள்பட்டை, கால் பகுதி யில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்க காலம் தாழ்த்தி வருவதாக பாரதிய மஸ்தூர் சங்க புதுவை மாநில செயலாளர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
- ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே தனியார் பேக்கரி உள்ளது.
- 50 சிமெண்ட் மூட்டைகள் வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் சாலை, ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே தனியார் பேக்கரி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேக்கரிக்கு வந்த ஒரு கட்சியினர், உழவர்கரையில் கட்சி அலுவலகம் கட்ட உள்ளதாகவும், அதற்கு 50 சிமெண்ட் மூட்டைகள் வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்றனர்.
சிமெண்ட் மூட்டை வாங்கி தர தாமதம் ஏற்பட்ட தால், கடந்த 12-ந் தேதி கடைக்கு வந்த உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் பேக்கரி ஊழியர் ஆனந்த குமாரை சரமாரியாக தாக்கி கடையை சூறையாடினர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சுப்ரமணியை மட்டும் கைது செய்தனர். மற்ற 7 பேரை இதுவரை கைது செய்ய வில்லை.
வணிகர் கூட்டமைப்பினர் முதல்-அமைச்சர் ரங்கசாமி, போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீனிவாசை சந்தித்து, பேக்கரி கடை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
அதன் பின்னரே போலீ சார் தாக்குதல் நடத்திய கட்சியினரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஸ்கூட்டரில் வந்து இறங்கிய உழவர்கரையைச் சேர்ந்த ஒரு வாலிபர் முன்பு தாக்குதல் நடத்திய பேக்கரி கதவில் பீர்பாட்டிலை அடித்து உடைத்தார்.
கடை வாசலில் இருந்த கண்ணாடி மற்றும் டீ ஸ்டால் டேபிளை உடைத்து விட்டு அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.
இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. பேக்கரி உரிமையாளர் கிஷோர்குமார், ஏற்கனவே நடந்த தாக்குதல் முன்விரோதம் காரணமாக மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என, புகார் அளித்தார். ரெட்டியார் பாளையம் போலீசார் தாக்குதல் நடத்திய மீது சூறையாடுதல், அத்துமீறி நுழைதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே 12-ந்தேதி பேக்கரி கடையை அடித்து உடைத்த வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் 7 பேரை போலீசார் கைது செய்யவில்லை. போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்து பேக்கரி கடையை மிரட்டு வதற்காக கடை மீது 2-வது முறையாக தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பேக்கரி கடையை 2-வது முறையாக தாக்குதல் நடத்திய சம்பவம் காரணமாக, புதுச்சேரியில் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் பாரபட்சமின்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே நடந்தது.
- காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா, பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே நடந்தது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பரிசுகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் பெத்த பெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், பாலன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-
புதுவையில் ரங்கசாமி ஆட்சியில் சாராய ஆறுதான் ஓடுகிறது. என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. ரூ.20 லட்சம் கொடுத்தால் யார் வேண்டு மானாலும் பார் வைக்க உரிமம் பெறலாம். இதுதான் ரங்கசாமியின் ஆட்சி.
பல்வேறு துறைகளில் ஊழல். அமைச்சர்களும் ஊழலை தவிர வேறெதுவும் செய்வதில்லை. புதுவையில் உண்மை யான முதல்-அமைச்சர் தமிழிசைதான். டம்மி முதல்-அமைச்சர் ரங்கசாமி. நிதியில்லாமல் திட்டங்களை அறிவித்து விட்டு மாநிலத்தை குட்டிச்சு வராக்கிவிட்டார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். அதற்கு புதுவையில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி போல சண்டை போடாமல், சமாதானமாக மோடியிடம் எதை வேண்டுமானாலும் வாங்கி வருவேன் என ரங்கசாமி கூறினார். ஆனால் மோடியிடம்கூட அவர் கேட்பதில்லை. கேட்காமலேயே எனக்கு தரவில்லை என சொல்வதில் நியாயமில்லை. அவர்களிடம் கேட்டு கொடுத்து விட்டால் உங்களை விட மக்கள் சந்தோஷப்படுவார்கள்.
புதுவைக்கு தனி அரசு பணியாளர் தேர்வாணையம் வேண்டும். தேர்தல் வாக்குறு தியில் கூறியது என்ன ஆனது? என மத்திய மந்திரியிடம் கேட்டேன். அதை அப்போதே மறந்து விட்டோம் என அவர் கூறியது எனக்கு வேதனை யாக இருந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் மத்தியில் இருப்பவர்களிடம் தேவையானதை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை பஸ் நிலையம் அருகே சுப்பையா நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி
- இவர் லாரி வைத்து டிரான்ஸ்போர்ட்டு தொழில் செய்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை பஸ் நிலையம் அருகே சுப்பையா நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவர் லாரி வைத்து டிரான்ஸ்போர்ட்டு தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சக்ரவர்த்தி அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சக்ரவர்த்தி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ஆடுகளம் பகுதியில் ரோந்து சென்றனர்
- இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாஷா மற்றும் போலீசார் நேற்று இரவு லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ஆடுகளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அந்த வாலிபரிடம் சோதனை நடத்திய போது அவர் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த கத்தியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணயைில் அவர் லாஸ்பேட்டை அசோக்நகர் கவிக்குவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற குமார்(வயது27) என்பதும், இவர் குற்றம் செய்யும் நோக்கில் கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.
- முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கல்வி உரிமை கருத்தரங்கம் பாகூரில் நடைபெற்றது.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாகூர், ஏம்பலம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் மற்றும் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கல்வி உரிமை கருத்தரங்கம் பாகூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர் ஞான.அலோசியஸ் கருத்துரை வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் தலையாரி, முதன்மைச் செயலாளர் பொதினி வளவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தமிழ்மாறன், எழில்மாறன், தமிழ்வளவன் மாசிலாமணி, முற்போக்கு மாணவர் நிர்வாகிகள் சிவச்சந்திரன், ஆதிரை, அனுசியா, விக்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பாகூர் பேட் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை பேராசிரியர் நானாசியஸ் ஏற்றி வைத்தார்.
முடிவில் பாகூர் முகாம் செயலாளர் தலித்பஸ்வான் நன்றி கூறினார்.
- எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
- விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடரிக், பள்ளியின் தலைமை ஆசிரி யர் அல்போன்ஸ் கில்டா, முன்னாள் திட்ட அலுவ லர்கள் இளவழகன், மீனாட்சி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை ஆருண் ஆல்பர்ட் இம்மானுவேல் தலைமை யில் தன்னார்வ லர்கள் செய்திருந்தனர்.






