என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை வக்கீல்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
    X

    புதுவை வக்கீல்கள் கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    புதுவை வக்கீல்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

    • மறுசீரமைக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
    • இந்த மசோதாக்கள் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த 12-ந் தேதி 3 சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு முரணான நடவடிக்கை என வக்கீல்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    ேமலும் 3 மசோதாக்களும் இந்தியில் பெயரிடப்பட் டுள்ளதால் மத்திய பா.ஜனதா அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்க ளுக்கும், வழக்கு தொடர்ந்தோர் மற்றும் வக்கீல்கள், நீதிபதிகளுக்கு புரியாத மொழியில் சட்டத்தின் பெயரை திணிக்கும் நடவடிக்கை என வக்கீல் கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

    மேலும் 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டும் நடவடிக்கையை கண்டித்தும் இதனை மத்திய பா.ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்ட மைப்பி னர் வலியுறுத்தி வருகி றார்கள்.

    இதனை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக இன்று முதல் 31-ந் தேதி வரை கோர்ட்டு முன்பு கட்டண ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி புதுவை கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர் ஆர்.பி.சங்கர் முன்னிலை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பால சுந்தரம், இணை செயலா ளர்கள் ஏ.கே.ஆனந்த், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், பாலமுருகன், சந்தோஷ், தகவல் தொழில்நுட்ப அணியின் புதுவை மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் அசோக்குமார், மூத்த வக்கீல்கள் சுப்பிர மணி, பரிமளம், திருக்கண்ண செல்வம், லெனின்துரை, தாமோதரன், சசிபாலன், ராஜா, பிரகாஷ், சரவணன், தனலட்சுமி, விஜயகுமார், இளையராஜா, வெற்றிவேல், சுரேஷ், பிரவீன், பழனிச்சாமி, செல்வம், வேலு பிரபாகரன், தம்பி வளவன், கார்த்திக்கேயன், அஜ்ய்குமார், ேபபி, தமிழ்செல்வி, வெண்ணிலா, காமாட்சி, விஜயசாந்தி, தமிழ்செல்வி உள்பட பல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×