என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tigers Party"

    • முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கல்வி உரிமை கருத்தரங்கம் பாகூரில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாகூர், ஏம்பலம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் மற்றும் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் கல்வி உரிமை கருத்தரங்கம் பாகூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர் ஞான.அலோசியஸ் கருத்துரை வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் தலையாரி, முதன்மைச் செயலாளர் பொதினி வளவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தமிழ்மாறன், எழில்மாறன், தமிழ்வளவன் மாசிலாமணி, முற்போக்கு மாணவர் நிர்வாகிகள் சிவச்சந்திரன், ஆதிரை, அனுசியா, விக்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பாகூர் பேட் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை பேராசிரியர் நானாசியஸ் ஏற்றி வைத்தார்.

    முடிவில் பாகூர் முகாம் செயலாளர் தலித்பஸ்வான் நன்றி கூறினார்.

    ×