என் மலர்
புதுச்சேரி
- பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
- ரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்
புதுச்சேரி:
பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாராயக் கடையில் இருந்த போது அவருக்கும் பாகூர் மூலநாத நகரை சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அங்கி ருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பிரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித் குமார் என்னிடமே தகராறு செய்கிறாயா? எனக் கூறி அங்கு கிடந்த கல்லை எடுத்து பிரவீன் குமாரை தாக்க முயன்றார்.
ஆனால் பிரவீன்குமார் கீழே குனிந்து கொண்டதால் அந்த தாக்குதலில் இருந்து தப்பினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அஜித் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமாரின் முதுகில் குத்தினார்.
மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அஜித் குமார் தப்பியோடி விட்டார். இந்த கத்தி குத்தில் காயமடைந்த பிரவீன் குமார் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
- பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.
இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.
எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.
மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.
பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.
எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியார்பேட்டில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மதில் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆங் காங்கே விரிசல் விட்டு உடைந்த நிலையில் இருந்தது.
இதனை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பார்வையிட்ட எம்.எல்.ஏ., உடனே பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற் கும், நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று கோரிக்கை வைத்தார். பின்னர் அதிகாரிகளை அழைத்து ஏ.எப்.டி மைதானத்தை ஆய்வு மேற்கொண் டார்.
அப்போது சுற்றுமதில் சுவர்களை சீரமைத்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக கட்டிதர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து மதில் சுவரை விரைவில் சீர மைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர், ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சாம்பசிவம், தி.மு.க. அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ராஜி, மாணவர் அணி நிசார், மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் ஆறுமுகம், மாயவன், ராகேஷ், நிர்வாகிகள் ரகுராமன், பஸ்கள், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.
- உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நல்வாழ்வு சங்கங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சியில் பூங்கா, குளங்கள், பொது கழிப்பறைகளை பராமரித்தல் போன்ற நலப்பணிகளுக்கு தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள், தொழில் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நல்வாழ்வு சங்கங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
இவற்றை பராமரிக்கும் உபகரணங்கள், பராமரிப்பாளர்களின் உதவித் தொகை ஆகியவற்றை தாங்களாக செய்யலாம். பொதுநலப்பணியில் பங்கேற்க விரும்புவோர் உழவர்கரை நகராட்சி தொலை பேசி எண் 0413 2201142, செயற்பொறியாளர் எண் 94433 71672, நகராட்சி சுகாதார அதிகாரி 94439 60447 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடலூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சேவை பணி செய்து வருபவர்களை பாராட்டி விருது வழங்கியது.
- டாக்டர் பானுபிரியா ஆகியோரை பாராட்டி கடலூர் ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.
புதுச்சேரி:
கடலூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சேவை பணி செய்து வருபவர்களை பாராட்டி விருது வழங்கியது. கடந்த 31 ஆண்டுகளாக தன்னலமற்ற மருத்துவ சேவை, இலவச மருத்துவ முகாம், இலவச மூலிகை தொழிற்பயிற்சி, சிறு-குறு தானியங்கள் குறித்த ஆய்வுகள், உயர் நிலை, மேனிலை பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வரும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக் டர் ரவி, இணை சேர்மன் கள் டாக்டர் உஷாரவி, டாக்டர் பானுபிரியா ஆகியோரை பாராட்டி கடலூர் ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.
இதில் டாக்டர் ரவிக்கு பாரம்பரிய மருத்துவ மேதை, பேராசிரியை டாக்டர் உஷாரவிக்கு பாரம்பரிய மருத்துவ சிகரம், டாக்டர் பானு பிரியாவுக்கு பாரம்பரிய மருத்துவதிலகம் என்ற விருதை வழங்கி கவுரவப் படுத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் ஆய்வாளருமான அறிவு மதி கலந்துகொண்டார்.
சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் ராஜவேல், பொருளாளர் ஏழுமலை, ஆலோசகர் வக்கீல் அருணாசலம், உதவி ஆளுநர் சுரேஷ்பாபு மற்றும் சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கட லூர் மாவட்டத்தின் பிற சங்கங்களை சேர்ந்தவர் கள் கலந்துகொண்டனர். பொருளாளர் நன்றி கூறி னார்.
- ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் குடிநீர் பிரிவு ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (23-ந் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆரிய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.
- ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரியில் தேசிய அள விலான கருத்தரங்கம் நடந்தது.
தலைமை விருந்தின ராக மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற் றும் மருத்துவமனையின் ஆராய்ச்சி புல முதல்வர் டாக்டர்.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவ னத்தலைவரும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர்.நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் அகாடமிக் கார்த் திகேயன், மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். செவிலியர் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வி வரவேற்றார்.
இக்கருத்தரங்கில் பேச்சாளராக அருள்மொழிபாஸ்கரன், வெற்றிச்செல்வி, ஜெய சங்கரி, மரியா தேரேஸ், சுமதி, அனிதா டேவிட், செவ்வந்தி, தமிழ்செல்வி, திருநாகலிங்கபாண்டியன் மற்றும் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். நிமிட செயலாளரின் அறிக்கையை துணை பேராசிரியர் தீபாலட்சுமி வழங்கினார்.
பங்கேற்பாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
- 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி:
புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எழுத்து தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்து காப்பீடு வழிகாட்டு நெறிமுறை குறித்த பயிற்சி முகாம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.
- சீனியர் எஸ்.பி நாராசைதன்யா, எஸ்.பி.க்கள் மாறன், மோகன்குமார், ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து போலீசாருக்கு விபத்து காப்பீடு வழிகாட்டு நெறிமுறை குறித்த பயிற்சி முகாம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.
டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். நீதிபதி முரளிகிருஷ்ணாஆனந்த், அரசு வக்கீல் அருண், சீனியர் எஸ்.பி நாராசைதன்யா, எஸ்.பி.க்கள் மாறன், மோகன்குமார், ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி விபத்தில் காயமடைந்தவர்கள், இறந்தவர்கள் காப்பீடு பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- அதன் செடல் திருவிழா நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் செடல் திருவிழா நடந்தது. இதில் அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, கலியமூர்த்தி, சந்தோஷ், சிவலிங்கம், கணபதி, சிவக்குமார், முருகன், உறுப்பினர்கள் தவச்செல்வம், வேணு, ரவீந்திரன், ஐயனார், விஜயன் என்ற விஜி, மகிமை மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் வரவேற்றனர். பின்னர் லாவண்யாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளித்தனர்.
நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் லூர்துசாமி, மோகன், பாலா, விஜயன், கணேஷ் சரவணன், கோபி, சுந்தரமூர்த்தி, சபா, சரளா, சந்திரா, உமா, அமலர்சந்திரா, விஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி
- வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த குமார் குடும்பத்தினருக்கும் வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.
சம்பவத்தன்று பானுமதி அக்பர் நகரில் உள்ள குமரேசன் என்பவர் வீட்டின் எதிரே நடந்து சென்றார். அப்போது பானுமதியை வழிமறித்து குமார், இவரது மகன் தினேஷ், மாரிமுத்து மகன் பிரேம், குமார் மனைவி ரஞ்சிதம் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்கள் பானுமதியை கையாளும் இரும்பு பைப்பாலும் தாக்கினர். இது குறித்து பானுமதி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் பானுமதியை தாக்கிய தினேஷ், குமார், பிரேம், ரஞ்சிதம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தனியார் ஒட்டலில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
- பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுக்கு காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஒட்டலில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமுக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமை உள்துறை அமைச்சரும், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது, பா.ஜனதா நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயிற்சி முகாமில் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணை தலைவர்கள் தங்க.விக்ரமன், செல்வம், ரவிச்சந்திரன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், நளினி கணேஷ், மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.






